Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/06/2011

டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்


டாஸ்மாக் பயோடேட்டா

  • தொடக்கம் : 1983
  • முதலீடு : ரூ.15 கோடி
  • தலைமை நிலையம் : எழும்பூர், சென்னை
  • நிர்வாக மண்டலங்கள் : சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்
  • மதுக் கடைகளின் எண்ணிக்கை : 6500
  • சேமிப்பு கிடங்கு : 41
  • நிகர வருவாய் : ரூ.12491 கோடி(2009&10ம் ஆண்டு)
  • ஊழியர்கள் : 30000 
  • முதலாளி : தமிழ்நாடு அரசு
  • வாடிக்கையாளர்கள் : ‘‘குடி’’மகன்கள் அட நீங்கதான் ..



கடைசியாக அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்:

மதுக்கடைகளை அரசு கையகப்படுத்திய பிறகு டாஸ்மாக் வருவாய் ஆண்டுதோறும் 20 சதவீத அளவுக்கு அதிகரித்து வருகிறது. 1983ல் இதன் மொத்த வருவாய் ரூ.183 கோடி. சில்லரை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தைய நிதி ஆண்டில் 2002&03ம் ஆண்டு கிடைத்த வரி வருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்த பின் 2003&04ம் ஆண்டில், வருவாய் ரூ.3,639 கோடி. அடுத்த நான்கு ஆண்டுகளில் வருவாய் முறையே ரூ.4,872, ரூ.6,087, ரூ.7,300, ரூ.8,822 கோடி ஆனது.

படிப்படியாக உயர்ந்து வந்த விற்பனை வருவாய், 2008&09ம் ஆண்டில் மது வருவாய் பத்தாயிரம் கோடி யை (ரூ.10,601) தாண்டியது. 2009&10ம் ஆண்டில் வருவாய் ரூ.12,491 கோடியாகும். இந்த விற்பனையில் 80 சதவீதம் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற சரக்குகளும் மிச்சமுள்ள 20 சதவீதத்தை பீர்களும் பிடித்துள்ளன. 


பல கெடுதல்கள் இருந்தாலும் பணம் காய்க்கும் மரத்தை எந்த அரசு வெட்டும் சொல்லுங்கள் . 


இந்தியா ஏழை நாடு எவன்சொன்னது. இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவாக்கிப் பாருங்கள் தெரியும். ஹா..ஹா ..

22 comments:

  1. அதிர்ச்சியூட்டுகிறது.

    எத்தனை வீடுகள் வெளிச்சம் இழக்கிறதோ; டாஸ்மாக் பளபளப்பில்..

    ReplyDelete
  2. அப்படியே வாடிக்கையாளர்களின் பட்டியலும் கெர்டுத்தால் நல்லா இருக்கும்...

    ReplyDelete
  3. இது மாதிரி தகவல் கொடுத்திருக்கிங்க...
    அப்புறம்

    இந்த மனோ வந்து வாந்தி எடுக்காம பாத்துக்கங்க...

    ReplyDelete
  4. அய்யய்யோ அப்பிடியா உடனே தக்காளிக்கு தகவல் சொல்லணுமே ஹி ஹி...

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் said...
    இது மாதிரி தகவல் கொடுத்திருக்கிங்க...
    அப்புறம்

    இந்த மனோ வந்து வாந்தி எடுக்காம பாத்துக்கங்க...//

    ஆஹா அருவாளுக்கு வேலை குடுக்குரானுகளே...

    ReplyDelete
  6. நல்லாச்சொன்னீங்க....அட அந்த படத்தில் எம்புட்டு பேரு வரிசையா நிக்குறாங்க..........

    பலகுடிமகன்கள் பார்த்து சிந்திக்கவேண்டிய பதிவு.

    இன்று என் கடையில்
    (கில்மா)கற்பு உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?
    http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

    ReplyDelete
  7. டாஸ்மாக் - தமிழகத்தை விட்டு அகலும் நாளே தமிழகம் மோட்சம் அடையும் நாள்.

    ReplyDelete
  8. டாஸ்மார்க்கில் இவ்வளவு இருக்கோ ஹிஹி

    ReplyDelete
  9. அதிர்ச்சி தரும் தகவல்தான் ..
    அரசே ஆதரிக்கும் பொது என்ன செய்வது ..

    ReplyDelete
  10. ஒரேயடியாக ஒழிக்க முடியாவிட்டாலும். படிப்படியாக ஒழிக்கலாம். ஆனால் நாட்டில் உள்ளதிலேயே பெரிய ஜாதி இதுதான். இதன் ஓட்டுக்களை யாராவது தவறா விடுவார்களா?

    ReplyDelete
  11. நல்ல புள்ளி விவரம்

    ReplyDelete
  12. தமிழ் மணம் ஆறு

    ReplyDelete
  13. புள்ளி விவரத்திற்கு நன்றி

    ReplyDelete
  14. விஜய காந்த் ஸ்டைலில் படிச்சு பார்த்தேன்....வடிவேல் ஸ்டைலில் அழதான் தோன்றுகிறது..அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. குடியைக் கொடுத்துக் குடியைக் கெடுக்குறாங்க!

    ReplyDelete
  16. டாஸ்மாக் புள்ளிவிபரமே தலை கிறுகிறுக்க வைக்கிறதே

    ReplyDelete
  17. ஐயோ ஐயோ
    என்னாத்த சொல்ல ....

    ReplyDelete
  18. ம்...அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் இதன் மூலம் கிடைப்பதால் அவர்கள் நிறுத்தவே மாட்டார்கள்.

    ஆனால் ஒவ்வோர் டாஸ்க்மாக் கடை முன்னாடியும் இந்த மாதிரியான விழிப்புணர்வுப் போஸ்டரை அடித்து ஓட்ட வேண்டும்,

    ReplyDelete
  19. அதிர்ச்சி தரும் தகவல்தான்...

    ReplyDelete
  20. இதில் பெரும்பாலும் கொள்முதல் செய்வது இரு பெரும் நிறுவனங்களிடம் இருந்து.. ஒன்று உடன் பிறவா சகோதரியுடயது இன்னொன்று நம்ம தி.ஆர்.பாலு வுடயுது.. என்று ஒரு தகவல்.. உண்மையோ பொய்யோ?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"