Ads 468x60px

9/17/2011

அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!

முகப்புத்தகத்தில் கலக்கியவை ..
**********************************************************************************
அப்பா ; உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..

மகள் ; அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?

அப்பா ; பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!

**********************************************************************************

ப.வீ.காரர் ; மிஸ்டர் மொக்கை.. உங்ககிட்ட இருக்கற ரயில்வே
கைடு கொஞ்சம் கொடுங்களேன்.. கும்பகோணத்திலிருந்து
சென்னை எவ்வளவு தூரம்ன்னு பார்த்துட்டு தரேன்..

மொக்ஸ் ; அடடே.. அது பழைய கைடாச்சே.. இப்போ எல்லாம்
மாறிப் போயிருக்குமே..!

**********************************************************************************

சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்ப்ர்..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!

அப்படியா..? என்ன அது கடைசி வரி.. ?

அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!

**********************************************************************************

காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..?

காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!

**********************************************************************************

என்ன மொக்கை சார்.. டூத் பேஸ்டை தலையில்
தேய்ச்சுகிட்டு இருக்கீங்க..?

ஈறு உபாதைக்கு சிறந்ததுன்னு போட்டிருக்குதே.. எனக்கு தலை
பூரா ஈரும் பேனுமா இருக்கு..!

**********************************************************************************

நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை
எங்கேயோ படிச்சது போல இருக்கே..?

மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?

நண்பர் ; தெரியாதே சார்..

மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
படிச்சிருக்கவே முடியாது..!

**********************************************************************************

டாக்டருக்கு இதுதான் முதல் ஆபரேஷனா ஸிஸ்டர்..?

ஆமாம்.. எப்படித் தெரியும்..?

ஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..!

**********************************************************************************

போலீஸ் ; உங்க வீட்ல திருடிக்கிட்டு ஓடின வேலைக்காரி
அங்க அடையாளம் சொல்ல முடியுமாம்மா..?

எஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. !

**********************************************************************************

ஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?

சின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!

**********************************************************************************

ஏண்டி..? பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்தவங்க பொண்ணு
பேரு ரமாவா..?

ஆமாங்க.. ஏன் கேக்கறீங்க..?

இங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..
ரமா ஜெயம்..ரமா ஜெயம்ன்னு !

**********************************************************************************

காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?

காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?

**********************************************************************************

25 comments:

FOOD said...

தமிழ்-10 இணைப்பும் கொடுத்து, இண்ட்லி, தமிழ்மணத்தில் ஓட்டும் போட்டாச்சு.

kovaikkavi said...

எங்கு கலக்கினாலும் திரும்ப வாசிக்கும் போதும் கலக்குவது நகைச்சுவை தானே! கலக்குது சார். ...
வேதா. இலங்காதிலகம்.

ஜீ... said...

Super! :-)

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

இன்று காலையில் மனதை மிகவும் லேசாக மாற்றியது தங்களின் இந்த நகைச்சுவைப் பதிவும் . நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்

மகேந்திரன் said...

சிரித்தேன் ரசித்தேன்

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

என்ன ஜோக் சார் ஜீ - :))

தமிழ்வாசி - Prakash said...

ஹா...ஹா....

இன்று என் வலையில்:

சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை

r.v.saravanan said...

சிரித்தேன்

கோகுல் said...

அடுத்த இதழில் முடியும்-சூப்பரு!

Jana said...

சூப்பர்

Ramani said...

அருமை அருமை
அனைத்து நகைச்சுவை துணுக்குகளும்
புதியவையாகவும் இனியவைகளாகவும்
மனம் விட்டு சிரிக்கும் படியாகவும் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நன்றி த.ம 8

முனைவர்.இரா.குணசீலன் said...

:))

சிரிப்பு மருத்துவருக்கு நன்றிகள்!!

M.R said...

அருமையான நகைச்சுவை நண்பரே

M.R said...

t.m voted

இராஜராஜேஸ்வரி said...

கலக்கல்பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

சின்னப்பயல் said...

நல்லாருக்கு சாமி,! :-)

///காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..?
காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!///

Lakshmi said...

நல்ல நகைச்சுவை நல்லா இருக்கு.

K.s.s.Rajh said...

//

காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?

காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா.////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...

கந்தசாமி. said...

அனைத்தும் கலக்கல் )))

komu said...

இதுபோல நகைச்சுவை பதிவு படிச்சாலே மனசும் உற்சாகமாயிடரது

kobiraj said...

சுவையான நகைச்சுவை .அருமை .ஓட்டு போட்டாச்சு

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை
எங்கேயோ படிச்சது போல இருக்கே..?

மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?

நண்பர் ; தெரியாதே சார்..

மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
படிச்சிருக்கவே முடியாது..!
super

சென்னை பித்தன் said...

ஹா,ஹா,ஹா.

ராஜ நடராஜன் said...

சிரிக்க வைத்தன.