Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/14/2011

ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!


தையோ தேடுகையில்
யதேச்சையாய்க் கிடைத்தது
நான் உனக்கு
அனுப்பாமல் விட்ட
கவிதைக்   கடிதம்  ஒன்று ...!

சில செய்திகளை
சொல்லியிருக்கக் கூடும்
சில இடைவெளிகளை
நிரப்பியிருக்கக்கூடும்
அந்த  கடிதம்  ...!

னுப்பவும் இயலாமல்,
கிழிக்கவும் முடியாமல்,
அந்தக்  கவிதைக்  கடிதம்
இப்போதும்  என்னிடமே,
இருக்கிறது ....!

ரு  காதலின் சவப்பெட்டியாய் ...!

32 comments:

  1. மாப்ள உனக்கு என்னய்யா ஆச்சி...ஏதாவது வேண்டுதலா...இப்படி கவித போட்டு கண்ணு கலங்குரீரே!

    ReplyDelete
  2. கனமான கனக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  3. சரி விடுய்யா, மனோ மாதிரி ஒரு ஃபிகரை மட்டும் லவ்வுனாத்தான் சோகம், நீ தான் பல ஃபிகரை கை வ்சம் வெச்சு இருக்கியே? அப்புறம் என்ன?” டிஸ்கி - அந்த தகவலை எனக்கு அள்ளி வழங்கியது விக்கி தக்காளி ஹி ஹி

    ReplyDelete
  4. மனமே கலங்காதே...

    இது உங்க அனுபவமில்லையே

    ReplyDelete
  5. "சி.பி.செந்தில்குமார் கூறியது...

    சரி விடுய்யா, மனோ மாதிரி ஒரு ஃபிகரை மட்டும் லவ்வுனாத்தான் சோகம், நீ தான் பல ஃபிகரை கை வ்சம் வெச்சு இருக்கியே? அப்புறம் என்ன?” டிஸ்கி - அந்த தகவலை எனக்கு அள்ளி வழங்கியது விக்கி தக்காளி ஹி ஹி"

    >>>>>>>>>>

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்யா..ஏன் இப்படி சொல்லிட்டு திரியிற ஹிஹி!

    ReplyDelete
  6. மனச்குள்ள எதையும் பூட்டி வைக்காதிங்க ...
    காதலை மட்டும் அல்ல
    சில சமயம் மன்னிப்பை கூட
    உடனே கேட்க வேண்டும்

    ReplyDelete
  7. நல்லாவே சொன்னிங்க விக்கி நீங்க
    எப்பவுமே சோகமா-- வேண்டாங்க
    நல்ல காதலை வாழ விடுங்க

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. உணர்வுகளின் வலியை நன்கு வெளிப்படுத்தும் அசத்தலான் கவிதை.

    ReplyDelete
  9. சார் மனச தளர வீடாதீங்க சார்!....
    இந்த ஏரியாவில எப்புடியும் இன்னொரு
    ஆள் போக ரெடியா இருப்பாங்க.
    அவங்கமூலமா கொடுத்து அனுப்பீடுங்க..
    சரீங்களா.....ஹி...ஹி...ஹி.......
    கவிதை நன்றாகவே உள்ளது வாழ்த்துக்கள்
    சகோதரரே......

    ReplyDelete
  10. மிகவும் அருமை. நீங்கள் தவறவிட்டது எனக்கும் வலிக்கிறது. அழகான கவிதை. அழகான வெளிப்பாடு

    ReplyDelete
  11. அவ்ளோ .............ஃபீலிங்கா ?

    ReplyDelete
  12. அனுப்பவும் இயலாமல்,
    கிழிக்கவும் முடியாமல்,// அவஸ்தையாய் உணரும் தருணங்கள்..
    அருமை..

    ReplyDelete
  13. /அனுப்பவும் இயலாமல்,
    கிழிக்கவும் முடியாமல்,
    அந்த கவிதை கடிதம்
    இப்போது என்னிடமே,
    இருக்கிறது ....! //

    அழகான வரிகள்...

    ReplyDelete
  14. ஆஹா எவ்வளவு வலியை உணர்த்தினிற்கும் ஒரு கவிதை? ”காதலின் சவப்பெட்டி” அருமையான சொல்லாட்ல்!

    ReplyDelete
  15. அனுப்பவும் இயலாமல்,
    கிழிக்கவும் முடியாமல்,
    அந்த கவிதை கடிதம்
    இப்போது என்னிடமே,
    இருக்கிறது ....!
    இப்படிதான் சில கடிதங்கள் படிக்கபடமலும் கிழிக்கபாமலும் இதயத்தை கனமாக்கி கொண்டு மரணத்தையும் துனையாகிகொண்டு மனிதத்தை மரித்துபோக செய்யும் . இவற்றை கவனமாக கையாண்டு மனிதத்தை வென்றெடுக்கவேண்டும்.

    ReplyDelete
  16. வலிகள் நிறைற்த கவிதை வரி...

    ReplyDelete
  17. அன்பின் கருண் - கவிதைக்கு உயிர் வேண்டாமா ? மெய்யை விட்டு விட்டீர்களே ! தனியாக அல்லவா உயிர் நிற்கும் ! நல்ல் கவிதை - நல்ல சிந்தனை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. தலைப்பு சவப்பெட்டிதான் ஆனாலும்
    கவிதை உயிரோட்டமாய் உள்ளது
    நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. கனமான வலிகளை கவிதைமூலமாக சொல்லி இருக்கிங்க.

    ReplyDelete
  20. இப்படி கவிதை எழுதி அதை மெயில்ல அனுப்பி .... ஏம்பா உனக்கு இவ்ளோ பெரிய கஷ்டம்

    ReplyDelete
  21. என்ன ஆச்சுங்கண்ணே..??? ஒரே பீலிங்க இருக்கு..
    உங்ககிட்ட ஒரு கேவி உங்களுக்கு டைம் மெசின் ஒன்னு தாரன். அதால நீங்க உங்கட பழைய லைபுக்கு போகலாம். அப்டி போனா இந்த கடிதத்த குடுப்பியலா?

    ReplyDelete
  22. பழைய கவிதை டைரியெல்லாம் தூசி தட்டிகிட்டே இருக்கீங்க..ம் நடக்கட்டும்

    ReplyDelete
  23. பாஸ் என்னாச்சு அடிக்கடி கண் கலங்க வைக்குரிங்க

    ReplyDelete
  24. உலர்ந்த வார்த்தைகளால் கவி வடித்து இருக்கிறிர்கள் படிக்கும் போது மனசும் உலர்ந்து போகிறது :(

    ReplyDelete
  25. அடே பாருங்கடா கவிதையாம்லே!!!எப்ப தொடக்கம் இந்த கேட்ட புத்தி?>?ஹிஹி

    ReplyDelete
  26. அனுப்பாமல் போன கடிதங்கள்
    சொல்லாமற்போன சொற்கள்
    கொடுக்காமல் விட்ட பரிசுகள்
    இவை சொல்லுமே அக்காதலைப் பற்றி,பிரிவின் வலி பற்றி!
    அருமையான கவிதை கருன்!

    ReplyDelete
  27. எனக்கும் அப்படி ஒரு கடிதம் இருக்கிறது! ஆனால் அது காதலிக்கானது அல்ல அதற்கெல்லாம் நமக்கு கொடுப்பினை இல்லை!

    உணர்வுள்ள வரிகள்!

    ReplyDelete
  28. எதையோ தேடுகையில்
    யதேச்சையாய்க் கிடைத்தது//

    பாஸ், எதேச்சையாக என்று வந்திருந்தால் இன்னும் சிறபாக இருக்கும்,

    ReplyDelete
  29. மனம் கனக்கச் செய்த கவிதை வரிகள்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. உறுதியாய்ச் சொல்வேன், எத்தனையோ பேர் தம் இதயத்துக்குள் கண்ணீர் விட்டிருப்பார்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"