Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/04/2011

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. 

அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.


தொலைக்காட்சி பார்த்தவர்

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். 

அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார்.

திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம். உதவி தினமலர்.

19 comments:

  1. சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. புராணங்கள் பலவற்றை ஆராயும்போது தற்போது இருப்பதை விட ஒரு நவீன யுகம் இருந்து மறைந்ததற்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன ....

    ReplyDelete
  3. ivarrirku aatharam irukkirathaa? ithu ariviyala?varalaara?allathu veru entha vagai iyal ...nanbare sarru villakkinaal nalam

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை~~~!!!

    ReplyDelete
  5. நம் புராணங்களின் மதிப்பை அயல்நாட்டினர் புரிந்துகொண்டு விஞ்ஞானத்தில் சாதனை செய்கிறார்கள். நம்ம மக்களுக்குத்தான் அதன் அருமை புரிவதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான்.

    ReplyDelete
  6. அகத்தியரை பெருமைப்படுத்தும் பதிவு.

    ReplyDelete
  7. ///குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது,/// நண்பா ஒரு காலத்தில் பூமி தட்டை வடிவானது என்று மக்கள் நம்பிக்கொண்டு இருந்தார்கள் , ஆக அதை அடிப்படையாக கொண்டு அந்தகாலத்தில் எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் ....

    ReplyDelete
  8. வித்தியாசமான சிந்தனை தான்.

    ReplyDelete
  9. வித்தியாசமான சிந்தனை தான்.

    ReplyDelete
  10. ஹி ஹி
    இது நகைசுவை பதிவா சீரியஸ் பதிவா
    என்றே தெரிய மாட்டேன் என்கிறது
    பட் பதிவு கலக்கல் பாஸ்

    ReplyDelete
  11. //முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! //
    அபூர்வ சிந்தனை!

    ReplyDelete
  12. மாப்ள மூளைய ரொம்ப கசக்க ஆரம்பிச்சிட்டே சாக்கிரத.....எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு பூடுவோம்...சிந்திச்ச மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடு ஹிஹி!

    ReplyDelete
  13. உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் !//

    அருமையான சிந்தனை.

    ReplyDelete
  14. மாப்ள செம கண்டுபிடிப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  15. //நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, //

    நானோ டெக்னாலஜின்னா நானோ கார் தானே மாப்ள

    ReplyDelete
  16. ஆளாளுக்கு நல்ல பதிவு போட ஆரம்பிச்சுட்டாங்களே

    ReplyDelete
  17. அருமையான பதிவு

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"