Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/04/2011

அரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக வீதிக்கு வருகின்றனர்?


ழல் தடுப்பு மசோதாவை உருவாக்கும்போது, காந்தியவாதி அன்னா ஹசாரேவையும் ஆலோசனைக்காக சேர்த்துக் கொண்டது, மத்திய அரசு. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவின் அறைகூவலால், டில்லியில் கூடிய மக்கள் வெள்ளத்தைக் கண்டு மிரண்ட மத்திய அரசு, வேறு வழியில்லாமல், சமூக ஆர்வலர்களையும் அழைத்துப் பேசியது.

"லோக்பால் மசோதா உருவாக்க மேற்கொண்ட பரீட்சார்த்த முறைகளை, இனி எப்போதும் பின்பற்ற மாட்டோம். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் நடந்ததை, இனிமேல் முன்னுதாரணமாக எடுத்துக் காட்ட முடியாது. மற்ற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடமும், லோக்பால் மசோதா குறித்து கருத்து கேட்கப்படும். 


அன்னா ஹசாரேவும், அவரது ஆதரவாளர்களும், யாருக்கும் கட்டுப்படாத, அரசல்லாத, தனி அதிகார மையத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர்' எனக் கூறியுள்ளார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல்.

அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், கெஜ்ரிவால், சாந்தி பூஷன் போன்றோர் முனையாவிட்டால், மத்திய அரசு ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிரான மசோதாவை, தூசி தட்டியிருக்குமா?ஊழல்வாதிகளை ஒடுக்க துப்பு இல்லாத மத்திய அரசும், சிபல்களும், சமூக ஆர்வலர்கள் மீது பாய்கின்றனர். அரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக வீதிக்கு வருகின்றனர்?

உங்களுடைய கருத்துகளையும் சொல்லுங்கள் உறவுகளே..

21 comments:

  1. =இன்னைக்கு என்னாச்சு? மாப்ள கருணும், விக்கி தக்காளியும் ஒரே மாதிரி அரசியலை தாக்கி இருக்காங்க.?

    ReplyDelete
  2. காங்கிரஸ் கட்சிக்கு நாட்டை ஆளும் தகுதி இல்லை. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு கொடுத்த மாதிரி படு கேவலமான தோல்வியை மக்கள் கொடுத்தால்தான் அவர்கள் உணருவார்கள். கபில்சிபல் மற்றும் பிரணாப் முகர்ஜியின் கருத்தை கேட்டால் முடவனுக்கும் இரவல் கை வாங்கி அடிக்கத்தோன்றும். அப்படி கடுப்பேத்துகிறார்கள்.

    ReplyDelete
  3. மாப்ள கேக்குறது நம்மோட உரிமை கொடுக்காம இருக்கறது அவங்களோட தொடை நடுங்கித்தனம்!

    ReplyDelete
  4. ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டுதான் அண்ணா ஹசாரேவுக்கு மதிப்பு அளிக்கப்பட்டது .மதிப்பு தொடருமா என்பது கேள்விக்குறியே

    ReplyDelete
  5. //ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டுதான் அண்ணா ஹசாரேவுக்கு மதிப்பு அளிக்கப்பட்டது .மதிப்பு தொடருமா என்பது கேள்விக்குறியே//


    அரசியல்ல நல்லவங்க என்பதே சந்தேகத்துக்குரியதுதான்..

    ReplyDelete
  6. இன்னும் விழிப்புணர்வுடன் நடுநிலையுடன் போரடா வேண்டும்

    ReplyDelete
  7. அரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக வீதிக்கு வருகின்றனர்?////

    உண்மை தான்

    ReplyDelete
  8. இன்றைக்கென்ன அரசியலா?....ஆகா
    எனக்கும் இதுக்கும் ஒத்தே வராது.
    உண்மையச் சொல்லீற்றன்.போயிற்று
    வாறன் அண்ணாச்சி................

    ReplyDelete
  9. //அரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக வீதிக்கு வருகின்றனர்?//
    அதானே!

    ReplyDelete
  10. உங்க பாயிண்ட் சரிதான்

    ReplyDelete
  11. //காங்கிரஸ் கட்சிக்கு நாட்டை ஆளும் தகுதி இல்லை. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு கொடுத்த மாதிரி படு கேவலமான தோல்வியை மக்கள் கொடுத்தால்தான் அவர்கள் உணருவார்கள். கபில்சிபல் மற்றும் பிரணாப் முகர்ஜியின் கருத்தை கேட்டால் முடவனுக்கும் இரவல் கை வாங்கி அடிக்கத்தோன்றும். அப்படி கடுப்பேத்துகிறார்கள்.//

    REPEAT

    ReplyDelete
  12. உண்மை தான் பாஸ் ஆனால் எந்த நாட்டு அரசு தான் இங்கே ஒழுங்காக இருக்கிறது ...

    ReplyDelete
  13. ஊழல்வாதிகளை ஒடுக்க துப்பு இல்லாத மத்திய அரசும், சிபல்களும், சமூக ஆர்வலர்கள் மீது பாய்கின்றனர்.
    True :)

    ReplyDelete
  14. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

    கொள்ளைகார பதிவர்கள்

    ReplyDelete
  15. தங்கள் கருத்து மிகச் சரி
    கடிவாளம் இல்லாத குதிரை போல
    அரசியல்வாதிகள் தறிகெட்டு ஓடத் துவங்கிவிட்டார்கள்
    சமூக ஆர்வலர்களோ நீதிமன்றங்களோ தலையிட்டு
    மூக்கணாங்கயிறு இடவில்லையெனில் நாட்டை
    குப்புறத்தள்ளி குழிதோண்டி புதைத்துவிடுவார்கள்
    தரமான நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. சரியான கேள்விதான் கேட்டிருக்கீங்க..:)

    ReplyDelete
  17. நல்ல கேள்வி தோழரே
    இக் கேள்விக்கு ஏற்ற பதில்
    இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
    என்ற வள்ளுவன் வாக்கே உரிய பதிலாகும்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"