Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/12/2011

விரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்?!



சுப்ரீம் கோர்ட், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில்? மேற்கொள்ளும் நடவடிக்கையைப் போல், தமிழகத்தில் நடந்துள்ள, மிகப் பெரிய குற்றமான நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், எந்த உயர் அந்தஸ்தில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும்.


தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும், தனிப்பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அத்தனையும் தீர விசாரணை செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கே மிகுந்த காலம் தேவைப்படும் என்றே தோன்றுகிறது.



பணிச் சுமையால் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படும். மேலும், குற்றம் புரிந்தவர்களும், சுப்ரீம்கோர்ட் வரை சென்று, கால விரையம் ஏற்படுத்துவர்.நில மோசடிப் புகார்களின் விசாரணையை முடித்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழக்குகளையும் ஒருங்கிணைத்து, ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில், தனிப்பிரிவு ஏற்படுத்தி, தொடர்ந்து விசாரிக்க வேண்டும். 


யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லாமல், விசாரணைக்கான காலம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், போதுமான சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்து, விரைந்து நீதி வழங்கி, இழந்த நிலங்களை மீட்க ஆவன செய்ய வேண்டும். அப்போது தான், மோசடி பேர்வழிகளிடமிருந்து விளை நிலங்களை மீட்க முடியும். விரைந்து நீதி வழங்குவதில், தமிழகம் முன்மாதிரியாக திகழும்.

27 comments:

  1. இது நம் பேராசை என்றே கருதுகிறேன் நண்பா..

    ReplyDelete
  2. உணவில் மாற்றம்
    உடையில் மாற்றம்
    பண்பாட்டில் மாற்றம்
    பணியில் மாற்றம்.


    அரசியலில்..????????

    ReplyDelete
  3. எல்லோருக்கும் இதே ஆசை இருக்கு நண்பா!

    ReplyDelete
  4. எது எப்படியோ எங்கள் தமிழகத்து உறவுகளுக்கு நல்லது நடந்தால் சரி.

    ReplyDelete
  5. யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லாமல், விசாரணைக்கான காலம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், போதுமான சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்து, விரைந்து நீதி வழங்கி, இழந்த நிலங்களை மீட்க ஆவன செய்ய வேண்டும். அப்போது தான், மோசடி பேர்வழிகளிடமிருந்து விளை நிலங்களை மீட்க முடியும்.

    நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  6. யோவ் என்னாச்சுய்யா இன்னைக்கு எல்லா பதிவுக்கும் நான்தான் தமிழ்மணம் இணைச்சி ஓட்டு போட்டுட்டு இருக்கேன், எனக்கு வேற வேலையே இல்லையா ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  7. தமிழகம் பின்மாதிரியா இல்லாமல் இருந்தா சரிதான்...

    ReplyDelete
  8. பாசிடடிவ் திங்கிங்காகவே பார்ப்போம்... ஆம் சாதிக்கமுடியும்

    ReplyDelete
  9. மோசடிப் பேர்வழிகளிடமிருந்து நிலங்களை மீட்பதற்கு தமிழகம் மணி கட்டியிருக்கிறது..

    நல்லதொரு முயற்சி.
    விரைவில் பல மக்களுக்கு இதன் மூலம் பயன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. ஹ்ம்ம் நல்லது நடந்தா சரிதான்..

    ReplyDelete
  11. இந்த மாதிரி அதிசயங்கள் நடந்தால் சரிதான். மக்களுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  12. இந்த மாதிரி அதிசயங்கள் நடந்தால் சரிதான். மக்களுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  13. நல்லதே நடக்கட்டும்....

    ReplyDelete
  14. விட்டதைப்பிடித்த மாப்ளைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. மாற்றம் தெரிகிறது, தொடருமா என்று பார்ப்போம்.......

    ReplyDelete
  16. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

    ReplyDelete
  17. //
    தமிழகம் முன்மாதிரியாக திகழும்.
    //
    நடந்தா சந்தோசம்

    ReplyDelete
  18. நல்லது நடந்தா நல்லாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  19. நல்லதே நடக்குமென
    நம்புவோமாக!

    த.ஓ11
    தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போல நேற்று ஐய வினா
    எழுப்பி விட்டு விடையை என் வலை
    யில் போட்டும் வரவில்லையே
    ப்லவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. அப்போ முன் மாதிரியா விளங்கவே விளங்காதுன்னு சொல்ல வர்றீங்களா?

    ReplyDelete
  21. விளங்குனாச் சரி தான்.

    ReplyDelete
  22. இந்த மாற்றம் தொடரனும் என்பதே என் ஆசை

    ReplyDelete
  23. கேட்டக நல்லா தான் இருக்கு ஆனா..??

    ReplyDelete
  24. இந்த சிறுதாவூர் மேட்டர் என்ன ஆகும்?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"