Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/03/2011

சன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் மரணம்


ராமநாதபுரத்தில் கடந்த வாரம் கலாநிதி மாறன், ஏசி குமாரவேல், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் இருவர் ஆகியோரின் பேரில் கொலைமிரட்டல் புகார் கொடுத்தவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது ஜூலை 27ம் தேதி ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார்.



அதில், தன்னை மிரட்டி ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள பொருள்களை அபகரித்து தனக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த கலாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் எஸ்பி அனில்குமார் கிரியிடம் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த புகாரின் சுருக்கம்...

நான் 1998 முதல் கேபிள் ஆபரேட்டராக இந்தப் பகுதியில் தொழில் செய்துவந்தேன்... 2008ல் இங்கே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க ரூ. 15 லட்சம் செலவில் தேவையான சாதனங்களை வாங்கி வைத்திருந்தேன். இந்நிலையில், கலாநிதிமாறன் தூண்டுதலில் என்னை மதுரை மதிச்சியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், என்னை மிரட்டினர். அந்தக் கட்டுப்பாட்டு அறையை மூடிவிடு, இல்லை என்றால் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சிலவற்றை உன் பேரில் எழுதி உள்ளே தள்ளிவிடுவேன் என்று ஏசி குமாரவேல் மிரட்டினார். அதைத் தொடர்ந்து, கலாநிதி மாறன் என்னை ஃபோனில் மிரட்டினார்.

என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக ரூ. 15 லட்சம் பெறுமான பொருள்களை அபகரித்துக் கொண்டு, என்னை மேலும் தொழிலில் ஈடுபட முடியாமல் தடுத்து விட்டனர். கடந்த 4 வருடங்களாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

என்னை ஃபோனில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய கலாநிதி மாறன், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் சரவணன் மற்றும் கமலக்கண்ணன், ஏசி குமாரவேல் ஆகியோர் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர். அவர்கள் குறித்த விசாரணையை போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அனில் குமார் கிரியிடம் புகார் அளித்தார்.

இவரின் இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன போலீஸார், விசாரணையைத் துவக்கினர். இந்நிலையில், நாகராஜன் மாரடைப்பால் (டவுட்டு)  காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். நன்றி தினமணி .

21 comments:

  1. இதுல எதாவது உள்குத்து இருக்குமோ?

    ReplyDelete
  2. ங்கொய்யால கொன்னுட்டானுன்களா

    ReplyDelete
  3. போச்சுடா போட்டு தள்ளிட்டானுகளா....!!!

    ReplyDelete
  4. என்னமோ நடக்குது :)

    ReplyDelete
  5. எவ்வளவு தூரம் போகுது பார்க்கலாம்...

    ReplyDelete
  6. மாப்பிள எனக்கு கலாநிதி மாறனின் மீடியா ஏகபோகம் பிடிக்காதுதான்.. என்றாலும் சொல்கிறேன் காநிதி மாறன் இவ்வளவுக்கு கீழ் இறங்கி வரமாட்டார்...!!?? கலாநிதி ஒன்றும் கலைஞர் இல்லை????

    ReplyDelete
  7. அட கொடுமையே

    ReplyDelete
  8. எல்லாமே மர்மமா இருக்குது .......க்ரைம் நாவல்களையே மிஞ்சிடும் போலிருக்கே ...

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி தல!

    ReplyDelete
  10. சகா. இவர்களுக்கெல்லாம் இருக்கு. அதான் இப்ப குடும்பத்தோட அனுபவிக்கின்றார்களே. . .

    ReplyDelete
  11. என்று மடியுமிந்த வெள்ளைத்தோல் மோகம்?

    ReplyDelete
  12. அவரா தான் இறந்தாரா?

    ReplyDelete
  13. கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சுட்டு ஆடிச்சாம்
    என்ன கொடும சார் இது

    ReplyDelete
  14. காம்ப்ளைன் கொடுத்தவனுக்கு ஆப்படிச்சிட்டாங்களா.

    ReplyDelete
  15. செய்திப் பகிர்விற்கு நன்றி மாப்ளே,

    //மேலும், கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்,

    இது வேறையா. என்ன கொடுமை சாமி,.

    ReplyDelete
  16. Maran is a business man.He not do like this worst game

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"