Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/06/2011

ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!



ஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். 

அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே?

 நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார்.

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

19 comments:

  1. நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது.

    உண்மை தானே

    ReplyDelete
  2. அஜீத்துக்கு என்றுமே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வழக்கம் இல்லை!

    ReplyDelete
  3. நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார்./// நன்றாக புரிந்து வைத்துள்ளார் ...

    ReplyDelete
  4. அஜித் சரியாக தான் சொல்லியிருக்கார்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!//

    GREAT MAN. AJITH ALWAYS GREAT AND GENTLE MAN

    ReplyDelete
  6. //நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!//

    GREAT MAN. AJITH ALWAYS GREAT AND GENTLE MAN

    ReplyDelete
  7. ஆகா அப்படியா சொன்னாரு...
    எல்லாரும் தங்க சுயநலத்தோடதான் நடத்துகினம்..
    பகிர்வுக்கு பராட்டுக்கள்...

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  9. அஜித்தின் இந்த கருத்துக்கு ஆயிரம் சபாஸ் போடலாம்.ரசிகர்களின் ஆர்வக்கோளாறு, மனமயக்கத்தை புரிந்துகொண்டு, மனதார, யதார்த்தமாக வாழ நல்ல அறிவுரை கூறியுள்ளார்.

    ReplyDelete
  10. "என் படம் நல்லா இருந்தா(!) தியேட்டருக்கு வந்து பாருங்க"......ஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி!!

    ReplyDelete
  11. வாத்யாரே..உங்களுக்கு 425 பால்லோயர்ஸ்ன்னு போட்டுருக்கு. ஆனா பத்து பேரு படம்தான் தெரியுது. உங்கள ஏமாத்திட்டாங்களா?

    ReplyDelete
  12. தல உன்மையிலையே great. திரையுலகை அவர் ஒரு தொழிலாக மட்டுமே பார்கின்றார். வேலை முடிந்தபின் வீடு தான். நாம் சம்பாதிப்பது குடும்பத்தை நல்ல முரையில் நடத்தத் தான். . . அவருடைய சிந்தனை (formula) தான் சரி. . .

    ReplyDelete
  13. "அஜீத்"தின் வெளிப்படைத் தன்மையைத் தான் அண்மைக் காலத்தில் பார்த்தோமே?இப்போதும் அதையே தான் சொல்கிறார்,அவ்வளவுதான்!

    ReplyDelete
  14. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

    அள்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க .....

    ReplyDelete
  15. என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"