Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/04/2011

சென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரபரப்பு தகவல்.


சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களசென்னையில் சிங்களவர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.


அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சாலையில் சுற்றியுள்ளனர். இதைப் பார்த்த சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 பேர் திரண்டு வந்து அந்த சிங்களர்கள் தங்கியிருந்த விடுதிக்குள்ளும் புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில் சில சிங்களர்கள் காயமடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி அலைகள்..


இந்த செய்தி படித்தவுடன் எனக்கு கவலைதான் ஏற்பட்டது. அங்கு ஈழத்தில் நம் உறவுகளுக்கு இதனால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று?





19 comments:

  1. not a good news..
    it will create a bad effect to our brothers living in sri lanka

    ReplyDelete
  2. உதெல்லாம் வேலைக்கு ஆகாது மாப்பிள்ள...!!??

    ReplyDelete
  3. இங்கு அவர்களை தாக்குவதால்
    அங்கு நம் மக்களுக்கு என்ன பயன்.
    சிந்தித்து செயல்படவேண்டும்...

    ReplyDelete
  4. இந்த செய்தி படித்தவுடன் எனக்கு கவலைதான் ஏற்பட்டது. அங்கு ஈழத்தில் நம் உறவுகளுக்கு இதனால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று?


    இதைப் படித்ததும் எனக்கும் இந்த கவலை தோன்றியுள்ளது

    ReplyDelete
  5. உங்கள் அக்கறையை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் .எங்களுக்கு சொந்தங்கள் உடன் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது

    ReplyDelete
  6. எதிர்விளைவுகளை எண்ணிப் பயமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  7. தங்கள் கவலை நியாயமானதே.

    ReplyDelete
  8. யார் மீதோ உள்ள வெறுப்பை யார் மீதோ காட்டுகிறார்கள் ...

    ReplyDelete
  9. இது தரங்கெட்ட வேலை..

    ReplyDelete
  10. அடிக்க வேண்டிய ஆளுகள விட்டுட்டு. . .இவங்க ஏன் இப்படி பண்ணுனாங்க. . .இதுனால இலங்க்கைல ஒன்னும் நடக்காது, ஏன்னா ஏற்கனவே எல்லாம் அங்க நடந்து முடிஞ்சுடுச்சு. . .

    ReplyDelete
  11. இது ஒரு மோசமான முன்உதாரணம்
    உங்கள் கவலை நியாமானதே.

    ReplyDelete
  12. என்ன செய்யலாம்? சொல்லுங்க

    ReplyDelete
  13. //இந்த செய்தி படித்தவுடன் எனக்கு கவலைதான் ஏற்பட்டது. அங்கு ஈழத்தில் நம் உறவுகளுக்கு இதனால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று!//

    ஆமாம் மாப்ள..எனக்கும் அதே கவலை தான்.

    ReplyDelete
  14. என்னைத்தை சொல்ல பாஸ்
    நோ கமெண்ட்ஸ்

    ReplyDelete
  15. இது சரியா ..சரியில்லையான்னு சொல்ல முடியல ......

    ReplyDelete
  16. தர்மம் நியாயம் பார்த்தா சிங்களவன் தமிழர்களைக் கொன்றான். அவனுக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயமா.கருனையில்லா நிதி மாதிரி பேசக்கூடாது.

    ReplyDelete
  17. கொத்துகொத்தாய் கொலை செய்வான் சிங்களன். புத்தரை வழிபடுவன். சிங்களனை அடித்தாலே வருந்துபவன் தமிழன். இனி அங்கே செய்ய என்ன பாக்கி இருக்கு. இனி சென்னை பக்கமே தலை வைத்து படுக்கக்கூடாது. அங்கு போய்தான் அடிக்க முடியவில்லை. இங்காவது முடிந்ததே.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"