Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/05/2011

நீங்கள் தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ..


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ஆசிரியராகப் பணிபுரிந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடிவருகிறோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.


என்பது வள்ளுவன் வாக்கு. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்புக்கு மட்டுமல்லாமல் அவரது ஏழு பிறப்பிலும் உதவிடும் என்று வள்ளுவர் போற்றிப் புகழும் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.

நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்தது.

ஆசிரியர் தினமான இந்நாளில் ஆசிரியப் பெருமக்கள் ஆற்றுகின்ற இந்த அரிய பணியைப் பாராட்டி அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் பணி மேலும் மேலும் சிறந்திட ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . 


நானும் ஒரு ஆசிரியராக பெருமைக் கொள்கிறேன்.

32 comments:

  1. ஆசிரியர்களை வணங்குவோம்.

    ReplyDelete
  2. நண்பா இன்று என் வலையில்..

    “ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்“

    என்னும் சிறப்பு இடுகை வெளியிட்டிருக்கிறேன்

    காண அன்புடன் அழைக்கிறேன்

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

    ReplyDelete
  3. ஆயிரியர்...

    தாய்க்கும் கடவுளுக்கும் இடைப்பட்டவர்...


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மாப்ள பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஆசிரியர்தின வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் வாத்தியாரே!!

    ReplyDelete
  7. வாழ்த்துகள். இந்த நாளில் எனது ஆசிரியர்களை நினைத்து கொள்கிறேன்.

    ReplyDelete
  8. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே.... நீங்கள் சொல்வது ஏற்க்க பட வேண்டிய கருத்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் பாஸ்,
    முதலில் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,
    இன்னைக்குப் பள்ளியில் நிறைய சாப்பாட்டு கொடுப்பாங்க போல இருக்கே...
    நன்றாகப் போட்டுச் சாப்பிடுங்க.


    வருங்கால இந்தியாவின் தூண்களை, நல் மாணாக்கரை உருவாக்கும் பல கோடி ஆசிரியர்களுக்கும், உங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  11. ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள் மாம்ஸ்....

    ReplyDelete
  12. கல்விக்கண்ணைத் திறந்து நம்மை
    மனிதர்களாக்கி உயர்வடையச் செய்யும் ஆசிரியர்களை
    இன்று நினைவுகூர்வதன் மூலம் நாம்
    நன்றியினைக் காணிக்கையாக்கிடுவோம்
    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

    நீங்க ஒரு ஆசிரியர் அப்டீன்னு கேள்விப்பட்டேன்! உங்களுக்கு ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் பணி மேலும் மேலும் சிறந்திட ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . :///

    என்னோட ஆசையும் அதுதான் சார்!

    ReplyDelete
  16. ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. ஒரு ஆசிரியராக உங்களுக்கு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  18. கல்விக்கண் திறந்து
    நம்மை அகக்கன்களோடு இவ்வுலகில்
    நடமாடச் செய்த ஆசிரியர்களுக்கு
    பணிவான வணக்கங்கள்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. ஆசிரியர்தின வாழ்த்துக்கள்...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  21. மாதா, பிதாவிற்க்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள், வெளியுலகை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆசிரியர்கள் தெய்வத்திற்கு இணையானவர்களே! அவர்களை வருடமொருமுறை சிறப்பான முறையினில் நினைவுக் கூர்ந்து வாழ்த்துவோமாக!

    ReplyDelete
  22. ஆசிரியர் தின வாழ்த்துகள்,கருன்!

    ReplyDelete
  23. அன்புடன், ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் கருண்..! //எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,// ஆம் இவ்வாறு ஒவ்வொரு ஆசிரியனும் உறுதி எடுத்துக்கொண்டால் இந்தியாவின் மாணவச் செல்வங்கள் அனைவரும் நாட்டைக் காக்கும் தூண்கள் ஆவது உறுதி..!

    ReplyDelete
  25. அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  26. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"