Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/19/2011

“தமிழகத்திலிருந்து வாரீகளா?” அலறுகிறது அமெரிக்க அரசு!


“தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ரூ15,000 கடனுடன் பிறக்கின்றது” இப்படி கூறியவர் வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வருடத் தொடக்கத்தில் அப்படிக் கூறியிருந்தார். அப்போது தி.மு.க. அரசின் ஆட்சியில் இருந்தது தமிழகம்.

தி.மு.க. அரசு, மொத்த தமிழகத்தையுமே கடனில் மூழ்க வைக்கிறது என்பதுதான் ஜெயலலிதா சொல்ல வந்த சேதி.


அவர் இப்படிக்கூறி 6 மாதங்களுக்குள், ஆட்சி அவரது கையில் வந்து சேர்ந்தது. இன்று தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட அதிக கடன் தொகையுடன் பிறக்கின்றது.

இதைச் சொல்வது நாங்களல்ல. அவரது அரசு இரு தினங்களுக்குமுன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசு, கடந்த தி.மு.க. அரசு விட்டுச் சென்ற கடன் தொகையையும் சேர்த்து தலையில் சுமக்க வேண்டியுள்ளது என்பது நிஜம்தான். ஆனால், அந்தக் கடன் தொகையை அதிகரிப்பது எதுவென்றால், இவர்கள் மழை போலத் தூவும் ‘இலவசங்கள்!’

ஒரு சாம்பிளுக்குப் பாருங்கள். இலவச பேன், மிக்ஸி, கிரைன்டர் வழங்கும் திட்டத்துக்கு ரூ1,250 கோடி. சூரிய சக்தியுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுக்க ரூ1,080 கோடி. மாணவர்களுக்கு ரூ394 கோடி. தாலிக்குத் தங்கம் ரூ514 கோடி. இந்த லிஸ்ட் இத்துடன் நிற்கவில்லை. இலவச கறவைப் பசு, வெள்ளாடு என்று அதுபாட்டுக்கு நீண்டுகொண்டே போகிறது.

2011-12 பட்ஜெட் காலப்பகுதியில் தமிழக அரசு கடன் வாங்க வேண்டிய தொகை ரூ1.01 லட்சம் கோடி என்று தி.மு.க. ஆட்சியின்போது கணிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் புதிய பட்ஜெட், அந்தத் தொகையை 1.19 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

தி.மு.க. அரசு இலவச டி.வி. கொடுத்ததை கிண்டலடித்த இவர்கள், இலவச கிரைண்டர் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ரூபாவுக்கு அரிசி கொடுத்தால், இவர்கள் இலவசமாகவே கொடுக்கிறார்கள். அடுத்தது என்ன? இலவச பிரியாணியா?

ஒவ்வொரு ஆட்சியிலும் மாறிமாறி இதுவே தொடர்ந்தால் என்னாகும்? முதல்வர் ஜெயலலிதாவின் ‘பிறக்கும் குழந்தை’ உதாரணத்தையே நாமும் சொல்லிப் பார்க்கலாம்.

அம்மா ஆட்சியில் தமிழகத்தில் பிறந்த குழந்தை, வளர்ந்து பெரியவனாகி அமெரிக்கா சென்றால், அமெரிக்க அரசைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கும்! “என்ன நாடய்யா இது? வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம்!”

நன்றி விறுவிறுப்பு.

25 comments:

  1. ஒரே கேலிக்கூத்து தான் போங்க!

    ReplyDelete
  2. இலவச வாஷிங்க்மெசின் எல்லாம் இப்பவே சாதரணம் ஆகிடும்...சூப்பர் பதிவு

    ReplyDelete
  3. விடுங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படிதான் .....! நம்ம வாரிசுக்களையாவது இலவசங்களை வாங்காதவர்களாக வளர்ப்போம்.

    ReplyDelete
  4. ஜெயலலிதா இலவசத்தை கேலி செய்தது போய் - இனி கலைஞர் கேலி செய்வார்.

    ReplyDelete
  5. என்ன சொல்வதென்றே தெரியவில்லை....
    நல்ல பகிர்வு,,

    ReplyDelete
  6. எப்படியோ நம்பள பார்த்து பயப்படுரான்களா சரி தான்

    ReplyDelete
  7. இன்னும் என்ன என்ன விட்டுப்போச்சுன்னு தேடி கண்டு பிடிக்க ஒரு டீம் வேலை செய்யும் பாருங்க...

    ReplyDelete
  8. நாம கடன் வாங்கி பொருள் வாங்குன காலம் மலை ஏறிப்போச்சு..

    அரசே கடன் வாங்கி எல்லாத்தையும் வாங்கி குடுக்கும்..

    ReplyDelete
  9. நல்ல அலசல் தல

    ReplyDelete
  10. கடைசி பஞ்ச் சூபப்ர் கருன்!

    ReplyDelete
  11. நன்றி விறுவிறுப்பு...நன்றி கருண்...வரும் காலத்தில் அமெரிக்கர்கள் தான் இந்தியா தேடி வரக்கூடிய நிலை விரைவில்...

    ReplyDelete
  12. அரசாங்கத்தை,அரசியல் கட்சிகளைக் குறைசொல்லுவதை விட்டு நாம் நல்லவர்களாக,இலவசமக கொடுக்ககூடிய எதுவும் எனது தன்மானத்தை அடகுவைப்பதற்குச் சமமாகும் அதனை நான் பெறமாட்டேன் என்று சொல்லக்கூடிய ஆண்மை உள்ளவர்களாக இருந்து தன்மானத்தோடு வழ்வோம்,வ்ழிகாட்டுவோம்."ஏற்பது இகழ்ச்சி" அதை என்னைக்கு மறந்தோமோ ..அன்றே நாம் கீழிறங்கிவிட்டோம்...

    ReplyDelete
  13. மாப்பிள அரசியல் பதிவு அதனால ஓட்டு போட்டுட்டு ஒதிங்கீட்டேன்யா...

    ReplyDelete
  14. //தி.மு.க. அரசு இலவச டி.வி. கொடுத்ததை கிண்டலடித்த இவர்கள், இலவச கிரைண்டர் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ரூபாவுக்கு அரிசி கொடுத்தால், இவர்கள் இலவசமாகவே கொடுக்கிறார்கள். அடுத்தது என்ன? இலவச பிரியாணியா?//

    யோசிக்க வேண்டிய விஷயம் :)

    ReplyDelete
  15. What is the relation between the headline and the blog contents?

    ReplyDelete
  16. Inappropriate title...

    ReplyDelete
  17. நன்றி விறுவிறுப்பு....நல்ல பகிர்வு...நன்றி கருண்...

    ReplyDelete
  18. ஆளாளுக்கு காமெடி பண்றாங்க நண்பரே.....

    ReplyDelete
  19. தமிழகத்தையும், இந்தியாவையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமை கண் முன்னே உள்ளது என்பதனை நினைவுபடுத்தும் பதிவு.

    ReplyDelete
  20. அடுத்து என்ன இலவசமா
    கொடுப்பாங்கன்னு தமிழக
    மக்களை எதிபார்க்க வைக்கி
    ராங்களே?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"