Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/12/2011

ஒரு பெண் இப்படியும் இருப்பாளா?


ன்புள்ள அப்பாவுக்கு...
நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை 
வேண்டிக்கொள்கிறேன்.


அன்று,


தாமரைக் குளமும் 
பெருமாள் கோயிலும் 
பெரிதாய் இருக்கிறதென்று 
சொன்னீர்கள்...!


வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும் 
சின்ன காய்கறித் தோட்டமும் 
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!



பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில் 
வாழக் கொடுத்து வைக்க 
வேண்டுமென்று 
வக்கணை பேசினீர்கள்...!


மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக 
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!


மாப்பிள்ளையின் 
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள் 
சம்பந்தி வீட்டு பெருமை...!


மாப்பிள்ளை வீடு 
ரொம்ப அழகுதான் 
உறவினர்களின் உபசரிப்புக்கும் 
ஒரு குறையும் இல்லை...!


இங்கு 
நீங்கள் 
பார்க்கத் தவறியது 
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!


இருந்தாலும் பரவாயில்லை ...


இந்தக் கடிதத்தை 
அம்மாவிடம் 
படித்துக் காட்டும்போது 
அவரோடு நான் 
சந்தோஷமாகவே இருப்பதாக 
அவசியம் சொல்லவும்...!

48 comments:

  1. என்ன தல கவிதை எல்லாம் பின்னுது. பெண்கள் மனசை படிக்குறீங்களா?

    ReplyDelete
  2. மாப்ள இது வாழ வந்த பொண்ணு வாழ்ந்து கொண்டு இருக்கும் தாயிடம் சொல்ல வேண்டாம் எனும் கவிதையோ!

    ReplyDelete
  3. மிக யதார்த்தமாய் உண்மை நிலை சொல்லும் கவிதை. அழகு!

    ReplyDelete
  4. பெற்றோர்கள் மாப்பிள்ளையின் வசதி பார்ப்பதோடு நின்றுவிடுகிறார்கள்...!!

    வாழ சென்ற இடத்தில் ஒரு பெண்ணின் துயரம்.. கவிதை யதார்த்தம் >

    ReplyDelete
  5. பல பெண்களின் வாழ்க்கை இப்படி ஆக்கிவிட்டது மனசை பார்க்காமல் திருமணம் செய்ததால்

    ReplyDelete
  6. நிதர்சமான உண்மை

    ReplyDelete
  7. உண்மையை கவிதை வடிவில் படைத்தது பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. இந்த உலகமே புற அழகுக்கும் வெளிபகட்டையும் மட்டும் தான் பார்த்து மனிதனை எடை போடுகிறார்கள். மனதைப் பார்த்து மனிதனை யார் மதிக்கிறார்கள்? அருமையான கவிதை. தாலிகட்டியவன் மனசு அழுக்குன்னா வாழ்க்கையே அவலம்தான்.

    ReplyDelete
  9. இந்த உலகமே புற அழகுக்கும் வெளிபகட்டையும் மட்டும் தான் பார்த்து மனிதனை எடை போடுகிறார்கள். மனதைப் பார்த்து மனிதனை யார் மதிக்கிறார்கள்? அருமையான கவிதை. தாலிகட்டியவன் மனசு அழுக்குன்னா வாழ்க்கையே அவலம்தான்.

    ReplyDelete
  10. இந்த உலகமே புற அழகுக்கும் வெளிபகட்டையும் மட்டும் தான் பார்த்து மனிதனை எடை போடுகிறார்கள். மனதைப் பார்த்து மனிதனை யார் மதிக்கிறார்கள்? அருமையான கவிதை. தாலிகட்டியவன் மனசு அழுக்குன்னா வாழ்க்கையே அவலம்தான்.

    ReplyDelete
  11. அருமை அருமை
    சிவப்பு எழுத்தில் கொடுக்காவிட்டாலும்
    அந்த வரிகள் எங்களுக்குள் ஒரு
    சிலிர்ப்பை ஏற்படுத்தித்தான் போகும்
    சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பெண்களின் வாழ்க்கை சோகம் அழகிய கவிதை வடிவில்

    ReplyDelete
  13. கவிதைகளின் சரணாலயம் சார்
    அருமை
    நெல்லை பெ. நடேசன்
    துபாய்,
    அமீரகம்

    ReplyDelete
  14. யதார்த்த வரிகளில் யதார்த்தத்தை விளக்கும் கவிதை.
    நச்...

    ReplyDelete
  15. யதார்த்த வரிகளில் யதார்த்தத்தை விளக்கும் கவிதை.
    நச்...

    ReplyDelete
  16. உண்மையில் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். நெஞ்சை பிசையும் உண்மை.

    ReplyDelete
  17. அருமை..அருமை..எப்படி மாமூ இப்படி..சீக்கிரம் கவிஞர் ஆயிடுவீரு போலிருக்கே.

    ReplyDelete
  18. அருமையான கவிதை! எதார்த்தமான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. கவிதை-கருத்துடன்!!ம்ம்

    ReplyDelete
  20. அருமை. மனதை உருக்கிவிட்டது.

    ReplyDelete
  21. பொளந்து கட்டறீங்களே!

    ReplyDelete
  22. அருமையான இன்றைய யதார்த்த நிலை சொல்லும் கவிதை பாஸ்
    முடிவு மனசை பிசைகிறது பாஸ்

    ReplyDelete
  23. //நீங்கள்
    பார்க்கத் தவறியது
    அவர் மனசு அழகா
    என்பதை மட்டும்தான்...!//

    நெத்தியடி பாஸ்..
    பெண்னைப்பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது

    ReplyDelete
  24. வாழ்க்கையின் யதார்த்தம் அழகாக சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete
  25. ம்...கஸ்டம்தான் !

    ReplyDelete
  26. எதார்த்த வரிகளால் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. கவிதை மழை என்னை நனைத்ததே....!!!

    ReplyDelete
  28. //இந்தக் கடிதத்தை
    அம்மாவிடம்
    படித்துக் காட்டும்போது
    அவரோடு நான்
    சந்தோஷமாகவே இருப்பதாக
    அவசியம் சொல்லவும்...!

    //

    அடாடா...

    பெண்ணைப் பெற்றவரை மட்டுமல்ல மற்றவரையும் கலங்கச்செய்யும் கவிதை..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. இயல்பான வரிகளில் உணர்வை வெளிக்கொணரும் கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. வார்த்தைகள் வலிமை..அருமையான கவிதை..

    ReplyDelete
  31. வார்த்தைகள் வலிமை..அருமையான கவிதை..

    ReplyDelete
  32. //நீங்கள்
    பார்க்கத் தவறியது
    அவர் மனசு அழகா
    என்பதை மட்டும்தான்...!//

    மாப்ள சூப்பர்டா.. உன் கிட்ட புடிச்சதே இது தான் கவிதையா இருந்தாலும் எளிமையா அனைவருக்கும் புரியும் படி எழுதுவது சூப்பர் மச்சி

    ReplyDelete
  33. இங்கு
    நீங்கள்
    பார்க்கத் தவறியது
    அவர் மனசு அழகா
    என்பதை மட்டும்தான்...!


    இருந்தாலும் பரவாயில்லை ...


    அசத்தலான கவிதை...
    வாழ்த்துக்கள்,,,,

    !!உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ

    ReplyDelete
  34. நான் ரொம்ப லேட்டு பாஸ்...

    ReplyDelete
  35. இவ்வேதனை பெண்களுக்கு மட்டுமல்ல... பெற்றோரின் மீது பற்றுக்கொண்ட ஆண்களுக்கும் உண்டு எனபதை தெரிவித்துக் கொள்கின்றேன். பாசத்திற்காகவே வாழிக்கையில் வேஷமிட வேண்டிய கட்டாயம்! இந்நிலையினை நம் சந்ததியினருக்கு தராமலிருப்பது தான் உத்தமம்!

    ReplyDelete
  36. பார்க்கவேண்டியத பார்க்காம படோடோபத்தை ( ஆடம்பரத்தை ) பார்த்ததால் அனுபவிக்கும் கொடுமை

    யதார்த்தம் , கண்ணீர் மனதை தொடும் உணர்வு

    thulithuliyaai.blogspot.com

    ReplyDelete
  37. பெண்ணின் வலியின் உணர்வுகளை அழகான கவிதையாக படைத்திருக்கிறீர்கள்.....

    ReplyDelete
  38. வணக்கம் கருண்,
    புகுந்த வீட்டில் வேதனைப்படும் பெண்ணின் நிலையினை வசன கவிதையூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

    வார்த்தைகள் ஒவ்வொன்றுமே இன்றைய கால கட்டத்தில் மாமியார் வீட்டில் அவதிப்படும் பெண்களின் மன உணர்வினை வெளிப்படுத்தி நிற்கிறது.

    ReplyDelete
  39. ரொம்ப தாங்க்ஸ் உண்மையில் நடப்பது தானே. ம்ம் இன்னும் இன்னும்....

    ReplyDelete
  40. ரொம்ப தாங்க்ஸ் உண்மையில் நடப்பது தானே. ம்ம் இன்னும் இன்னும்....

    ReplyDelete
  41. மிக அருமையான கவிதை......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"