Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/17/2011

அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!



முகப்புத்தகத்தில் கலக்கியவை ..
**********************************************************************************
அப்பா ; உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..


மகள் ; அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?


அப்பா ; பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!


**********************************************************************************


ப.வீ.காரர் ; மிஸ்டர் மொக்கை.. உங்ககிட்ட இருக்கற ரயில்வே
கைடு கொஞ்சம் கொடுங்களேன்.. கும்பகோணத்திலிருந்து
சென்னை எவ்வளவு தூரம்ன்னு பார்த்துட்டு தரேன்..


மொக்ஸ் ; அடடே.. அது பழைய கைடாச்சே.. இப்போ எல்லாம்
மாறிப் போயிருக்குமே..!


**********************************************************************************


சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்ப்ர்..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!


அப்படியா..? என்ன அது கடைசி வரி.. ?


அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!


**********************************************************************************


காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..?


காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!


**********************************************************************************


என்ன மொக்கை சார்.. டூத் பேஸ்டை தலையில்
தேய்ச்சுகிட்டு இருக்கீங்க..?


ஈறு உபாதைக்கு சிறந்ததுன்னு போட்டிருக்குதே.. எனக்கு தலை
பூரா ஈரும் பேனுமா இருக்கு..!


**********************************************************************************


நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை
எங்கேயோ படிச்சது போல இருக்கே..?


மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?


நண்பர் ; தெரியாதே சார்..


மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
படிச்சிருக்கவே முடியாது..!


**********************************************************************************


டாக்டருக்கு இதுதான் முதல் ஆபரேஷனா ஸிஸ்டர்..?


ஆமாம்.. எப்படித் தெரியும்..?


ஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..!


**********************************************************************************


போலீஸ் ; உங்க வீட்ல திருடிக்கிட்டு ஓடின வேலைக்காரி
அங்க அடையாளம் சொல்ல முடியுமாம்மா..?


எஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. !


**********************************************************************************


ஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?


சின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!


**********************************************************************************


ஏண்டி..? பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்தவங்க பொண்ணு
பேரு ரமாவா..?


ஆமாங்க.. ஏன் கேக்கறீங்க..?


இங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..
ரமா ஜெயம்..ரமா ஜெயம்ன்னு !


**********************************************************************************


காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?


காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?


**********************************************************************************

25 comments:

  1. தமிழ்-10 இணைப்பும் கொடுத்து, இண்ட்லி, தமிழ்மணத்தில் ஓட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
  2. எங்கு கலக்கினாலும் திரும்ப வாசிக்கும் போதும் கலக்குவது நகைச்சுவை தானே! கலக்குது சார். ...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. இன்று காலையில் மனதை மிகவும் லேசாக மாற்றியது தங்களின் இந்த நகைச்சுவைப் பதிவும் . நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  4. ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்

    ReplyDelete
  5. சிரித்தேன் ரசித்தேன்

    ReplyDelete
  6. என்ன ஜோக் சார் ஜீ - :))

    ReplyDelete
  7. அடுத்த இதழில் முடியும்-சூப்பரு!

    ReplyDelete
  8. அருமை அருமை
    அனைத்து நகைச்சுவை துணுக்குகளும்
    புதியவையாகவும் இனியவைகளாகவும்
    மனம் விட்டு சிரிக்கும் படியாகவும் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி த.ம 8

    ReplyDelete
  9. :))

    சிரிப்பு மருத்துவருக்கு நன்றிகள்!!

    ReplyDelete
  10. அருமையான நகைச்சுவை நண்பரே

    ReplyDelete
  11. கலக்கல்பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. நல்லாருக்கு சாமி,! :-)

    ///காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
    என்ன செய்யறான்னு சொல்றியா..?
    காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
    எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!///

    ReplyDelete
  13. நல்ல நகைச்சுவை நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. //

    காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
    தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?


    காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா.////

    ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...

    ReplyDelete
  15. அனைத்தும் கலக்கல் )))

    ReplyDelete
  16. இதுபோல நகைச்சுவை பதிவு படிச்சாலே மனசும் உற்சாகமாயிடரது

    ReplyDelete
  17. சுவையான நகைச்சுவை .அருமை .ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  18. நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை
    எங்கேயோ படிச்சது போல இருக்கே..?


    மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?


    நண்பர் ; தெரியாதே சார்..


    மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
    படிச்சிருக்கவே முடியாது..!
    super

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"