Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/13/2011

காங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்



நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து, அணு உலைகளை விற்க முனைந்த அயல் நாட்டு அணு உலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக ‘அணு விபத்து இழப்பீடு சட்ட’த்தை நிறைவேற்றுவதில் காட்டிய உத்வேகத்தை நன்றாக கவனித்த எவருக்கும், பிரதமரின் அக்கறை நாட்டின் மீதா அல்லது தன்னை பிரதமர் ஆக்க பின் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் மீதா என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. 

அதே நேரத்தில் மக்களின் பிரச்சனைகள் என்று வரும்போதும், தனது அமைச்சரவை சகாக்களின் ஊழல் என்று வரும்போதும் அதற்கெல்லாம் தான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது என்று காட்டிக்கொள்வதிலும் அபாரத் திறன் கொண்டவர் நமது பிரதமர்.

தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் இந்த பிரதமரின் ஆட்சியில்தான் அதிகபட்ச ஊழல் நடந்துள்ளது என்பது மட்டுமின்றி, இந்தியாவின் வளங்கள் கொள்ளை போய்க்கொண்டிருப்பதும் தடையற்று நடந்துகொண்டிருக்கிறது. இவை யாவற்றையும் மறைக்க இவர் பயன்படுத்தும் ஒரே விஷயம் ‘இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது’ என்று புள்ளி விவரத்தை வெளியிடுவதுதான்.

நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்கிறீர்கள், ஆனால் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கிறது, அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி (பணவீக்கம்) குறைந்துகொண்டே போகிறதே என்று வினவினால், ‘இவற்றையெல்லாம் ஒரே நாளில் கட்டுப்படுத்தக் கூடிய மத்திரக்கோல் என்னிடம் இல்லை’ என்று சாமர்த்தியமான பதிலைக் கூறுவார்


வார்த்தைகளைப் பயன்படுத்தி வாய்ப் பந்தல் போடுவதிலும், பேச வேண்டிய வேளையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் கமுக்க அமைதி காப்பதிலும் இவர் வெளிப்படுத்தும் இராஜதந்திரம் பொருள் நிறைந்தது.

இப்படிப்பட்ட பிரதமர்தான், இதற்குமேல் அடிக்கடி மக்களிடம் பேச ‘சில’ ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். அவர்கள் கேட்ட ஒரிரு வினாக்களுக்கும் பதிலளித்து தான் ‘செயல்படும்’ பிரதமர்தான் என்று நிரூபித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார். பிரதமரின் வாய் ஜாலத்தை அறிந்திராத தமிழர்கள் அதனை புரிந்துகொள்ள முடியாமல் தலை சுற்றி நிற்கின்றனர்.

“இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அந்நாட்டில் வாழும் அனைத்துப் பிரிவு மக்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார். அப்படியானால் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசால் சம உரிமையுடன் நடத்தப்படவேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங் அரசு பொறுப்பேற்ற இந்த 7 ஆண்டுகளில் செய்தது என்ன?

கடந்த மாதம் 10, 11ஆம் தேதிகளில் இலங்கை சென்ற தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் சென்றக் குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசியது. இந்தச் சந்திப்பின்போது அந்நாட்டு அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ், இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரவீன் குமார் ஆகியோரும் இருந்தனர். 

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்சங்கர் மேனன், “இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று ராஜபக்சவை வலியுறுத்தியதாகக் கூறினார். ஆனால், நேற்று முன் தினம் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச, “சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தன்னை நிர்பந்திக்கவில்லை” என்று கூறினாரே! இதுதான் மன்மோகன் அரசு ‘தொடர்ந்து வலியுறுத்துவ’தன் இலட்சணமா?

“விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது. ஆனால் அதற்குப் பிறகும் தமிழர் பிரச்சனை மறையவில்லை” என்று மன்மோகன் கூறுகிறார். அதாவது மன்மோகன் அரசு எதிர்பார்த்தது விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தமிழர் பிரச்சனையும் அழிந்துவிடும் என்பதுதானே? 

அதற்காகத்தானே அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை முத்திரைக்குத்த வைத்து, அதற்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ‘எல்லா விதத்’திலும் உதவியது? ஆனால் புலிகள் அழிந்துவிட்டார்கள்(?), பிரச்சனை அழியவில்லை! 

இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கமென்றால், அதனை உறுதி செய்துக்கொண்டு பிறகு ராஜபக்ச நடத்திய போருக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசின் நோக்கம் வேறு. ஈழத் தமிழர்கள் பிரச்சனையை ‘முடிக்க’ சிங்கள இனவெறி ராஜபக்ச அரசுக்கு உதவி, அதன் மூலம் அந்நாட்டின் ‘நட்பை’ (சீனாவை புறந்தள்ள வைத்து) உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

“நீங்கள் வேறு எந்த நாட்டையும் நாட வேண்டாம், எல்லா உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்” என்றல்லவா... இரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தமிழினத்தை அழிக்க ராஜபக்சவுக்கு உதவினார்கள். இந்த உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே இலங்கைக்கு அரசுக்கு எதிராக பன்னாட்டு நடவடிக்கைகளை எதிர்க்கிறது இந்திய அரசு.

“தமிழர்கள் சுய மரியாதையுடனும், சம உரிமையுடைய குடிமக்களாகவும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான புதியதொரு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்” என்பதே இந்திய அரசின் விருப்பம் என்றால், அதனை ராஜபக்ச நடத்திய போருக்கு உதவியதன் மூலம் எவ்வாறு சாதிக்க நினைத்தீர்கள்? இன்றைக்கு போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே, அந்த இலக்கில் என்ன முன்னேற்றம் கண்டிருக்கிறீர்கள்?

ஆனால், அது “அவ்வளவு எளிதல்ல” என்று கூறியுள்ள மன்மோகன் சிங், “சிறிலங்க மக்கள் தொகையில் சூடான தலைகள் இருக்கின்றனர். சிங்கள இனவாதம் என்பது உண்மையே” என்று கூறுகிறார். என்னே விநோதம்! 

இலங்கையின் அரசியல் என்பதே சிங்கள பெளத்த இனவாதம் என்பதால்தானே அங்கு தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டார்கள்? அதற்கு எதிராக அவர்கள் சாத்வீக வழியில் போராடி தோற்ற நிலையில்தானே, தங்களை அழிக்கும் சிங்கள இனவெறி அரசிற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? 

இதைத்தானே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒப்புக்கொண்டு, அப்படி ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் குழு அனைத்திற்கும் ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்தார். இந்த உண்மை தெரிந்தும், தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்கு எல்லா வித்திலும் உதவியது ஏன்? இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன் என்று ராஜபக்ச கூறியதனாரே, அதன் பொருள் என்ன? இலங்கையில் இந்தியா போர் நடத்த என்ன அடிப்படை இருக்கிறது?

மன்மோகன் சிங் அரசின் நோக்கம், தமிழர்கள் அங்கு சம உரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதல்ல. தமிழர் நலனை அது உண்மையுடன் நேசித்திருந்தால், “இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் அங்குள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும்” என்கிற வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட நிலையை கடைபிடித்திருக்கும். 

அதையே அந்நாட்டிடம் வலியுறுத்தியிருக்கும், போருக்கு உதவியிருக்காது. அதைச்செய்யாமல், தமிழர் பிரச்சனையை பகடையாக்கி, அப்பிரச்சனையை அழிக்க இலங்கை இனவாத அரசுக்கு உதவி, அதன் மூலம் அந்நாட்டின் நட்பைப் பெற வேண்டும் என்றுதான் மன்மோகன் அரசு திட்டமிட்டது. 

அதனால்தான் அது இரண்டரை ஆண்டுக்காலத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலைக்குத் துணைபோனது. டெல்லியில் இருக்கும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களிடம் பேசிய இந்த விஷயத்தை இங்கு தமிழகப் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தால் இந்தக் குட்டு வெளிப்பட்டிருக்கும். ஆனால் பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு வசதியாக உண்மையை மறைக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

இலங்கை அரசுடன் இணைந்து தமிழினப் படுகொலை செய்த மன்மோகன் சிங் அரசு, சர்வதேசத்தால் குற்றம்சாற்றப்படும் இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சியில் இன்றுவரை இரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை உறுதி செய்யவே சிவ சங்கர் மேனன் தலைமையிலான குழு கொழும்பு சென்றது. அவர்கள் பேசியது வேறு, பேசியதாகச் சொன்னது தமிழர் பிரச்சனையை. அந்தக் கெட்டிக்காரன் பொய்தான் இரண்டு வாரத்தில் வெளிப்பட்டுவிட்டது.

ஆனால், இன்றைக்கு இவ்வளவு அக்கறையோடு ஈழத் தமிழர் பிரச்சனையை மன்மோகன் சிங் பேசக் காரணம், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த மரண அடி. இதே நிலை நீடித்தால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூடத் தேறாது என்பதை புரிந்துகொண்டு, வெற்றி பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க.வை தன் பக்கம் இழுத்துக்கொண்டு தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்ற எடுத்துள்ள முயற்சி.



அதனால்தான், வேறு எந்த மாநில முதலமைச்சருக்கும் வழங்காத வரவேற்பை அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றபோது வழங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த இல்லத்தில் இருந்து புதிய தார் சாலை போட்டு, காரை அனுப்பி அழைத்துவரச் செய்து சந்தித்துள்ளார்.


இதையெல்லாம் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் செயல்பட வேண்டும். டெல்லிக்காரன் கொடுக்கும் மரியாதையெல்லாம் காரியத்தில் கண் வைத்து செய்யப்படுவது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை ஊழலைக் காட்டி வளைத்து எப்படி தமிழினப் படுகொலையை முடித்தார்களோ அதேபோல் இப்போதும் ஒரு திட்டத்தைத் தீட்டி ஈழத் தமிழனின் உரிமைகளுக்கு சாவு மணி அடித்து விடுவார்கள். 


சிந்தியுங்கள் உறவுகளே.....

29 comments:

  1. வணக்கம் நண்பரே,

    உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள்.

    இதற்கு ஒரே வழி..
    தமிழகத்தைப் போலவே
    மத்தியிலும் ஆட்சி மாற்றமே
    என்பது எம் கருத்து.


    நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  2. அதற்காகத்தானே அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை முத்திரைக்குத்த வைத்து, அதற்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ‘எல்லா விதத்’திலும் உதவியது? ஆனால் புலிகள் அழிந்துவிட்டார்கள், பிரச்சனை அழியவில்லை!
    ///புலிகளுக்கு முன்னரும் பிரச்சனை இருந்தது புலிகள் அழிவிற்கு பின்னரும் பிரச்சனை இருக்கிறது. இங்கே பிரச்சனை புலிகள் அல்ல ,புலிகளால் ஏற்பட்டதே இந்த பிரச்சனை என்று சொல்லுவதும் தவறு.. பிரச்சனையால் உருவானவர்களே புலிகள்.

    ReplyDelete
  3. இவனுங்க என்னக்கி தமிழனுக்கு நல்லது செய்து எருகனுங்க ?

    ReplyDelete
  4. தன்னைச்சுற்றி நடப்பதே நம்ம பிரதமருக்குத் தெரியாது. பின்னாடி இருந்து அம்மா இயக்கினால் இயங்கும் தோல்பாவை பிரதமர் ஆட்சியில் நம்சகோதரர்களுக்கு எங்கே நியாயம் கி்டைக்கப் போகிறது? சாயம் வெளிக்கும் நாள் வெகுதூரம் இல்லை. தக்க பதிலடியை தமிழ்நாட்டு மக்கள்தான் தேர்தலில் தரவேண்டும்.

    ReplyDelete
  5. ////

    இதையெல்லாம் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் செயல்பட வேண்டும். டெல்லிக்காரன் கொடுக்கும் மரியாதையெல்லாம் காரியத்தில் கண் வைத்து செய்யப்படுவது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை ஊழலைக் காட்டி வளைத்து எப்படி தமிழினப் படுகொலையை முடித்தார்களோ அதேபோல் இப்போதும் ஒரு திட்டத்தைத் தீட்டி ஈழத் தமிழனின் உரிமைகளுக்கு சாவு மணி அடித்து விடுவார்கள்.

    //


    மிகவும் சரி

    ReplyDelete
  6. காந்தின்னு பேருக்கு பின்னாடி போட்டவனெல்லாம் காந்தி அல்ல....இப்போ பாரு மழை ஜோரா பெய்யிது....ஒவ்வொருத்தர் கலரும் கரையிது...இது மக்களுக்கு புரியணும் மாப்ள..இதுக்கு மேல சொல்றத்துக்கு ஒண்ணுமில்ல!

    ReplyDelete
  7. ஒன்றை இந்த சமுகம் புரிந்து கொள்ள வேண்டும் இந்த காட்டி கொடுக்கிற வெட்கமே இல்லாத கோமாளித்தனம் நிறைந்த காங்கரசும் சில கட்சிகளும் நம்மை அழுகிற வரை நமக்கும் இந்த நாட்டுக்கும் கேடுதான் எனவே இதை அழிக்க பாடுபடட்டும் மக்கள் ..........

    ReplyDelete
  8. முற்றிலும் சரி. இந்தியாவின் கிழக்கு பாகத்தை தவிர்த்து அனைத்து பக்கங்களிலும் எதிரிகள் தயாராக இருக்கிறார்கள். கிழக்கு பாகம் இயற்கை அன்னையால் அரணாக நமக்கு இருந்தது. முட்டாள் காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறான வெளியுறவு கொள்கையினால் இப்போது இல்லைஎன்றாலும் வெகு விரைவில் இந்த பகுதியிலும் ஆபத்து நெருங்குகிறது. ஒரு நாட்டு நிர்வாகம் செய்யும்போது அனைத்து பக்கத்தையும் திறனாக வைத்திருக்க வேண்டும். இந்த முட்டாள்கள் மூலம் இதனை எதிர்பார்க்க முடியாது. இல்லைஎன்றால் இரண்டு அக்னி ஏவுகணையில் கடலில் மூழ்கும் ஒரு நாட்டிடம் பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார்கள். முக்கிய காரணம் ராஜபக்செவிர்க்கும் ராஜீவ் காந்திக்கும் வித்தியாசம் தெரியாத சோனியா இருப்பதுதான்.

    ReplyDelete
  9. நல்ல துணிச்சலான அசத்தலான பதிவு .முடிந்தால் 5 ஓட்டு கூட போடுவேன் ...

    ReplyDelete
  10. உண்மை - தமிழன் எப்போது இதை புரிந்து கொள்வானோ?

    ReplyDelete
  11. @??????? ??????

    கண்டிப்பாக தருவார்கள்

    ReplyDelete
  12. @Karthee

    சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  13. 1.தமிழர்கள் இரண்டாந்தரப்பிரஜைகளாகவே நடாத்தப்படுகிறார்கள்.அவர்களின் கோரிக்கை நியாயமானதே.
    2.இலங்கையில் சிங்கள இனவாதம் தலையெடுத்துள்ளது.
    இவற்றை சொன்னதும் தற்போதைய இந்திய அரசுதான்.

    1.இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டியது அந்நாட்டின் பொறுப்பு.அவர்களே தீர்வுகாணவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

    என்று சொன்னதும் தற்போதைய அரசுதான்.

    "தமிழ்மக்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதில் இந்தியா அக்கறையுடன் செயற்படுகிறது."
    என்று சொன்னதும் இதே அரசுதான்.

    அவர்களின் சொந்தக்கருத்துக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துவைத்து பார்த்தால் இறுதியில் ஒரு மண்ணும் புரியாது.அது அவர்களின் சொக்கத்தங்க மேலிடத்தின் மூளைக்கோளாறோ அல்லது தமிழனை மடையன் என்று நினைத்ததன் விளைவோ அவர்களுக்குதான் வெளிச்சம்.
    கடந்த தமிழ்நாட்டு அரசுபோல அல்லாமல் புதிய ஆட்சிபீடமாவது கொஞ்சம் இந்த ஜாலங்களுக்குள் அகப்படாது துணிவுடன் தனது பெரும்பான்மையை பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென்பதேஅனைவருடையதும் அவா.

    ReplyDelete
  14. கந்தசாமி அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  15. இருங்க படிச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
  16. @???.??.??.??????

    இப்ப உள்ள தமிழ் நாடு அரசு சரியான பாதையில் தான் இருக்கு - தொடரனும் என்பதே ஆவா

    ReplyDelete
  17. இந்திய அரசு என்னதான் செய்தாலும் தலைகீழாக நின்றாலும் சிங்கள இனக்கொலைவெறி அரசு இந்தியாவிற்கு சாதகமாகவோ நட்பாகவோ இருக்காது. இது அங்கு தூங்கிக் கிடக்கும் அயோக்கிய அரசியல் வியாதிகளுக்கு புரியாதுள்ளது. புரிய வரும் போது இந்தியாவும் இல்லை. இந்திராகாந்தி, எம்ஜீயாருக்குப் பின் எந்த இந்திய அரசியல் வாதிகளும் தமிழருக்கு நன்மை செய்ய நினைத்ததில்லை. அது தமிழகத்து அரசியல் வாதிகளானாலும் சரி இந்திய மத்திய அரசுசாயினும் சரி என்றும் தமிழருக்கு சார்பாகவோ துணையாகவோ இருந்ததில்லை. இன்று தமிழக மக்களின் எழுச்சியின் வேகத்தால் ஜெயா அம்மையார் சிறிதளவாவது கவனமெடுக்கின்றார்.இனியும் இந்த காங்கிரஸ் என்னும் அரசு இருக்கும் வரை அது தொடரும். தமிழகத்தினைப் போல் ஒரு ஆட்சி மாற்றமே அதுவும் தமிழரின், இந்திய தேசத்தின் இன்றைய நிலை உணர்ந்த ஒரு கட்சியினாலேயே முடியும். அது சாத்தியப்டுமா?

    ReplyDelete
  18. //தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் இந்த பிரதமரின் ஆட்சியில்தான் அதிகபட்ச ஊழல் நடந்துள்ளது //
    கரெக்டு!

    ReplyDelete
  19. நிச்சயம் அடுத்த முறை காங்கிரஸ் -கு தோல்விதான்

    ReplyDelete
  20. தேவை ஆட்சி மாற்றம்.

    ReplyDelete
  21. மீண்டும் ஒரு சாட்டையடி நண்பரே

    ReplyDelete
  22. இந்திய இராணுவமும் நேரடியாக யுத்தத்தில் கலந்து கொண்டது . இதை ராஜபக்ச வெளியிடுவோம் என தற்போது மிரட்டி வருகிறது

    ReplyDelete
  23. தினமும் சிந்திக்க சொல்றியே....ம்ஹும்.

    ReplyDelete
  24. காங்கிரஸிற்கு காலங் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு வேளை தமது ஆட்சியை அடுத்த தேர்தலிலும் தக்கவைப்பதற்கான முன்னாயத்த வேலையாகவும் இச் செயற்பாடு அமையலாம் என்பது தான் என் கருத்து.

    ReplyDelete
  25. காங்கிரசின் செயல்பாடுகள் வெளுக்க
    ஆரம்பித்துவிட்டது
    மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    அடுத்த முறை ஆட்சிமாற்றம் நிச்சயம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"