Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/04/2011

இந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க?





ம்மா 
நான் இன்னைக்கு 
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
உங்க கூட 
வேலைக்கு வரேன்...


புத்தகப் பையையும் 
சாப்பாட்டுக் கூடையையும்
ஓரமாய் வைத்துவிட்டு 
அழ ஆரம்பித்துவிட்டாள்
ஆனந்தி...!



ண்டி 
சிறுக்கி மவளே
கொழுப்பாடி உனக்கு 
ஒன்னாவுது படிக்கும்போதே
இவ்வளவு அடமா?
இரு உன்னைய
அந்த பூச்சிக் காரன் கிட்ட 
புடுச்சி குடுக்கறேன் என்றாள்...!


த்தா அடிக்கடி 
பூச்சிக்காரேன்,பூச்சிக்காரேன் ன்னு 
பயமுறுத்துறியே ?
அவன் எப்படி இருப்பான் 
தேம்பியபடி கேட்டாள்
ஆனந்தி...!


முறுக்கிய மீசை,
சிவந்த கண்கள்,
முரட்டு உருவம்,,
எப்போதும் போதையில இருப்பான் 
அடிப்பான்,
காலால உதைப்பான்,
தப்பு பண்ணாலும், பண்ணாட்டியும்
போட்டு மிதிப்பான்,
அவன்தான் பூச்சிக் காரன் ...!


துவரை அழுது கொண்டிருந்த 
ஆனந்தி,
அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
பூச்சிக் காரனுக்கு 
இவ்ளோ பயப்படறியே 
நீ எப்படிம்மா 
அப்பாவ கல்யாணம் 
கட்டிகிட்ட?

38 comments:

  1. நல்லாருக்கு சார் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாத்தியாரே.... நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. சமத்து ஆனந்தி

    ReplyDelete
  4. நிறைய அப்பாக்கள் அப்படியில்லை இப்ப...நல்ல முடிவு...

    ReplyDelete
  5. அப்பாவின் கொடுமை பிள்ளையின் மனதில் பதிந்ததால் வந்த கேள்வி

    ReplyDelete
  6. பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...

    ReplyDelete
  7. பாப்பா கொடுத்த பல்பு !

    ReplyDelete
  8. ஏழ்மைக் குடும்ப சூழ் நிலையினை..கவிதை மனதை நெகிழச் செய்யும் வரிகளோடு, யதார்த்தம் கலந்து தாங்கி வந்திருக்கிறது.

    இப்படியும் எத்தனை குழந்தைகள் வாழ்வு, எத்தனை குடும்பங்கள் வாழ்வு குடி போதையின் விளைவால் தள்ளாடுகிறதோ.

    ReplyDelete
  9. அன்பின் கருண் - மழலையின் சிந்தனை எப்படிச் செல்கிறது பார்த்தீர்களா ? வீட்டில் நமது நடவடிக்கைகள் குழந்தையின் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. ஹ்ம்..கருன் இப்டில்லாம் எழுதுனா நாங்கல்லாம் என்ன எழுதுறது..?

    கவிதை அருமை கருன்.:-) வாழ்த்துகள் , இயல்புக்கவிதை ...!

    ReplyDelete
  11. கலக்கல் நண்பா
    பின்னிடீங்க

    ReplyDelete
  12. செண்ட்டிமெண்ட்டா போட்டு தாக்கறீரு?

    ReplyDelete
  13. பூச்சிக்காரர்களுக்கு நன்கு உரைக்கட்டும்.
    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  14. பூச்சிக்காரர்களுக்கு நன்கு உரைக்கட்டும்.
    நல்ல பகிர்வு சகோ

    ReplyDelete
  15. நல்ல கவிதை கருன் சகோ ...

    பிஞ்சு மனதின் ஆழத்தில் எத்தனை வேதனை !

    ReplyDelete
  16. எப்போதும் நல்ல அருமையான கவிதை, அழகான பதிவும் கூட.. பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  17. சூப்பர பாஸ்! அசத்தல்! :-)

    ReplyDelete
  18. எதார்த்தம்.

    ReplyDelete
  19. இயல்பாய் ஒரு கவிதை
    வாழ்த்துக்கள் வாத்தியாரே...

    ReplyDelete
  20. குழந்தைகளின் முன் எப்படி இருக்க வேண்டும் நடக்க வேண்டும்
    என்பதை அருமையான படைப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியிருக்கிறீர்கள்.
    அருமை.

    ReplyDelete
  21. ///அதுவரை அழுது கொண்டிருந்த
    ஆனந்தி,
    அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
    பூச்சிக் காரனுக்கு
    இவ்ளோ பயப்படறியே
    நீ எப்படிம்மா
    அப்பாவ கல்யாணம்
    கட்டிகிட்ட?// ஹிஹிஹி பாருங்கோ

    ReplyDelete
  22. :)ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பூச்சிக்காரர்கள்.

    ReplyDelete
  23. உலகத்தில் பரவிக்கிடக்கும் சமூக்த்தின் அவலம்...


    கவிதை வடிவில் அசத்தல்..

    ReplyDelete
  24. அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
    பூச்சிக் காரனுக்கு
    இவ்ளோ பயப்படறியே
    நீ எப்படிம்மா
    அப்பாவ கல்யாணம்
    கட்டிகிட்ட?// அருமையான வரிகள் .

    ReplyDelete
  25. படிப்பினை மிக்க கவிதை ,
    அருமை சகோ :)

    ReplyDelete
  26. குட் பதிவு பாஸ்

    ReplyDelete
  27. பூச்சிக்காரன் இப்படியா இருப்பான்.....
    haaaaha..


    அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
    பூச்சிக் காரனுக்கு
    இவ்ளோ பயப்படறியே
    நீ எப்படிம்மா
    அப்பாவ கல்யாணம்
    கட்டிகிட்ட?/


    நல்ல கவிதை,,
    வாழ்த்துக்கள்///

    ReplyDelete
  28. குழந்தை மனசு எவ்வளவுதெளிவு. நல்ல கவிதை.

    ReplyDelete
  29. கடைசி வரிகள்... நச்

    அருமை

    ReplyDelete
  30. எதார்த்தமான கவிதை... அருமை...

    ReplyDelete
  31. யதார்த்தமான அருமையான படைப்பு..

    ReplyDelete
  32. ethu kuzhanthaikalidam periyavargal eppadi nadanthu kozhalla vendum enpatharkana nalla padam.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"