Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/17/2011

முதல்வர் ஜே உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை!?

 டந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் கூறும் பாடம் இதுதான்... 

அங்கொருவர், இங்கொருவர் விரும்பலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்போக்கும், இலவசங்களுக்கு எதிரானது. இலவசங்கள், தரமானதாக இருக்கவே இருக்காது. முதல்வர் ஜே - வும் இலவசங்களை கூறித்தான் ஆட்சிக்கு வந்தார்கள் என எதிர் கேள்வி கேட்கவேண்டாம். இந்த இலவச கலாசாரத்தை அறிமுகப் படுத்தியவர்கள் யார் என்று சிந்தியுங்கள் நண்பர்களே..

இலவசமாக, ஜரிகைக் கறைப் போட்ட பட்டுப்புடவை, பட்டு வேட்டியா வழங்குகின்றனர்? 

நான் சாப்பிடப் போகும் நேரத்தில், நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். "வாங்க, சாப்பிடலாம்' என அழைத்தேன். அவரோ, "இப்பதான் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்' எனக் கூறிவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, அவர் மனைவி வந்தார். "என் கணவர் இங்கே வந்தாரா? சாப்பிடாமல் வந்துட்டாருங்க' என, பரிதாபமாக கூறினார்.

மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவி மேலும் வரலாம், ஆட்சி மீதும் வரலாம். 

ஆட்சியாளர்களிடம், நல்ல நடத்தையை மக்கள் எதிர்பார்க்கின்றனர், இலவசங்களை அல்ல. 

அதனால்தான், 'நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே, மலர்தலை உலகம்' என, புறநானூறு கூறுகிறது. அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, எக்காலத்திலும் சரி, மக்கள் இயல்பு ஒன்று தான்.

நல்லாட்சி  புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயங்க மாட்டார்கள்.

15 comments:

  1. இலவசங்களை தரலன்னா சொன்னது எதுவும் தரலைன்னு அப்படி பிளேட்ட மாத்தி போடுவாங்களே திமுக காரங்க

    ReplyDelete
  2. எச்சரிக்கை விட்டாச்சா..?

    ReplyDelete
  3. இநத் தமிழ்மணம் என்னாச்சி...

    ReplyDelete
  4. வேறு வழியேயில்லை என்ற நிலையில் அம்மா இதைச் செய்ய வேண்டியதாகி விட்டது!

    ReplyDelete
  5. அம்மா எப்பவுமே அடுத்தவுங்க ஆலோசனையை கேக்குறதுல கில்லாடி ?!

    ReplyDelete
  6. //மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவி மேலும் வரலாம், ஆட்சி மீதும் வரலாம்//
    :-)

    ReplyDelete
  7. //மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவி மேலும் வரலாம், ஆட்சி மீதும் வரலாம்//
    cool...........

    ReplyDelete
  8. ஏற்கனவே எல்லாத்துக்கும் கவேர்மென்ட்டை எதிர்பார்க்கும் மக்களை மேலும் மேலும் தவறான பாதைக்கே அழைத்து செல்லும் இந்த இலவசங்கள் தேவை இல்லை ...வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் .அதற்கான நடவடிக்கைகள் தான் தேவை ....என்ன ஆசிரியரே சரி தானே

    ReplyDelete
  9. நல்லாட்சி புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயங்க மாட்டார்கள்.

    நிச்சயமாக ......

    ReplyDelete
  10. இலவசங்கள் கொடுக்க்கப்படலமா அல்லது கூடாதா.???

    ReplyDelete
  11. தமிழ் மணம் கோளாறு பண்ணுகிறது சகோ.

    ReplyDelete
  12. இனிமேல் இலவசம், ஊழல் வேண்டாம் என்பதற்குச் சான்றாக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புத் தான் இம் முறைத் தேர்தலில் ஜெயிற்கு கிடைத்த வெறிறி,

    அம்மாவும் நல்லாட்சி புரியவில்லை என்றால், அடுத்த முதல்வர்,....ஹி,..ஹி...அவரே தான்.

    ReplyDelete
  13. //நல்லாட்சி புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயங்க மாட்டார்கள்.//

    சத்தியமான வார்த்தை, புரிந்து கொள்வாரா ஜெ!!!

    ReplyDelete
  14. கலக்கிட்டீங்க...காலம் காலமாக உதயசூரியனுக்கு ஒட்டு போட்ட பாவத்துக்கு இந்த தடவை இரட்டை இலைக்கு ஒட்டு போட்டு தீர்த்து கொண்டேன்.
    அம்மா வந்ததும் அதிரடியாக பல நல்ல காரியங்களை செய்தார்கள்.
    ஆனால் சமச்சீர்கல்வி திட்டத்தை ஒழிப்பதில் மிகத்தீவிரமாக செயல்பட்டார்கள்.
    முனியாண்டியும்...
    முகுந்தனும் ஒரே பாடத்திட்டம் படிப்பதா செல்லாது...செல்லாது என நாட்டாமையாக செயல்பட்டது வேதனைப்படுத்தியது.
    சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை களைந்து மக்களிடம் நல்ல பெயெரெடுக்கும் வாய்ப்பை உதறித்தள்ளுவதில் வேகம் காட்டுகிறார்கள்.
    பிரைவேட் பள்ளி நடத்துபவர்கள் ஒட்டு போட்டு அம்மா ஆட்சிக்கு வரவில்லை.
    என்னைப்போல் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் போட்டு வந்திருக்கிறார்கள்.
    சமச்சீர்கல்வியை அமல்படுத்தி அரசுப்பள்ளிகளை மேம்படுத்தினால் வரலாறு அம்மாவை கொண்டாடும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"