Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/14/2011

எங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்கள்...


ந்த ஒரு மனிதனும், தான் கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்து, அதன் மூலம் ஒரு பொருளை வாங்கினால், அதனுடைய மதிப்பே தனி. அதே பொருள் அவனுக்கு இலவசமாக கிடைக்கும் போது, அதன் மதிப்பை அறியமாட்டான். 

தவணை முறையில், ஒரு பைக் வாங்கினால், அதை கண்ணாக பாவித்து, பாதுகாத்து பயன்படுத்துவான். அதே பைக், மாமனாரால் இலவசமாக கிடைத்தால், அதை துச்சமாக நினைப்பான்; இது இயற்கையின் நியதி.

பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான் என்பது பழமொழி. 

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு, உழைக்கும் பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

துரியோதனன், யார் எந்த நேரத்தில் வந்தாலும், அறுசுவை உணவை வாரி வழங்குவானாம். அது அவர்கள் பசி தீரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அல்ல; செஞ்சோற்றுக் கடன் தீர, அவர்களை தன் பக்கம் சாய்த்துக் கொள்ள கையாண்ட தந்திரம். 

அதுபோல் தான், தி.மு.க., வழங்கிய இலவசங்களும்.ஆனால், தமிழக மக்கள் தெளிவாகச் செயல்பட்டு, இலவசங்கள் எங்களுக்குத் தேவையில்லையென்று, அவற்றை துச்சமென எண்ணி, ஆட்சிக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்து, பாடம் புகட்டிவிட்டனர்.

ஜெ., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் இலவசங்கள் என அறிவித்தது, சற்று அதிர்ச்சியைக் கொடுக்கத் தான் செய்கிறது. அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், விரைவில் படிப்படியாக இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும். வழங்கப்படுகிற இலவசங்கள், உண்மையில் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்குப் போய்ச் சேர்ந்து, பயன்பட்டால், அதை பாராட்டலாம். 

20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவது சாதாரண விஷயமா? அதை பெற்றுக்கொண்டு அப்படியே, "மாடி வீட்டு ஏழைகளுக்கு' கிலோ நான்கு அல்லது ஐந்து ரூபாய்க்கு விற்றுவிடுகின்றனர். நாற்பது ரூபாய் கொடுத்து, ஒரு கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு, நான்கு ரூபாய்க்கு கிடைக்கும் போது வேட்டை தான்.

இந்த இலவச அரிசி திட்டம், படிப்படியாக குறைக்கப்பட்டு முழுமையாக நிறுத்தப்படவேண்டும். தேவையற்ற இந்த செயலால், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். அனைத்து மக்களும் வாங்கும்படி, அரிசியின் விலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளுவது தான், விவேகமான செயல்.

அதே போல் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, போன்றவையும் இலவசமாக வழங்கப்படுவது, இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். மக்களையும், இளைய சமுதாயத்தையும், சோம்பேறிகளாக்காமல், கடுமையாக உழைக்கவும், விவசாயத்தைக் கையாண்டு உற்பத்தியை பெருக்க வழிவகுத்துக் கொடுப்பதுமே, அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

23 comments:

  1. மாப்ள மீன் பிடிக்க கற்றுகொள்ள வேண்டுமென்றால் இங்க கேக்குறத விட நம்ம காசிமேடு பக்கமா போய் கேட்டா யாராவது சொல்லி தருவாங்க..#ஐடியா ஆறுமுகம்

    ReplyDelete
  2. எந்த ஒரு மனிதனும், தான் கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்து, அதன் மூலம் ஒரு பொருளை வாங்கினால், அதனுடைய மதிப்பே தனி. அதே பொருள் அவனுக்கு இலவசமாக கிடைக்கும் போது, அதன் மதிப்பை அறியமாட்டான்.



    மிகவும் சரிதான்.

    ReplyDelete
  3. விழிப்புணர்வு கட்டுரை கருண் சார்..

    இது மக்கள் கிட்ட இருக்கணும் இலவசமாய் எதுவும் வேண்டாம் எல்லாம் நியாயமான விலையில் கிடைக்கும் படி செய்தாலே போதும் என்று சொல்லும் காலம் இலவசம் இல்லாமல் போகும்..

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  5. இது உங்களுக்கான பதிவு
    வாங்கப்பா...
    http://puratchikkaaran.blogspot.com/

    ReplyDelete
  6. தமிழ்நாட்டு அரசியலில் இலவசங்கள் என்றும் இருக்கும்!

    ReplyDelete
  7. 5 வருடம் அவங்க ஆட்சிக்கட்டிலில் அமரனும்,அதுக்கு அவங்க கொடுக்கும் வாக்குறுதி தான் இலவசம். அந்த இலவசத்தை செய்யாமல் இருக்கலாம், அப்படி செய்யாமல் இருந்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாதே என்று நினைக்கிறார்கள்.

    ஆனால் நான் இலவசம் தர மாட்டேன் என்று சொல்லியே ஆட்சிக்கு வந்திருக்கிறார் மம்தா பானர்ஜி. எப்போ திருந்துவாங்களோ இந்த தமிழ் நாட்டு அரசியல்வாதிங்க.

    ReplyDelete
  8. அருமையா சொல்லி இருக்கீங்க மாப்ள..7th voted TM

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி மிஸ்டர் அட்ரஸ் இல்லாத புரட்சிக்காரன் அவர்களே..

    ReplyDelete
  11. @புரட்சிக்காரன்.,

    தமிழ்மணம் டாப் ட்வென்டி-ல இடம் பிடிச்சதால எனக்கு அவங்க லட்ச லட்சமால்ல பணம் தராங்க.. அடப் போங்க சார் காமேடி பண்ணாதீங்க,...

    ReplyDelete
  12. இலவசம் கொடுப்பது நம் மக்களை இழிவுபடுத்தும் செயல்-னு அடிச்சுச் சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ்,
    இலவசத்தை இல்லாதொழித்து,
    மக்களிற்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழி வகுக்கும் செய்திகளை உள்ளடக்கிய நல்லதோர் பதிவு.

    ReplyDelete
  14. ////பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான் என்பது பழமொழி. /////

    மிகச்சரியானது..

    ReplyDelete
  15. செமத்தனமான பதிவு மக்கா, மீன் குடுப்பதை பார்க்கிலும் மீன் பிடிக்க கற்று கொடுப்பதே ஒரு நல்ல அரசின் கடமையாகும்...

    ReplyDelete
  16. நீங்கள் சொல்வதுபோல இலவசம் என இல்லாமல்
    குறைந்தவிலையில் தர அரசு முயற்சிக்கலாம்
    ஒரு பொதுக் கருத்தை உண்டாக்க இதுபோன்ற
    பதிவுகள் அவசியம்
    தற்போதைய சூழலில் தேவையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 12

    ReplyDelete
  17. மாப்பிள சரியான பதிவு சரியான நேரத்தில்.

    ReplyDelete
  18. பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான் என்பது பழமொழி. good lines

    ReplyDelete
  19. ஒரு ரூபாய் அரிசியை கேவலமாக பார்த்த (பார்க்க) வேண்டிய பதிவுலகம், இப்போது மெல்ல, மெல்ல விழித்துள்ளது. வணிக இதழ்கள் தான் ஆளுங்கட்சியின் பொல்லாப்பு, பிழைப்புவாதம் என திரிய வேண்டும். பதிவுலகமாவது எவர்க்கும் அஞ்சிடாது சமூகத்தேவைகளை / நிகழ்வுகளை நியாயத்துடன் விமர்சிப்போம்! வித்திட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. விகடனில் உங்களின் இந்த பதிவு "குட் ப்ளாக்கில்" வந்துள்ளது. அதற்க்காக உங்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"