Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/15/2011

11 குழந்தைகள் மரணம்.? நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?


ந்திர மாநிலம் கர்நூல் பகுதியில், ஒரு அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த, 11 குழந்தைகள், ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது, நெஞ்சை நெகிழ வைத்த, ஒரு பதை பதைப்பான சம்பவம்.

இதற்குக் காரணமான மனிதனை, வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க வேண்டும். குழந்தைச் செல்வம் வேண்டி, பெற்றோர் தவமிருந்து பெற்றதை, அரசு அதிகாரிகள் இப்படி, தங்களின் அலட்சிய செயல்களால் சாகடிக்கின்றனர்.

இது பற்றி கருத்து கூறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரோ, "நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன' என, திருவாய் மலர்ந்துள்ளார். 

இதே சம்பவம் குஜராத்திலோ, கர்நாடகாவிலோ நடந்திருந்தால், இப்படித் தான் பதில் கூறுவாரா; மாநில அரசை உலுக்கி எடுத்திருப்பாரே! நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்றதும், அடக்கி வாசிக்கிறார்.

வேறு எந்தத் துறைகளில் அலட்சியம் இருந்தாலும், பொருள் இழப்பு மட்டும் தான் ஏற்படும். ஆனால், மருத்துவத் துறையில் அலட்சியம் என்பது, விலை மதிப்பில்லாத உயிரை அல்லவா இழக்க வைக்கிறது. 

நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?

25 comments:

  1. உங்கள் அக்கறை புரிகிறது ,இப்படியான விடயங்கள் தொடர்வது வருத்தம் அளிக்கிறது

    ReplyDelete
  2. இதிலிருந்து எனக்கு தெரிவது நம்நாடு
    வல்லரசாகிக் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  3. நெஞ்சை நெகிழ வைத்த, ஒரு பதை பதைப்பான சம்பவம்.

    ReplyDelete
  4. சுகாதார அமைச்சின் கவனக் குறைவால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள் தானே..

    ReplyDelete
  5. வேறு எந்தத் துறைகளில் அலட்சியம் இருந்தாலும், பொருள் இழப்பு மட்டும் தான் ஏற்படும். ஆனால், மருத்துவத் துறையில் அலட்சியம் என்பது, விலை மதிப்பில்லாத உயிரை அல்லவா இழக்க வைக்கிறது.

    உண்மைதானே நண்பரே .

    ReplyDelete
  6. அனைத்து துறைகளிலும் முனனேறுவோம் என்று கேடிசம் எழுப்பிக்கொண்டு முக்கியமானதான சுகாதாரததுறையில் இப்படி அசண்டையீனமாக இருந்தால் நாடு பாதாளத்தை நோக்கித்தான் போய்க்கொண்டிருப்பதாக அர்த்தம்

    ReplyDelete
  7. அதிகாரத்தில் உள்ளவன் தான்
    இதை கவனிக்க வேண்டும்
    நம்மால் வேதனைபட மட்டுமே முடியும்

    ReplyDelete
  8. //நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்றதும், அடக்கி வாசிக்கிறார்.//

    உண்மை

    ReplyDelete
  9. நெஞ்சைக் கனக்க வைக்கும் பதிவு.
    என்ன கொடுமையப்பா இது.....

    ReplyDelete
  10. உண்மை சுடும் சாரே!!

    வருத்தப்பட முடியும் போன உயிரை எப்பிடி கொண்டு வருவது!!??

    ReplyDelete
  11. கேட்கவே சங்கடமாக உள்ளது. உலகம் அன்புலகமாக மாறட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. கவனக்குறைவுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  13. வேறு எந்தத் துறைகளில் அலட்சியம் இருந்தாலும், பொருள் இழப்பு மட்டும் தான் ஏற்படும். ஆனால், மருத்துவத் துறையில் அலட்சியம் என்பது, விலை மதிப்பில்லாத உயிரை அல்லவா இழக்க வைக்கிறது.

    நீங்கள் சொல்வது 100% உண்மை நண்பரே

    ReplyDelete
  14. கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

    4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    ReplyDelete
  15. அமைச்சரே இப்படி பேசினால், அவருக்கு கீழே இருப்பவர்கள் மெத்தனமாகத்தான் இருப்பார்கள்.

    ReplyDelete
  16. வருந்தத்தக்க விடயம்

    ReplyDelete
  17. ரெம்ப கவளையான ஒரு விடயம்

    ReplyDelete
  18. தனியார் துறையின் வளர்ச்சிக்கு உதவி புரியும் செயல் இது.. எவ்வளவு சொன்னாலும் கேட்க்காமல் அரசு மருத்துவமனையை நாடும் ஏழை மக்களுக்கு புரிய வைக்க அரசு இந்த உயிர்களை எடுக்க வேண்டியதாகி விட்டது..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"