Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/02/2011

தங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...


நாளுக்கு நாள், ஏறி வரும் தங்கத்தின் விலை பிரமிக்க வைக்கிறது. சவரனுக்கு, 20 ஆயிரம் ரூபாயை தொட்டு விட்ட தங்கம், இனி பலருக்கு எட்டாக் கனி தான். "பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன்' என்ற வழிமொழியை, நடைமுறைப் படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

இந்தியாவில், நடுத்தரக் குடும்பங்களில் கூட, 10 சவரன் நகை இல்லாமல், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பினால், கவுரவ குறைச்சல் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது. கந்து வட்டி கடனில் தான், பல திருமணங்கள் நடந்தேறுகின்றன. இதற்காக நிலங்களும், வீடுகளும் அடமானம் வைக்கப்பட்டு, பின், வட்டி கட்ட முடியாமல், அவை மூழ்கிப்போகின்றன. 

தங்கத்தின் மீதிருக்கும் பற்றை விட்டொழித்தால், நடுத்தர வர்க்கத்துக்கு பாதி துன்பங்கள் குறையும். வல்லரசு நாடுகளின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப, தங்கத்தின் விலை ஆட்டம் போடுகிறது. அந்த ஆட்டங்களிலிருந்து, நாம் விலகி நிற்பதே, விவேகமான செயல். தங்க நகைகள், முதலீடு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் சொத்தாக கருதப்படுகிறது. 

இந்த காரணங்களுக்காக, பெற்றோர், திருமணத்தின் போது, தங்கள் பெண்ணிற்கு மனம் உவந்து அளிக்கும் தங்க நகைகளுக்கு பதில், நீண்ட கால, அரசு கடன் பத்திரங்கள், வங்கி வைப்பு நிதிபத்திரங்களை பரிசாக வழங்கலாம். இவைகளை வாங்கும் போது, செய்கூலி இல்லை. முதலீடாக மட்டுமில்லாமல், தொடர்ந்து வட்டி வருவாயை அளிக்கும் இவைகளை, கழுத்து சங்கிலியைப் போல், திருடர்கள் அறுத்து செல்ல முடியாது. 

நெருக்கடி தருணங்களில் இவைகளின் மீது, குறைந்த வட்டியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.விண்ணுக்கு விலை செல்லும் தங்கத்தை துரத்துவதை விட்டு விட்டு, நம் பொருளாதார சக்திக்குட்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துவது தான், நடுத்தர வர்க்கத்துக்கு நல்லது.
இம்மாதிரி முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.தங்கத்தை ஒதுக்கும், மனப்புரட்சி தேவை!

28 comments:

  1. பவுனு பவுனுதான்.... கவுனு கவுனுதான்

    ReplyDelete
  2. //நாளுக்கு நாள், ஏறி வரும் தங்கத்தின் விலை பிரமிக்க வைக்கிறது. சவரனுக்கு, 20 ஆயிரம் ரூபாயை தொட்டு விட்ட தங்கம், இனி பலருக்கு எட்டாக் கனி தான். "பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன்' என்ற வழிமொழியை, நடைமுறைப் படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.//

    உங்க நாட்டைவிட எங்கள் நாட்டில் இன்னும் விலை ஜாஸ்தியா இருக்கு பாஸ்...

    இன்று என்கடையில்-(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைச்சம்பவம் மறக்கமுடியாத பாடசாலைநாட்கள்-http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html

    ReplyDelete
  3. மிகச் சரியான கருத்து
    தீபாவளியோடு பட்டாசை சேர்த்தமாதிரி
    திருமணத்தோடு தங்கத்தைச் சேர்த்த பாவியை
    கண்டம்துண்டமாய் வெட்டனும்போல இருக்கு
    பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தங்கம் வாங்குற விலையில் இல்லை என்றாலும்
    கொஞ்சம் கொஞ்சமாவது வாங்கி சேர்த்து வைப்பது நல்லது...
    அருமையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  5. பணம் இருக்கும்போது நகையாக எடுக்காமல் ஹால்மார்க் தங்கக் காசாக எடுத்து வைத்திருந்தால் தேவைப்படும்போது அன்றைய விலைக்கு அந்த காசின் மதிப்பு பெறும்.

    ReplyDelete
  6. //
    தங்கத்தை ஒதுக்கும், மனப்புரட்சி தேவை!
    //
    ரொம்ப கஷ்டம்

    ReplyDelete
  7. //
    தங்கத்தின் மீதிருக்கும் பற்றை விட்டொழித்தால், நடுத்தர வர்க்கத்துக்கு பாதி துன்பங்கள் குறையும்.
    //

    ரொம்ப சரி

    ReplyDelete
  8. //
    தங்கள் பெண்ணிற்கு மனம் உவந்து அளிக்கும் தங்க நகைகளுக்கு பதில், நீண்ட கால, அரசு கடன் பத்திரங்கள், வங்கி வைப்பு நிதிபத்திரங்களை பரிசாக வழங்கலாம். இவைகளை வாங்கும் போது, செய்கூலி இல்லை. முதலீடாக மட்டுமில்லாமல், தொடர்ந்து வட்டி வருவாயை அளிக்கும் இவைகளை, கழுத்து சங்கிலியைப் போல், திருடர்கள் அறுத்து செல்ல முடியாது.


    //

    நல்ல ஐடியா .. ஆனா மாப்பிளை ஒத்துக்கணுமே

    ReplyDelete
  9. என்ன செய்றது பண்ணுக்கு தேவை பொண் என்று ஆகிடிச்சு

    ReplyDelete
  10. //தங்கத்தின் மீதிருக்கும் பற்றை விட்டொழித்தால், நடுத்தர வர்க்கத்துக்கு பாதி துன்பங்கள் குறையும். //

    தங்கத்தின் மோகம் குறைந்தால் பாதி சந்தோசத்தை பெற்றுவிடலாம். விழிப்புனர்வு பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. தங்கத்தையும், பெண்களையும் பிரிக்க இயலாதே.

    ReplyDelete
  12. மிகவும் பாதுகாப்பானது வங்கி வைப்புகள் என்பதில் சந்தேகமில்லை!

    ReplyDelete
  13. நம்ம மக்கள் திருந்துவாங்கன்னு நினைக்கீங்க?

    ReplyDelete
  14. என்னய்யா 2 நாளா கடைப்பக்கம் ஆளைக் காணோம்?

    ReplyDelete
  15. தங்கம் எவ்வளவுதான் விலை ஏறினாக்கூட, இன்னமும் நகைக்கடைகளில் கூட்டம் குறையவேஇல்லியே?

    ReplyDelete
  16. நல்ல ஆலோசனை மற்றும் இந்த சமயத்தில் அவசியமான பதிவு.

    ******************

    இதையும் படித்துப் பாருங்களேன்!

    கண்டிப்பாக, அட்சய திருதியையன்று தங்கம் வாங்காதவர்களுக்கு மட்டும்!

    நன்றி.

    ReplyDelete
  17. நல்ல அறிவுரை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. தமிழ் மணம் நாலு


    நல்ல கருத்தை தந்ததற்கு நன்றி நண்பா

    ReplyDelete
  19. எதிர் வீட்டு தங்கத்தை சொல்றீங்க போலன்னு நினைச்சேன்...:)

    ReplyDelete
  20. அட வித்தியாச கோணத்தில் சொல்லியுள்ளீர்கள்... உண்மை தான் வறட்டு கௌரவம் எனும் பேரில் வரதட்சனை கொடுத்து வாழ்க்கையை இன்னலுக்கு ஆளாக்க முயலும் இத்தேசத்தில் வரதட்சனையை அறவே ஒழிப்போம் ஆடவர்களே... தங்க மனப்புரட்சி தவிர்க்கமுடியாத புரட்சி அவசியபதிவு... பகிர்வுக்கு பாராட்டுக்கள் நண்பா

    ReplyDelete
  21. நல்லதொரு பகிர்வு... இருந்தும் நம் மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் குறையவில்லையே..?

    ReplyDelete
  22. பெண்களிம் மனம் மாறுமா!

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ்,
    எப்படி இருக்கிறீங்க.

    ReplyDelete
  24. தங்க முதலீடு பற்றிய தங்கமான பதிவு பாஸ்.

    ReplyDelete
  25. எல்லாருக்கும் சீக்கிரமாவே மனபுரட்சி வந்து தங்கத்தின் மேல் உள்ள மோகம் போயிடணும்.... அப்ப தான் தங்கத்தோட வெல கம்மியாகி நா நிறைய நக வாங்கலாம். ஹி...ஹி...ஹி....

    இப்படி தான் நிறைய பேர் நினைப்பாங்க

    என்ன தான் இருந்தாலும் இப்போதைக்கு இந்த காலகட்டத்துல நகையை ஒதுக்கும் மனபுரட்சி என்பது சாத்தியமா என்பது நிச்சயம் கேள்விகுறி தான்!!!

    ReplyDelete
  26. how much you invested in gold ?!!!
    enthane savaran neega vaithullirgal boss!!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"