Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/05/2011

விஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்! கடுப்பில் கேப்டன்!!


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதுவரை கட்சியை எப்படி நடாத்தினாரோ தெரியாது, ஆனால் இப்போது ‘வேறு விதமாக’ கட்சி நடாத்த வேண்டிய சூழ்நிலையை அவருக்கு ஏற்படுத்திவிட்டது ஒரு கடிதம். இந்தக் கடிதம் வந்திருப்பது தேர்தல் ஆணையத்திலிருந்து.

கடிதம் என்ன சொல்கிறது?

“உங்களது கட்சியில் ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல்களை நடாத்தி, அவை தொடர்பான ஆவணங்களை இன்னமும் 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களது கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்க நேரிடலாம்”


இந்தக் கடிதம் வந்ததிலிருந்து கேப்டன் மூட்-அவுட்டில் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். காரணம், தற்போது இந்தக் கட்சிபற்றி வெளியேயுள்ள இமேஜ், கட்டுக்கோப்பான கட்சி என்பதே. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாகிவிட்ட நிலையில், கட்சிக்காரர்களில் பலருக்கும் பதவி ஆசைகள் வந்திருக்கும்.

அதனால், தேர்தல் சமயத்தில் விரும்பத்தகாத சில விஷயங்களும் வெளியாகலாம்.

இதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதிலேயே கப்டனின் தற்போதைய கவனமெல்லாம் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து பேட்ஜ் பேட்ஜாக கட்சிக்காரர்களை சென்னைக்கு அழைத்து, ஒரு ‘நேருக்கு-நேர்” நடாத்தியபின்னரே கட்சித் தேர்தலுக்குள் செல்வது நல்லது என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்!

கடந்த காலத்தில் தே.மு.தி.க., சில தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும், தேர்தல் ஆணையம் அவர்களை ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கவில்லை. காரணம், அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆசனங்களை அக்கட்சி பெற்றதில்லை.

ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு தேவையான ஆசனங்களை அள்ளி வழங்கியிருந்தது. அங்கீகாரமும் கிடைத்தது. இப்போது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை, கட்சி நிர்வாகிகளை நியமிப்பதற்கு தேர்தல் ஏதும் கிடையாது. தலைவரின் மச்சான் சுதீஷ் யாரை நோக்கிக் கையைக் காட்டுகிறாரோ, அவருக்குத்தான் ‘யானை மாலை’! அவர்தான் வட்டம், மாவட்டம், அரை வட்டம் எல்லாமே! இப்போது திடீரென தேர்தல் ஆணையம் இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, தனது சொந்தக் கட்சிக்குள் தேர்தல் ஒன்றை நடாத்தவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார் கேப்டன்! விரைவில் நடைபெறவுள்ளன அவர்களது கட்சிக்குள் தேர்தல்கள் (அத்துடன் சேர்த்து அடிதடியும்?)

சுதீஷ் விரும்பாத ஆட்களை, போட்டியிடாமல் செய்ய 1000 வழிமுறைகள் இருக்கின்றனவே! நன்றி விருவிருப்பு..


24 comments:

  1. மற்ற கழகங்களின் வழியை பின் பற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டினால் போச்சு...

    ReplyDelete
  2. உட்கட்சி தேர்தல் தானே.... !!!

    ReplyDelete
  3. அவர் கட்சியிலும் ஜனநாயகம் தழைக்கட்டும்.

    ReplyDelete
  4. எதை எதையோ செய்யுறாரு இதையும் செய்வாரு..

    ReplyDelete
  5. அரசியல்ல குதிச்சாச்சா? :))

    ReplyDelete
  6. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

    அப்புறம் அது யாருன்னு நம்ம கேப்டனே கண்டுபிடிச்சிடுவாறு..
    அவரு பிடிக்காத தீவிரவாதியா....

    ReplyDelete
  7. அவர்பாட்டுக்கு சினிமா ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்கு போற மாதிரி ...தேர்தல் முடிந்ததும் போயிட்டாரு..
    அவரைப்போய் இதெல்லாம் கேட்டுட்டு...முதல்ல கால்ஷீட் வாங்கினாங்களா அவர்ட்ட..

    ReplyDelete
  8. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.... :-)

    ReplyDelete
  9. பொதுத் தேர்தல்ல வேட்பாளரை அடிச்சாரு ...உட்கட்சி தேர்தல்ல என்ன பண்ணப் போறாரோ ...

    ReplyDelete
  10. அரசியல் என்றால் பல குழப்பங்கள்
    வரத்தான் செய்யும் .

    பார்ப்போம் என்ன செய்கிறார் என்று

    ReplyDelete
  11. கேப்டனுக்கு வந்த சோதனை!

    ReplyDelete
  12. உள்கட்சி தேர்தல்ல ஏதும் உள்குத்து வராம இருந்தா சரி

    ReplyDelete
  13. இந்தியாவில மக்கள் தொகை 120 கோடி, தமிழ் நாட்டில 7.5 கோடி, அதில என் கட்சிக்காரர்கள் 1.5கோடி. . .என இன்னேரம் கணக்கு போட்டிருப்பாரு அவரு. . .

    ReplyDelete
  14. உட்கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை வீட்டில் நடத்தி விட்டால் போகிறது!!!!!!!!!!!

    ReplyDelete
  15. ஆமினா கூறியது...

    அரசியல்ல குதிச்சாச்சா?////என்னங்க,என்னமோ பசுபிக் கடல்ல குதிச்ச மாதிரி சொல்லுறீங்க??????

    ReplyDelete
  16. இருக்கும் கட்சிகளில் இவர் கட்சி ஒக்கே தான்
    யோசிக்காம களத்தில் இறங்குங்க கேப்டன்

    ReplyDelete
  17. டைட்டிலில் அள்ளிட்டார்யா மாப்ளே

    ReplyDelete
  18. அண்ணன் விஜயகாந்த் வாழ்க, [[என் மச்சினன் அடிச்சிபுடுவான்ய்யா பயமா இருக்கு கமெண்ட் போட ஹி ஹி ஏற்கெனவே தமிழ்வாசியை தீவிரமா தேடிட்டு இருக்கான் ஹி ஹி ]]

    ReplyDelete
  19. அதான் மச்சான் இருக்கார்ல அவரே இதையும் பாத்துப்பாரு.......!

    ReplyDelete
  20. அட போங்கப்பா பார்டர் தாண்டி தீவிரவாதியை ஈசியா புடிசிறலாம்.. இதலாம் நமக்கு சரிபட்டு வராது..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"