Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/22/2011

சில தண்டனைகள் இடம் மாறி விடுகின்றன - பள்ளியில் நடந்த சில உண்மைகள் - 4



 நேற்று :


கெட்ட வார்த்தை 
பேசினான் என்று 
அடித்தேன் அவனை ..
அழுதுகொண்டே கேட்டான் 
அது கெட்ட வார்த்தையா சார் 
அப்படின்னா அர்த்தம் என்ன?


உறைத்தது எனக்கு..



நான் சொல்லவில்லை என்றாலும் 
பயமாய் இருந்தது 
வேறு யாரிடமிருந்தாவது 
அறிந்து கொள்வானோ 
அர்த்தத்தை ...


இன்று:


அந்த வகுப்பை 
கடந்து போகையில்
காதில் விழுந்தது 
கெட்ட வார்த்தை பேசியதற்காய்
அடி வாங்கிய சிறுவனின் குரல்,
ஊட்ல அம்மாவும், அப்பாவும்
இப்படித்தான் பேசறாங்க தெனமும்..


சார் தானே சொல்லிக் கொடுத்தார்
பெத்தவங்களை வழிகாட்டியா
வேச்சுக்கோன்னு...


உறைத்தது எனக்கு..


அவ்வப்பொழுது 
சில தண்டனைகள்
இடம் மாறி விடுகின்றன..

28 comments:

  1. அருமையான மெசேஜை கவிதை மழையில் பொழிந்து தள்ளி விட்டீர்கள்.சூப்பர்,

    ReplyDelete
  2. பெற்றவர்களின் தவறான பேச்சுக்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையே முடக்க கூடிய விஷயம்னு சொல்லி இருக்கேங்க வாத்தி நன்றி!

    ReplyDelete
  3. நம்மை பார்த்துத்தான் பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றன. தண்டனைகள் இடம் மாறி விடுகிறது.

    ReplyDelete
  4. பெற்றோர்கள் சரியில்லையென்றால் இப்படித்தான்.....


    நெருடும் கவிதை....

    ReplyDelete
  5. அப்படீன்னா அடுத்து அடி பையனோட அப்பா அம்மாவுக்கா ?

    ReplyDelete
  6. உறைக்கிறாற்போல் தெளிவான பதிவு
    தவறு செய்ய தூண்டுபவர்கள் தான்
    அதிக தண்டனை பெற வேண்டும்.
    பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின்
    நல்வாக்குகளை எண்ணி
    நல்ல விஷயங்களையே பேச வேண்டும்.

    அருமையான பதிவு நண்பரே,

    ReplyDelete
  7. உண்மையான கவலை

    ReplyDelete
  8. மாணவன் கெட முக்கிய காரணம் ( தவறான )பெற்றவர்கள் மற்றும் ( தவறான ) ஆசிரியர்கள்

    ReplyDelete
  9. நீரைய விழயத்தை உணர்ந்து எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  10. இடம் மாறிய தண்டனைகள் மனம் வருந்துவதைத் தவிர்க்கமுடியவில்லை...

    ReplyDelete
  11. ஆசிரியர்களும்,
    பெற்றோர்களும் - குழந்தைகளுக்கு
    ரோல் மாடல் என்பதை மறக்கக் கூடாது.

    நன்றி..

    ReplyDelete
  12. //அவ்வப்பொழுது
    சில தண்டனைகள்
    இடம் மாறி விடுகின்றன..//

    ஆஹா அற்ப்புதம் கரூண். பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  13. ரொம்ப சூடு நண்பா

    குசந்தைகள் முன்னாடி என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாதுன்னு இன்னும் பெத்தவங்களுக்கு தெரியலன்னு நச்ன்னு சொல்லுது உங்க வரிகள்...

    ReplyDelete
  14. பல வீடுகளில் வழிகாட்டிகள் தவறான வழியில் செல்கிறார்கள்....
    மாற்றம் தேவை.....
    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

    ReplyDelete
  15. எல்லா இடத்திலும் எல்லாம் பொருந்தாது என்பதை எளிமையாகவும் அருமையாகவும் சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete
  16. //அவ்வப்பொழுது
    சில தண்டனைகள்
    இடம் மாறி விடுகின்றன..//


    வார்த்தைகளில் அர்த்தங்கள் பல ஒளிந்துள்ளன... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அந்த கொழந்தைங்க கைல ஒரு கம்பு கொடுத்து சொல்லி கொடுத்தவங்கள அடிக்க சொல்லிட்டா என்ன? :)

    நல்ல சிந்தனையை புகட்டும் கவி வரிகள்.... தலைப்புக்குள்ளேயே111
    ஒளிஞ்சுருக்கு கவிதையின் கரு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ///சார் தானே சொல்லிக் கொடுத்தார்
    பெத்தவங்களை வழிகாட்டியா
    வேச்சுக்கோன்னு...// ரொம்ப பொல்லாத பசங்கள் ;-)

    ReplyDelete
  19. தெரியாத விஷயத்தையும் குழந்தைகளுக்கு நாங்கதான் சொல்லிக்கொடுக்கிறோமா !

    ReplyDelete
  20. அறிவுரை சொல்லி சில சமயம் வாத்தி மாட்டிக்கிறாரு...

    ReplyDelete
  21. போட்டு தாக்கிட்டீங்க கருன்... நல்ல பாடம் அனைத்து பெற்றவர்களுக்கும்
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  22. வேரை பிடுங்காமல் செடியை வெட்டி என்ன பயன்

    ReplyDelete
  23. //அவ்வப்பொழுது
    சில தண்டனைகள்
    இடம் மாறி விடுகின்றன..//
    உண்மை!

    ReplyDelete
  24. இது ஒரு வேதனைக்குரிய விடயம் இதில் மாற்றம்
    வரவேண்டும் என்றால் முதலில் பெரியவர்கள் இதைக்
    கைவிட வேண்டும்.குறைந்தபட்சம் தங்களின் எதிர்கால
    சந்ததியினரின் நலன்கருதியாவது.பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  25. உண்மைதான் கருன்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"