Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/25/2011

ஏழைகளாக இருப்பது எதுவரை?



"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்றார் பாரதி. சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகள் கடந்தும், நம்மால், நம் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலவில்லை.



 நாட்டு மக்கள் அனைவருக்கும், வயிறு நிரம்ப சோறிட முடியவில்லை. பின் எவ்வாறு பல கல்வி அனைவருக்கும் புகட்ட முடியும்? அக்கல்வியில் நாம் தேர்ந்து, நிபுணத்துவம் பெற்று, இவ்வுலகை ஆள்வது எப்போது? இந் நிலைமை இன்னும் தொடர்வதற்கு யார் காரணம்?


 நாம், நம்மை இன்று வரை சரியாக ஆளாததே இதற்கு காரணம் என்பதை, ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.


 "ஏழையாக பிறப்பது நம் தவறல்ல; ஆனால், என்றும் ஏழையாகவே இருப்பது நம் தவறுதான்' என்றார், பில்கேட்ஸ். 


இன்னும் நாம் ஏழையாகவே இருப்பதற்கு, நம் ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறைகள் தான் காரணம். இவ்வுலகத்தோடு போட்டி போடக்கூடிய உயர்கல்வியை, மாணவர்களுக்கு புகட்ட, அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். இக்கல்வியால் மட்டுமே, அனைத்து வேறுபாடுகளையும் நாம் களைய முடியும்.


கல்வி மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும். படிப்பவர்களுக்கு உதவி செய்வோம்.

27 comments:

  1. மச்சி... நீ சொல்றது சரியே

    ReplyDelete
  2. எந்த கல்விய கொடுக்கறதுன்னே இங்க பிரச்சனை

    ReplyDelete
  3. மாப்ள ரைட்டு!

    ReplyDelete
  4. அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  5. சரியாக சொல்லி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு!

    @ இரவு வானம்

    // எந்த கல்விய கொடுக்கறதுன்னே இங்க பிரச்சனை //

    சூப்பர்!

    ReplyDelete
  7. உண்மைதான். தேவையென்ன என்பதை யார் உணர்ந்து கடமையாற்றப் போகிறார்கள்? நல்ல பதிவு.

    ReplyDelete
  8. நன்று ஆசிரியரே ..

    ReplyDelete
  9. //கல்வி மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும். படிப்பவர்களுக்கு உதவி செய்வோம்.//

    சூப்பர் கருன்.

    ReplyDelete
  10. //கல்வி மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும். படிப்பவர்களுக்கு உதவி செய்வோம்.//
    செய்வோம்!

    ReplyDelete
  11. //
    "ஏழையாக பிறப்பது நம் தவறல்ல; ஆனால், என்றும் ஏழையாகவே இருப்பது நம் தவறுதான்' என்றார், பில்கேட்ஸ்//

    என்ன ஒரு அழகான ஆழமான வார்த்தை அல்லவா பாஸ் இது.

    ReplyDelete
  12. தமிழ் மணம் எட்டு

    நல்ல விஷயம் கையாண்டு உள்ளீர்கள் .

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  13. ஆமாங்க, படிப்பவர்களுக்கு உதவி
    செய்து ஊக்குவிப்போம்.

    ReplyDelete
  14. சரியாக சொன்னீங்க நண்பா

    ReplyDelete
  15. ஏழ்மையை விரட்டும் ஒப்பற்ற வழி கல்வி என்பதை நன்கு அடையாளப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி நண்பா.

    ReplyDelete
  16. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்உதையப் பராகிவிடில் ஓர்நொடிக்குள்ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறிஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா....

    ReplyDelete
  17. //கல்வி மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும்//
    True!!

    ReplyDelete
  18. சிந்திக்க ஒரு சிறந்த கருத்து தந்து இருக்கீங்க. மக்கள் ஆட்சியில், இந்த அவல நிலை இருப்பது வேதனையான விஷயம்.

    ReplyDelete
  19. கல்வி மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
    unmaithaan...
    nalla karuththu....
    valththukkal..

    ReplyDelete
  20. நிதர்சன உண்மை ..

    ReplyDelete
  21. தமிழ் மணம் 14

    சரியா சொன்னீங்க நண்பரே...

    ReplyDelete
  22. உண்மைதான்... நல்ல பதிவு நண்பரே...

    ReplyDelete
  23. பொறுப்பான ஆசிரியரா பதிவை போட்டிருக்கீங்க‌
    தமிழ்மணத்துல 16

    ReplyDelete
  24. கண்டிப்பாக கல்வி அறிவோ அல்லது பொது அறிவோ, எல்லா குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அரசால் கொடுக்கப்பட வேண்டும். . .அறியாமையினாலையே மக்கள் இன்னமும் உரங்கிக்கொண்டிருக்கின்றனர். உணர்வற்று கிடக்கின்றனர். . . நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அறிவு மிகவும் அவசியம். . .

    ReplyDelete
  25. உண்மைதான் கருன்
    அருமையான கருத்துக்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"