Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/28/2011

இப்படியும் ஒரு மாணவியா? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் - 6




சீருடை அழுக்கென்று
சினந்தேன் 
அந்த மாணவியை‌...

மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தாள்..

உடம்புச் சூட்டில்
உலர்ந்துவிடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா..

காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈர விழியில் நனைந்த
ஓருடை..


57 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஈர விழியில் நனைந்த
    ஓருடை..
    என்ன சொல்வத்தேன்றே தெரியவில்லை சகோ

    ReplyDelete
  3. தமிழனத்தின் இன்னோரு முகம்...

    வருமையின் உச்சம்..
    அழகிய கவிதை...

    ReplyDelete
  4. காய்ந்த வயிற்றிலும்
    உலரவில்லை
    ஈர விழியில் நனைந்த
    ஓருடை..//

    விழிகளை ஈரமாக்கிய
    ஒரு கவிதை...

    ReplyDelete
  5. வறுமையில் காய்ந்த வயிறு. அதனால் காயுமா சட்டை?

    ReplyDelete
  6. அருமையான கருப்பொருள்.

    ReplyDelete
  7. கசக்கிய ஈரச் சீருடையுடன்
    மறுநாள் பள்ளி வந்தவள்

    அவளின் கல்வி ஆர்வம் மெய் சிலிர்க்கிறது தோழரே

    காய்ந்த வயிற்றிலும் உலராத சீருடை

    அவள் வறுமையை இதைவிட எப்படிச் சொல்ல முடியும் தோழரே

    உங்களின் சிறப்பான வரிகளில் ஒளிர்கிறாள்
    அந்த மாணவி

    அருமை மிகவும் அருமை

    ReplyDelete
  8. மனதை நெகிழ்த்தும் கவிதை ! நன்றி கருன் !!

    ReplyDelete
  9. நன்றாக உள்ளது கவிதை.

    ReplyDelete
  10. கொடிது கொடிது
    வறுமை கொடிது
    அதனினும் கொடிது
    இளமையில் வறுமை..

    கண்களை குளமாக்கிய கவிதை.

    ReplyDelete
  11. வறுமையை ஆழமாக உணர்த்தும் சிறந்த கவிதை

    ReplyDelete
  12. கண்ணில் கண்ணீர்.......!!!

    ReplyDelete
  13. யோவ் வாத்தி, அந்த பிள்ளைக்கு நாலு செட் துணி எடுத்து குடுத்தீரா இல்லையா...??? அதை சொல்லும் ஒய்....??

    ReplyDelete
  14. ஏழ்மையை உணர்த்தும் கவிதை .

    நன்றி கருன் பகிர்வுக்கு

    ReplyDelete
  15. இளமையில் வறுமை
    கொடுமையிலும் கொடுமை.

    வேதனை தந்த கவிதை....

    ReplyDelete
  16. அழுவாச்சி காவியம்...

    ReplyDelete
  17. பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்களின் நிலைமை இது தான்

    ReplyDelete
  18. காய்ந்த வயிற்றிலும்
    உலரவில்லை
    ஈர விழியில் நனைந்த
    ஓருடை.. அருமையான கவிதை

    ReplyDelete
  19. மாப்ள அருமைய்யா!

    ReplyDelete
  20. வலி மிகுந்த கவிதை

    ReplyDelete
  21. வாழ்த்துகள் ... நல்ல கவிதை

    ReplyDelete
  22. ஒரு ஆசிரியர் என்ற வகையில் இவ்வாறு பல சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள்...

    ReplyDelete
  23. ஈர விழியில் நனைந்த
    ஓருடை..

    arumai....

    http://tamilpadaipugal.blogspot.com/

    ReplyDelete
  24. மழை காலமோ ! ! பள்ளி விட்டதும் கசக்கி துவைத்தால் மறுநாள் காய்ந்து விடுமே ! ஈரத்துடன் வர காரணம் என்ன ??

    ReplyDelete
  25. வறுமையிலும் பள்ளிக்கு அனுப்பும் அந்த தாய்க்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  26. உள்ளேன் ஐயா

    ReplyDelete
  27. namathu makkalukku poruthum varamai nillai atharkum poruthum namathu tamil vaarthaikal.Ethu muthalail vantathu edru sinthika vendiya nilamai perambaala namakku.

    ReplyDelete
  28. உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி
    http://www.valaipathivagam.com

    ReplyDelete
  29. //காய்ந்த வயிற்றிலும்
    உலரவில்லை
    ஈர விழியில் நனைந்த
    ஓருடை..//
    மிக மேம்பட்ட வரிகள்!

    ReplyDelete
  30. //காய்ந்த வயிற்றிலும்
    உலரவில்லை
    ஈர விழியில் நனைந்த
    ஓருடை..//

    அய்யோ..

    ReplyDelete
  31. கறுப்பு பணங்களாக புழங்குவதும் கோடி கணக்கில் ஊழல் கொடிகட்டி ப்றப்பதும் இருக்க கூட இந்த நாட்டில் இன்னும் எத்தனையோ இது போல ஏழைகள் உடுத்த துணியில்லாமலும், உண்ண உணவில்லாமலும் தவிப்பது கொடுமை தானே நண்பா... கவிதையில் சரியாக உணர்த்தியுள்ளீர்கள்....

    ReplyDelete
  32. நல்லாயிருக்குய்யா.

    ReplyDelete
  33. ஓர் உண்மை நிலையினை கவி வடிவில் சிறப்பான வார்ப்பு .

    ReplyDelete
  34. கவிதை நன்று வாழ்த்துக்கள் சகோ.....

    ReplyDelete
  35. இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமை....

    ReplyDelete
  36. இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமை......

    ReplyDelete
  37. அருமையாய் இருக்கிறது வறுமையை பற்றிய கவிதை.

    ReplyDelete
  38. கொடிது கொடிது
    வறுமை கொடிது
    அதனினும் கொடிது
    இளமையில் வறுமை..

    ReplyDelete
  39. வலியை வரிகளில் சொல்லியுள்ள விதம் அருமை, கருன்.

    ReplyDelete
  40. காய்ந்த வயிற்றிலும்
    உலரவில்லை
    ஈர விழியில் நனைந்த
    ஓருடை..//shocking words

    ReplyDelete
  41. மனதை நெருடுகிறது....வலிமிகுந்த வரிகள்...

    ReplyDelete
  42. வாசித்தவர்களின் விழிகளை நனைத்த கவிதை !

    ReplyDelete
  43. மனதைக் கனக்கச் செய்யும் வரிகள் சகோ,

    நேற்று மொபைலில் கமெண்ட் போட்டதால், டெம்பிளேட் கமெண்டுடன் எஸ் ஆகிட்டேன், மன்னிக்கவும்.

    என்ன சொல்ல. எம் அரசியல்வாதிகள், ஆன்மீகத்தின் பெயரால் சொத்துக் குவித்து வைத்திருப்போரின் பாராமுகம் தான் இவற்றுக்கெல்லாம் காரணம்.

    ReplyDelete
  44. மனதைத் தைத்தன.. வரிகள்
    கண்களின் ஈரம் இன்னும் காயாதது போல....

    ReplyDelete
  45. முதல் 8 வரிகள் ஏழ்மையின் இயலாமையை மிக அழகாக செதுக்கியிருக்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள்..


    ////காய்ந்த வயிற்றிலும்
    உலரவில்லை
    ஈர விழியில் நனைந்த
    ஓருடை..///

    இதில் கடைசி இரண்டு வரிகள் புரியவில்லை நண்பரே!

    பசிக்கொடுமையில் ஈரதுணியை வயிற்றில் கட்டிக்கொள்வார்கள்..

    அவள் அணிந்திருக்கு உடையே ஈரத்துணிதான்...

    இருந்தும் அவள் பசி அடங்கவில்லை என்பதை கூறுகிறீர்களா?! அல்லது வேறு ஏதேனும் விளக்கம் இருக்கிறதா..

    எழுதியவரின் மனவோட்டத்தை புரிந்துகொண்டால் கவிதையின் அழகை இன்னும் ருசிக்கமுடியும்...

    ReplyDelete
  46. please tell me who is that poor girl with address. I have some thing to donate to that poor.


    call me in 09916102123.

    Lt Col Raghupathi(Retd)

    ReplyDelete
  47. கடைசி வரிகள் மனசை என்னமோ பண்ணுதுய்யா!!

    ReplyDelete
  48. dont know what to say.

    really super..

    vaalga valamudan.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"