Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/16/2011

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை



தமிழக மீனவர்களை, பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.


இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர். 


போன வாரம் , 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம், விசாரித்து வருகின்றனர்.


கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விழித்தேழுமா அரசு??

19 comments:

  1. அப்போ விளைவு ?

    ReplyDelete
  2. கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர்./

    கவனத்தில் கொள்ள வேண்டிய பகிர்வு.

    ReplyDelete
  3. உள்நாட்டுப்பாதுகாப்பு, எல்லைப்பாதுகாப்பு எல்லாமே இந்த செயல்படாத பிரதமரிடம் சொல்லி என்னத்தப்பண்ண சகோ. இந்தியா முழுமையையும் அந்நிய நாட்டிற்கு தாரைவார்க்காமல் இந்த காங்கிரஸ் ஓயாது.

    ReplyDelete
  4. இதிலாவது பாகுபாடு இல்லாமல்
    விசாரணை நடக்கவேண்டுமே?

    ReplyDelete
  5. இந்தியா இனி மேலாவது விழித்தெழுந்தால் சரி தான்.

    ReplyDelete
  6. இதுக்கு மேலயாவது தூங்குற மாதிரியே நடிக்கிறத விடுவானுங்களா?

    ReplyDelete
  7. அப்பாடி இப்பவாச்சும் விளித்து எழுந்தான்களே...

    ReplyDelete
  8. இவங்களுக்கு இதெல்லாம் உறைக்குமா?

    ReplyDelete
  9. பல்வேறு வழிகளில் சீனா இலங்கைக்குள் உள்நுளைந்துவிட்டது என்பது உண்மையே ...

    ReplyDelete
  10. நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயம். நல்லா கவனிக்கணும்.

    ReplyDelete
  11. அவர்கள் உணர வேண்டிய தருணம் இது

    ReplyDelete
  12. போட்டுத்தாக்குங்க

    ReplyDelete
  13. yaaru enna sonnalum intha indiyan athaiyellam kandukolla mattan

    ivanthaan vanthaarai vala vaikkum parambaraiyache

    aanal nammai vaalavaikkamattan

    ReplyDelete
  14. yaaru enna sonnalum intha indiyan athaiyellam kandukolla mattan

    ivanthaan vanthaarai vala vaikkum parambaraiyache

    aanal nammai vaalavaikkamattan

    ReplyDelete
  15. அடடா...திரை மறைவில் மூன்றாவது நாட்டின் சதியும் நடக்கிறதா. இந்திய அரசின் கண்களுக்கு இப்போதாவது ஞானம் பிறக்கிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"