Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/02/2011

இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா?


இடைவேளை நேரத்தில்
எல்லோரும் தின்கிறார்கள்
எனக்கும் ஏதாவது கொடுத்தனுப்பு ..


பள்ளி செல்லும்போதேல்லாம்
அடம் பிடிப்பான் என் மகன் ..


மனசு கேட்காமல்
வாங்கிக் கொடுத்தனுப்பிய பிறகு


மனசே சரியில்லை ..


என்மகன்
தின்கையில்
பக்கத்துச் சிறுவனிடம்
ஏதேனும் இருக்குமோ இருக்காதோ!!!

28 comments:

  1. நல்லாருக்கு.. கொடுத்தனுப்பும்போதே பகிர்ந்துண்ணச்சொல்லி, கொஞ்சம் கூடுதலாவே அனுப்புங்க :-))

    ReplyDelete
  2. அது எனக்கு வேண்டும்
    அம்மாவிடம் அடம் பிடித்தாக
    எங்கோ அகத்தில் உறகுகிறது
    அந்த சிறு ஞாபகம்

    இறுதியில் சொன்ன தாய்மனசு
    ம்ம்ம்ம் அருமை அருமை

    ReplyDelete
  3. கொடுத்தனுப்பும்போதே பகிர்ந்துண்ணச்சொல்லி, கொஞ்சம் கூடுதலாவே அனுப்புங்க


    ....Thats my opinion too.... :-)

    ReplyDelete
  4. உங்களது வெளிப்பாடுகள் நன்கு பரிமளிக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான கவிதை

    ReplyDelete
  6. நற்சிந்தனை நண்பரே.
    பகிர்ந்துண்ணும் பழக்கமும்
    சிறுவயதில் இருந்தே
    பழக்க வேண்டும்.

    ReplyDelete
  7. தங்களின் இரக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டிய குணம் .

    நல்ல கவிதை வரிகள் எழுத்தில் உயிர் உள்ளது .

    ReplyDelete
  8. உன்மைதான்யா.. ஆனா நீங்க பிள்ளைய விடும் பள்ளியில் அப்படி இருக்காதுன்னு நம்புவோமய்யா...

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  9. அமைதி சாரல் - உங்கள் அழகான கவிதைக்கு அழகான தீர்வும் சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  10. உங்களின் இந்த எண்ணத்தை உங்கள் மகனிடமும் விதைத்து விட்டாலே போதும். பிரச்சனை தீர்ந்தது.

    ReplyDelete
  11. உன் ஃப்ரெண்டுக்கும் கொடுத்து சாப்பிடுப்பான்னு சொல்லிட வேண்டியதுதான்...

    கவிதை மனநிலையை வெகுவாய் படம்பிடித்திருக்கிறது

    ReplyDelete
  12. நல்ல மனம் வாழ்க!

    ReplyDelete
  13. niRaiya koduththu vidungka

    ReplyDelete
  14. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. பக்கத்து சிறுவனுக்கும் சேர்த்துக்கொடுப்பனுங்க... நல்ல மனம் வாழ்க

    ReplyDelete
  16. சிந்தனை சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு. பக்கத்துக் குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ண பழக்கி விடுங்கள்.

    ReplyDelete
  18. அம்புட்டு நல்லவனா நம்ம மாப்ளே?

    ReplyDelete
  19. சொல்லி முடித்த விதம் அருமை.
    ஆனால் எல்லாருக்கும் இப்பிடி மனசு வருமா !

    ReplyDelete
  20. இதைப்படிக்கும் பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர் மனதில் எதோ உறுத்தும்.

    ReplyDelete
  21. அவ்வ...கருண் மாஸ்டர் ராக்ஸ்!!

    ReplyDelete
  22. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சிறிது கூடவே கொடுத்தனுப்பவும்

    ReplyDelete
  23. எல்லோரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் எனும் உணர்வின் வெளிப்பாடினை உங்கள் கவிதை தாங்கி வந்துள்ளது.

    ReplyDelete
  24. நல்ல சிந்தனை நாம் மகன் தின்னும் போது பக்கத்தில் இருப்பவன் ஏதும் இல்லாமல் இருப்பனே என்ற நல்ல எண்ணம் பளிச்சிடுகிறது பாராட்டுகள் தொடர்க ...........

    ReplyDelete
  25. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"