Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/22/2011

தமிழர்களை கேவலப்படுத்துவதா?


தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாடு பழக்க வழக்கங்கள் மிக சிறப்பானவை என்பது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. 

தெய்வத்தன்மையுடன் வாழ்ந்த மனித தெய்வங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் அவதரித்து வந்துள்ளனர் என்பதும் உலகறிந்த விஷயம். உலக நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானது தமிழ் நாகரிகம் என்பது, மறுக்க முடியாத உண்மை. 

அப்படிப்பட்ட தமிழ் கலாசாரத்தின் வழி வந்த நம் பள்ளிக் குழந்தைகள், கீழ்கண்டவாறு பாடம் படித்தால், நம் கலாசாரத்தையும், நம் முன்னோர்களின் மனிதத் தன்மையையும் எவ்வாறு புரிந்து கொள்வர் என்பதை, உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்...

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின், 21ம் பக்கத்தில், 39 முதல், 45 வரை உள்ள வரிகள்... 'கன்பூசியசிசம், கிறிஸ்துவம் மற்றும் புத்தம் ஆகியவை, மனித நாகரிக வரலாற்றில் மனிதன் இயல்பாக இருந்த கொடூர தன்மையை ஒரு மேம்பட்ட நோக்கத்தை நோக்கி மாற்றுவதற்கான உணர்வுப் பூர்வமான முயற்சிகளாக விளக்குகின்றன!'மேற்கண்ட வரிகள், நம் தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வரிகளா அல்லது இழிவான வரிகளா? 

கன்பூசியஸ், கிறிஸ்து, புத்தம் ஆகிய சமயங்கள் தான் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றியதா? மக்களிடம் மனிதத் தன்மையை வளர்த்ததா?- மேலும், அதே பக்கத்தில், தமிழர்களாகிய நாம் முதலில் சூரியன், மழை, நிலம், காற்று, நெருப்பு போன்ற இயற்கையை தெய்வங்களாக வழிபட்டோம். பிறகு நம் முன்னோர்களை தெய்வமாக வழிபட்டோம். 

இப்படியாக நாம் பலரும் நம் முன்னோர்களை அவரவர் குலத்திற்கு குலதெய்வமாக வழிபட்டு, நமக்கு பல தெய்வ வழிபாடு உண்டு என்பதையும் நாம் அறிவோம்... என்றுள்ளது.

மேலும், இதே பக்கத்தில் இரண்டாம் பத்தியில், 15வது வரியில், 'பல தெய்வ வழிபாடு மற்றும் மூட நம்பிக்கை சடங்குகள் போன்றவை, சமூக ஒற்றுமையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், வாழ்வியல் ஒழுக்கங்களையும் மேம் படாமல் தடுத்து சீரழித்து வந்தன' என்று உள்ளது.

அப்படியெனில், தமிழர்களுடைய பல தெய்வ வழிபாட்டு முறையால் தான் சமுதாயத்தில் ஒழுக்கங்கள் சீரழிந்ததா? 

தமிழன் தான் சமுதாய சீரழிவுக்கு காரணமா? 

வேறு ஒருவரை உதாரணம் காட்டி, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையும் ஏன் கேவலப்படுத்துகின்றனர்?

சிந்திப்போம் உறவுகளே? 


36 comments:

  1. இனிய காலை வணக்கம் பாஸ்.

    ReplyDelete
  2. கொஞ்சம் இடக்கு முடக்கான விடயத்தினைத் தந்திருக்கிறீங்க.

    வரலாற்றினைத் தொகுத்தவர்கள் - மேற்படி பாட நூலினை எழுதியோர் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எழுதியிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  3. தமிழ் மணத்திற்கு அப்புறமா வாரேன்.

    ReplyDelete
  4. அவசியமான பதிவு. சிந்தித்தால் சரி

    ReplyDelete
  5. அதனால... என்ன சொல்ல வரீங்க ? .

    ReplyDelete
  6. இதுக்கு கருணாநிதிதான் பதில் சொல்லணும்

    ReplyDelete
  7. மாப்ள கேள்விகள் அருமை...பதில் கிடைத்தால் பெருமை!

    ReplyDelete
  8. மூடர்களால் தயாரிக்கப்பட்டவை வேறு எப்படி இருக்கும்.

    ReplyDelete
  9. சபாஷ் சரியான கேள்வி.... வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  10. என்னமோ நாடாண்டால், என்னேன்னமோ நடக்குமாம்....

    ReplyDelete
  11. சிந்தனையைத் தூண்டும் பதிவு

    ReplyDelete
  12. கோப படாதீங்க வாத்தியாரே

    ReplyDelete
  13. கேள்விகள் எல்லாம் சரியான சாட்டை அடிதான் பதில் யாரு தரப்போராங்க?

    ReplyDelete
  14. உலக நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானது தமிழ் நாகரிகம் என்பது, மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  15. வரலாறு வேறொருவரின் பார்வையில் - வேறோறொரு அணுகுமுறையோடு எழுதப் படுகிறது. என்ன செய்வது?

    ReplyDelete
  16. இதிலென்ன வியப்பு?

    இறை நம்பிக்கை இருப்பவன் சுயமரியாதையற்றவன் என்ற பரப்புரையை நிகழ்த்துகிற தமிழக அரசியல்வாதிகளின் ஆசிபெற்ற கல்வித்திட்டத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

    ReplyDelete
  17. இப் பாடத்திட்டங்கள் யாவும் வெகு வேகமாக தயாரிக்கப்பட்டவை, இப்படித்தான் இருக்கும். . .

    ReplyDelete
  18. தமிழனின் மூட பழக்க வழக்கங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்பது உண்மையே...

    ReplyDelete
  19. அவசியமான பதிவு.இதை சிந்திக்க வேண்டும்

    ReplyDelete
  20. என்ன கொடுமை இது ...
    இதை கேட்க நாதி இல்லையா ..

    ReplyDelete
  21. மாணவப் பருவத்தில் மனதில் பதிவது என்றும் மாறாது. தவறுகளைத் திருந்திய பாடங்கள் தர வேண்டியது நம் கடமை. சங்கை ஊதி விட்டீர்கள் கேட்க வேண்டியவர்கள் செவிகளில் விழுந்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  22. இப்பிடி பெருமை பேசுறதும் தமிழன்தான், ஒற்றுமை இல்லாமல் இருப்பதும் தமிழன்தான், காட்டிக்கொடுக்குறதும் தமிழன்தான் வேற என்னத்தை சொல்ல...

    ReplyDelete
  23. கருண் சார் கொஞ்சம் கோவப்படாதீங்க நான் கீழே கொஞ்சம் விஷயம் சொல்லுறேன் தப்பா தோணிச்சுன்னா delete பண்ணிடுங்க..

    நம்முடைய வரலாறு கொஞ்சம் கரடு முரடு தான் அதில் சந்தேகம் இல்லை. இது ஆரியர்களின் ஊடுருவல் அப்பிடிங்கிற காலத்தில் இருந்து பார்க்க வேண்டியது..

    வேத காலம் என்று சொல்லப்படும் வரலாறு சுமார் 2000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முந்தியது, ஆரியர்கள் இந்தியாக்குல வர்றாங்க,(migration) வந்தது பூராவும் ஆண்கள் ஏன்னா அவங்க இமய மலையை தாண்டி வந்தவங்க பெண்களை அழைத்து வராததற்கு இதுவும் ஒரு காரணம். அவர்கள் சமூகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை. அப்போதே உயரிய பண்பாட்டை கொண்ட இங்கிருந்தவர்களை (பல்வேறு இனக்குழுக்கள் அப்போது இந்தியாவில் இருந்தது) தங்களுடைய ஆளுமைக்குள் (என்ன சூழ்ச்சி பண்ணாங்களோ!!) கொண்டு வந்து அவர்களுடைய சாத்திரங்களை சட்டங்களை இங்கே பரப்ப ஆரம்பிச்சாங்க!! அது தான் மனுதர்மம், இன்னைக்கும் இதை சிறந்தது என்று சொல்பவர்களும் உண்டு, இங்கிருந்தவர்களை தாழ்ந்தவர் என்றும் அவர்கள் எல்லோரும் உயர் ஜாதி என்றும் பிரித்து சட்ட திட்டங்களை வகுத்தனர். புத்த மதம் கூட அந்த தவறான கொள்கைகளில் இருந்து மக்களை காக்கவே உருவாக்கப்பட்டது..
    ஆனா அது 19 ஆம் நூற்றாண்டு வரை சாத்தியப்படவில்லை
    அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு மதங்களில் தங்களை இணைத்துக்கொண்டார்கள் என்பது வரலாறு.. அதில் எல்லா மற்ற மதங்களும் அடங்கும்.
    பெண்கள் ஒரு குழந்தை பெரும் இயந்திரம் மற்றும் ஆணுக்கான போகப்பொருளாகவே பார்க்கப்பட்டாள்.. பல்வேறு அரசர்கள் கூட சீர்திருத்த சட்டங்களை இயற்றியும் இதை மாற்ற முடிய வில்லை, முடிந்தால் ஹைதர் அலி / திப்பு சுல்தான் வரலாற்றை சற்று உற்று நோக்கினால் தெரிய வரும். மேலாடை இல்லாமல் மக்கள் வாழ்ந்தகாலம் 1900 களிலும் இருந்தது தானே.. இன்றும் சாதீய வெறி அவ்வப்போது வெடிப்பதும் கண்கூடு தானே..

    ReplyDelete
  24. இந்த ஆட்சியிலே மாத்திடுவோம்....

    ReplyDelete
  25. சிறுபான்மையினரின் காவலனா (காட்ட) இருக்கதான் எல்லா அரசியல்வாதியும் விரும்பாறான் கருணாநிதி மட்டும் விதிவிலாக்கா...பல தெய்வ வழிபாடு உள்ளவங்க என் கட்சியில வேண்டாம் என்று கருணாநிதி மற்றும் ஜெயா நெஞ்சுல உரம் தைரியம் இருந்தா சொல்லட்டும் மக்கா உங்க கடையில "ஈ" தான் ஓட்டனும் இந்தியாவுல மட்டும் தான் இது போல நடக்கும் பெருமான்மை மக்களை கேவலமாக பேசவும் எழுதவும் முடியும் அதுவும் பாட புத்தகத்துல என்னத்த சொல்லறது...

    ReplyDelete
  26. இப்படி தப்பான கருத்துக்களை பரப்புறது சரியில்லை. நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  27. இதற்காகத்தான் அம்மா இந்த 'சமச்சீர் கல்வித் திட்டத்தை' தடை செய்ய நினைத்தார்களோ என்னவோ?

    ReplyDelete
  28. இந்த பதிவில ஒருத்தர் மைனஸ் ஓட்டு போட்டுட்டு போடுறார்ன்னா இப்பிடியானவர்களின் ஆதரவு இருக்கும்வரை ஒன்றும் செய்ய முடியாது... பாடபுத்தகத்திலேயே தன்புகழ் பாடிய தலைவரை வைச்சிருந்தோமே அப்ப இப்பிடித்தான்யா இருக்கும்....!!

    ReplyDelete
  29. வரலாறு மிக முக்கிய அமைச்சரே ..........

    ReplyDelete
  30. அன்புநிறை நண்பர் கருன்
    ஒரு பெரிய விவாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள்.
    நண்பர் ஜா.ரா.ரமேஷ்பாபு சொன்னதுபோல உயர்சாதிக்காரர்களின்
    உள்நாட்டு விளையாட்டை கண்டு மனம் பொறுக்க முடியாமல்
    மாதங்கள் பல உருவாகின அதில் மக்களும் இணைந்தனர்.
    கிறிஸ்துவம் இங்கு உருவாக்கப் பட்டது அல்ல. ஆனாலும் ஒரு காலகட்டத்தில்
    கிராமம் கிராமமாக மக்கள் மதம் மாறினார்கள்.

    ஆனாலும் பகுத்தறிவுப் பகலவன்கள் வந்த பிறகு இந்த மேல்சாதிப் பிரச்சனை கொஞ்சம் அடங்கியது.
    அடித்தட்டு மக்களின் பேச்சுகள் சபையில் எடுபட வில்லை எனினும் அதை கேட்பதற்கு சிலர் மனமுவந்து வந்தார்கள்.
    அந்த வழி வந்தவர்கள் இரண்டு மூன்று மனைவிகள் கட்டி நம் கலாச்சாரத்தை பாழ்படுத்த வில்லையா?
    அவர்களால் இந்த சமுதாயம் கேட்டுப் போகவில்லையா?


    இங்கே தமிழர்களை தமிழ் கலாச்சாரத்தை பாடபுத்தகங்கள் சாடவேண்டிய காரணமென்ன?
    பாட புத்தகம் பதிவேற்றியவர்கள் அயல்நாட்டில் போய் படித்தவர்களா?
    இங்கே அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் தாமே?
    ஏனிந்த பாகுபாடு?

    தமிழர்களையும் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் பாழ்படுத்த கேவலப்படுத்த முனைவோர்களை முளையிலே கிள்ளி எறிவோம்.

    ReplyDelete
  31. உலகில் வேறெந்த நாட்டையும் அறிவு என்பது தன இருப்பிடமாகக் கொள்ளுமுன் குடிபுகுந்த தாயகம் நமது புராதன பாரதம். கடல் போல் பொங்கிப் புரண்டோடுகின்ற பெராருகளும், அடுக்கடுக்காய் உயர்ந்தெழுந்த சிகரங்கள் மீது பணிமுடி தரித்து, எதோ வானுலக ரகசியங்களை எட்டிப் பார்க்க விழைவது போல் விண்முட்ட நிற்கின்ற நிலையான இமயமலைத் தொடர்களும் அதன் ஆன்மீக மாட்சிமையைப் புரத்திக் காட்டுவது போல் உள்ளது. இதுவரை வாழ்ந்தவர்களுள் மகத்தான ரிஷிகளின் திருப்பாதங்கள் இதோ இந்தப் பாரத மண்ணில் தான் நடை போட்டன.. மனிதனின் இயல்பு பற்றியும், அகஉலகு பற்றியும் இங்கு தான் முதன் முதலில் ஆராய்சிகள் தொடங்கின. ஆன்மாவின் அமரத்துவம், அனைத்தையும் ஆட்சி புரிகின்றக் கடவுள் எங்கும் பரவி அனைத்து உயிர்களிலும் ஊடுரு நிற்கின்ற கோட்பாடுகள் இங்கு தான் முதலில் எழுந்தன...

    வேதாந்த காலம்.. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது... வேதம் அதற்கும் முந்தியது... ஆக, வேதம் பலரும் படைத்து இருக்கிறார்கள் அதில் பெண்களும் அடங்கும்... வேதாந்தம் பெரும்பாலும் (சிலவைகளைத் தவிர) சத்திரியர்கள் தாம் படைத்திருக்கிறார்கள்.. ராமர், கிருஷ்ணர், விஷ்வாமித்திரர் அந்த வரிசையில் புத்தரும்.. அரசரே.. சத்திரியரே... இவர்கள் யாவரும் இந்துக்களே!

    இருபத்து ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தியது.. புத்த மதம்... இந்து மதத்தில் பலபிரிவுகள்.. அதில் இதவும் ஓன்று.. தாய் மதத்தில் அத்தனையும் அடக்கம்.. இதில் சாதி வேறுபாடு இல்லை அதனாலே இது பலரும் பெரிதாக விரும்புகிறார்கள்.. அதோடு புத்தர் கூறிய கோட்பாடுகள் இல்லை இப்போது புத்த மதத்திலே... புத்த மதம்.. பொய்யாகவும்.. மடத்தனமாகவும்.. வேள்வி செய்வதாகக் கூறி பல உயிர்களையும் அக்னியில் பலியிட்ட அந்தக் காலத்தின் தேவை.. அதுவும் அந்தப் பரம் பொருளின் ஏற்பாடே! புத்தரும் ஒரு இந்துவே என்பதை மனதில் கொள்வோம்... இப்போதைய புத்த மதம் நிறுவனமாக செயல் படுகிறது.. கிறித்துவம் கூட அதுபோன்ற ஒரு அமைப்பே!

    கன்பூசியஸ், சீனரால் பிறந்தது... அப்படிப் பார்த்தால் நமது சித்தர் போகர்கூட சீனரே! ஏசு கிறிஸ்து அவரின் பதினான்கு வயதில் இருந்து இருபத்தொன்பது வயது வரை இமயமலையில் நமது ரிஷிமார்களோடு இருந்து சென்றிருக்கிறார்...

    ReplyDelete
  32. இது இப்படி இருக்க.."அறிவாளிகள், அறிவிலிகளைப் பழிக்கக் கூடாது. அவர்களின் நம்பிக்கையைக் குலைக்கக் கூடாது, ஆனால் தாங்கள் செயல்மூலம் அவர்களுக்கு உகந்த பாதையைக் காட்டி தாங்கள் இருக்கின்ற இடத்தை அடையச் செய்யலாம்" (கீதை) அதே கீதையிலே யாரை வணங்கினாலும் வேறு பல மார்க்கங்களை நம்பி அவர்கள் யாரை வணங்கிநானும் அவர்கள் என்னை தான் வணங்குவதாக கொள்கிறேன் என்கிறான் கிருஷ்ணன்.

    இது மதம் பெருங்கடல் இது அரு பெரும் பிரிவுகள் கொண்டாலும் இவைகளை விழுதுகளாக கொண்ட பெரும் ஆலமரம் இந்து மதம்.. உலகில் உள்ள எந்த மதமும் இதுனுள்ளே அடக்கம்.. எந்த சக்தியும் அதை ஒருக்காலும் அழிக்க முடியாது.. அது மட்டும் தான் தானாக வளர்கிறது... அதே நேரம் இதிலே தமிழின் பங்கு தமிழனின் பங்கு என்ன வென்றால்.. நிறைய உண்டு...

    வேதம் பிறந்தது வடக்கே என்றாலும் அதுக்கு விளக்கம் படைத்த சங்கரரும் ராமானுஜரும் பிறந்தது நமது தென்னாடு.. அதோடு மாத்திரமா.. அது திருக்குறளாக இருக்கட்டும்...திருவாசகமாக இருக்கட்டும்.. தாய்மானவரும் வள்ளலாரும், நாயன் மார்கள், ஆழ்வார்கள் என்று யாராயினும் கடைசியாக பாரதி வரை அனைவரும் பாடி அமரத்துவம் பெற்றது அந்த வேதாந்தக் கருத்துக்களைத் தான்...

    தங்களின் வருத்தம் தெரிகிறது.. சிறு தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இன்னும் பல , சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் பக்தி மார்கத்தின் அடிப்படைப் பாடம் போன்றது... அது அவசியம் அதே சமயம் அதிலே ஆயுள் முழுவது இருக்க வேண்டாம்.. அதை தேறியவர்கள் அடுத்தப் படிக்கு முன்னேறுங்கள்.. நாம் ஒவ்வொருவரும் அமரத்துவம் பெற தான் பிறக்கிறோம்.. அந்த நிலையை தான் முன்பு பார்த்த பெரியவர்கள் யாவரும்.. செய்து முக்தி அடைந்தார்கள்.. அதுக்கு காவி வேண்டாம்.. காடும் போகவேண்டாம்.. காந்தியைப் போல் காமராசரைப் போல்.. இன்னும் பல நல்ல சமூக வாதிகளைப் போல் இருக்க கூட வேண்டாம்.. தான், தனது குடும்பம் இவைகளை ஒவ்வொருவரும் உண்மையாக நேசித்து சத்தியத்தோடு கடமையை செய்து வந்தாலே அதுவே சரியான வழிதான் என்கிறது இந்து மதம்... ஆக, கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார். அவர் எப்படிப் பட்டவர்? மனிதனின் கடமைகள் என்ன இப்படி பல கேள்விகளுக்கு நமக்கு முதலில் பதில் தெரிய வேண்டும்.. அதோடு பக்தி வழிபாடு என்று சொல்லி ஆண்டவைடம் லஞ்சம் கொடுப்பது, கமிஷன் பேசுவது இவைகளை இந்து மதம் ஒருக்காலும் செய்யச் சொல்லவில்லை.. இவைகளை எல்லாம் நன்கு வரும் சந்ததிகள் தெரிந்துக் கொள்ளவேண்டும்..

    இவைகள் எல்லாம் அந்தப் பாடத்தில் இருக்கிறதா? என்று தெரியவில்லை.. இல்லை என்றால் அதற்காக வருந்துகிறேன்.. உண்மையை காழ்புணர்வு இல்லாமல்... வரட்டுத் தனம் இல்லாமல் புரிந்துக் கொண்டு தேவையையும் சரியாக புரிந்து அதை வரும் சந்ததியருக்கு கொடுக்கவேந்தியக் கடமை ஆளும் அரசாங்கத்திற்கு உண்டு அதற்கு படித்த அதிகாரிகள் தான் எடுத்து கூறி தெளிவுப் படுத்தனும்..

    நம் வழக்கத்தில் இருக்கும் வழிபாடுகள் எல்லாம் பாலர் பள்ளிப் பாடமே.... அனுபூதிக்கு அது சிறிது தான் உதவும்.. அதற்கு மேல் தன்னுள் ருக்கும் கடவுளை உணர வேண்டும்.. அது தியானத்தால் தான் முடியும்.. அதை பள்ளியில் தரவேண்டும்.. அதை பற்றியும் பதிவில் எழுதுங்கள்.. இவைகள் நான் படித்து அறிந்தவைகள் தாம் எனது சொந்த சரக்கு இல்லை.. எழுத்துப் பிழை சரி செய்யவில்லை.. பொறுத்துக் கொள்ளுங்கள்...

    நன்றி... மேல் கூறிய வற்றைப் பற்றி விரும்பினால் நான் கிருக்கியப் பக்கத்திற்கு வந்து படித்து செல்லுங்கள்... நன்றிகள் வணக்கம்.

    ReplyDelete
  33. பாஸ்..

    தமிழ் மணம் ஓட்டுப் போட்டாச்சு..

    இது பின்னூட்டம் அல்ல.
    வெளியிட வேணாம்.

    ReplyDelete
  34. சேட்டை அண்ணன்
    கருத்தை முன்மொழிகிறேன்.

    ReplyDelete
  35. //மேலும், இதே பக்கத்தில் இரண்டாம் பத்தியில், 15வது வரியில், 'பல தெய்வ வழிபாடு மற்றும் மூட நம்பிக்கை சடங்குகள் போன்றவை, சமூக ஒற்றுமையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், வாழ்வியல் ஒழுக்கங்களையும் மேம் படாமல் தடுத்து சீரழித்து வந்தன' என்று உள்ளது.

    அப்படியெனில், தமிழர்களுடைய பல தெய்வ வழிபாட்டு முறையால் தான் சமுதாயத்தில் ஒழுக்கங்கள் சீரழிந்ததா?//

    நிச்சயமாக..பலதெய்வ நம்பிக்கை எனபது ஒரு சமுதாய வழிகேடுதான் சீர்கேடுதான்..

    இது உங்களுக்கு ஏன் விளங்கவில்லை?

    //கன்பூசியஸ், கிறிஸ்து, புத்தம் ஆகிய சமயங்கள் தான் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றியதா?// அது என்ன கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றியது? இவைகள் தோன்றுவதற்கு முன் என்ன இருக்கும்? யார் இருந்திருப்பார்கள்? இது ஒன்று இதுவும் ஒரு மூட நம்பிக்கைதான்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"