Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/10/2011

ஜெயலலிதாவை வளைக்க காங்கிரஸ் திட்டம்? பரபரப்பு செய்தி


2ஜி ஊழல் வழக்கு கனிமொழியை தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரத் தொடங்கி உள்ள நிலையில்,அவர்களாகவே கழுத்தை பிடித்து தள்ளுவதற்குள் நாமே முந்திவிடலாம் என்ற எண்ணத்தில்தான் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி, வெளியிலிருந்து ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்காக திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை இன்று அவசரமாக கூட்டினார் கருணாநிதி.

ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் கட்சியினரின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்துவிட்டார் கருணாநிதி.

கனிமொழி தாக்கல் செய்த பிணை மனு கோரிக்கை,டெல்லி நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டவுடன் கருணாநிதி மிகவும் மனமுடைந்து போனார்.

மகள் சிறையில்; கூடவே தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை காவு கேட்கும் ஏர்செல் விவகாரம் என்று அடுத்தடுத்து திமுகவின் இமேஜை காலி செய்யும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கையில்,அடுத்ததாக மு.க. அழகிரியையும் குறிவைத்து, குறிப்பாக தா.கிருட்டிணன் கொலை வழக்கில், வில்லங்கம் ஏதாவது அரங்கேறலாம் என்ற அச்சம் கருணாநிதியை வாட்டுகிறது.அப்படி ஒன்று நிகழும் பட்சத்தில் அழகிரியையும் அவமானப்படுத்தி அமைச்சரவையிலிருந்து விலகுமாறு காங்கிரஸ் நிர்ப்பந்திக்கும்.

மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றும், காங்கிரஸ் இப்படி முதுகில் கத்தி சொருகுகிறதே என்ற ஆதங்கமும், கோபமும்தான் இனியும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்ற மனநிலைக்கு கருணாநிதியை தள்ளியதாக தெரிகிறது.

உடனடியாக திமுகவின் மத்திய அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைப்பது என்ற முடிவை கருணாநிதி ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும்,கனிமொழி பிணை மனு மீதான தீர்ப்புக்காகவே அவர் காத்திருந்ததாகவும் கூறும் அறிவாலய வட்டாரங்கள், தமது இந்த முடிவை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறு திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலுவை கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்துதான் பாலு நேற்றிரவு பிரதமரை சந்தித்து கருணாநிதியின் முடிவை தெரிவித்ததாகவும், கூடவே திமுகவுக்கு எந்தவிதத்திலும் உதாவமல் கைவிட்டது குறித்த கருணாநிதியின் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்ததாகவும் தெரிவிக்கின்றன.

மேலும் திமுக முடிவை பிரதமரிடம் தெரிவித்த பாலு, சோனியாவை சந்திக்காததன் மூலம், காங்கிரஸ் மீது திமுகவுக்கு இருக்கும் கசப்புணர்வை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில் பிரதமரிடம் டி.ஆர்.பாலு நேற்று இரவு தெரிவித்த தகவல் உடனடியாக காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வந்த உத்தரவின் பேரிலேயே,"காங்கிரஸ் சந்தேஷ்" என்ற காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம் என்றும், திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவையிலிருந்து திமுக விலகும் முடிவை பிரதமரிடம் தெரிவித்த பாலு, சோனியாவை சந்திக்காதது, காங்கிரஸ் மீது திமுகவுக்கு இருக்கும் கசப்புணர்வை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

தற்போது பிரதமரை டி..ஆர். பாலு சந்தித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகும் முடிவை முன்கூட்டியே தெரிவித்தது கூட, தமிழக சட்டசபை தேர்தலின்போது தொகுதி பங்கீடு விடயத்தில் எழுந்த கருத்துவேறுபாட்டை காரணம் காட்டி,காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் சமரசமானது போன்று இந்த முறை இல்லை என்று கூறுவதற்கும், முடிவை முன்கூட்டியே தெரிவித்து பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைமையின் கோபத்திற்கு ஆளாகாமல் தடுக்கவுமே (கனிமொழியில் சிறையில் இருப்பதால் கூடுதல் சிக்கல் ஏதும் கொடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில்) என்று கூறுகிறது அறிவாலய வட்டாரம்.

இந்நிலையில் பிரதமரிடம் டி.ஆர்.பாலு நேற்று இரவு தெரிவித்த தகவல் உடனடியாக காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வந்த உத்தரவின் பேரிலேயே,"காங்கிரஸ் சந்தேஷ்" என்ற காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம் என்றும், திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது இன்று கூட உள்ள திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் அக்கட்சி, இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நிச்சயம் தங்களை விமர்சிக்கலாம் என்பதாலும், தேர்தல் தோல்விக்கு அதுதான் முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டலாம் என்பதாலும், அக்கட்சி விமர்சிப்பதற்கு முன்னர், நாம் முந்திவிட வேண்டும் என்ற தந்திரத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு தலையங்கம் எழுதப்பட்டதாக தெரிகிறது.

அத்துடன் தமிழகத்தில் திமுகவை கழற்றிவிட்டு, ஜெயலலிதாவின் அதிமுகவுடனோ அல்லது விஜயகாந்தின் தேமுதிக போன்ற கட்சிகளுடனோ கூட்டணி வைக்கும் நோக்கத்துடன், தென்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி மற்றும் அரசியல் வியூகங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த தலையங்கம் அறிவுரை கூறுகிறது.

வருகிற 13 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ள ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இப்படி ஒரு தலையங்கம் வெளியாகி இருப்பது, தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக ஜெயலலிதாவை வளைக்க திட்டமிட்டு காங்கிரஸ் காய் நகர்த்தி வருவதாகவே டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்து, வரும் நாட்களில் இந்த கூட்டணி மாற்றம் வேகம் பிடிக்கலாம்! 

30 comments:

  1. என்னத்த பரபரப்போ? எல்லாமே நாடகம்

    ReplyDelete
  2. இருக்கலாம், இருக்கலாம்; எதுவும் நடக்கலாம், நடக்கலாம்.

    அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே!

    ReplyDelete
  3. இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நமக்கேன் வம்பு?

    ReplyDelete
  4. இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நமக்கேன் வம்பு?

    ReplyDelete
  5. காங்கிரஸே சந்தர்பவாத காங்கிரஸ் தானே. எல்லாம் செய்வாங்க. ஜெ வுடன் கூட்டுசேர்வதில் ஆச்சர்யம் இல்லை.

    ReplyDelete
  6. திரும்ப திரும்ப ஒரே பாராவே 2 தடவைகள் வந்துள்ளது. இரண்டு 3 பாரா இப்படி வந்துள்ளதே. எப்பவுமே இப்படி இருக்கமாட்டீர்களே. ஏன் இந்த கவனமின்மை?

    ReplyDelete
  7. ஜெயா மேடம் வளைஞ்சு கொடுப்பாங்களா!!!! பொறுத்திருந்து பார்ப்போம் .......

    ReplyDelete
  8. திமுகா எடுத்த முடிவு எதிர்பார்த்ததுதான்,
    நீங்கள் சொல்வதுபோல் நடந்தால்... ம்ம் என்னத்த சொல்ல பாவம் ஜெயா.

    ReplyDelete
  9. மனசை கனக்க வைக்கும் கவிதை

    ReplyDelete
  10. நடந்து வரும் நிகழ்வுகள் அப்படித்தான் இருக்கின்றன. காங்கரஸ் கட்சியின் அதிகார்வபூர்வமான் நாளிதழ் தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணியில் ஏதோ பிழை இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.பொறுத்திருந்து பார்போம் என்ன நடக்கிறது என்பதை.

    ReplyDelete
  11. வந்தேன், வாசித்தேன்,வாக்கிட்டேன், வருகிறேன்.

    ReplyDelete
  12. மாப்ள நடத்துய்யா...பாடத்தை அல்ல!

    ReplyDelete
  13. காங்கிரஸ் இனி தமிழ் நாட்டில் ??????? no chance

    ReplyDelete
  14. மாப்ள திமுகவுக்கு இருக்கும் ஒரே ஆதரவான செய்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இருப்பதே ஆகவே இவனுங்களா கூட்டனிய விட்டு வெளிய வரவே மாட்டாங்க

    ReplyDelete
  15. காங்கிரஸ் கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களது கோஷ்டி பூசல்களை சரிபண்ணி விட்டு மக்கள் முன் வரட்டும் ....இப்ப தமக் எந்த பெரிய முடிவும் எடுக்காது எடுத்தால் ஒரு குடும்பமே கம்பிகளுக்கு பின் போக வேண்டி வரலாம்

    ReplyDelete
  16. தமிழ்வாசி - Prakash கூறியது...

    என்னத்த பரபரப்போ? எல்லாமே நாடகம்// அப்படியா?

    ReplyDelete
  17. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    Hai Vadai.// எத்தனை பேரு..

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    இருக்கலாம், இருக்கலாம்; எதுவும் நடக்கலாம், நடக்கலாம்.

    அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே!// சரியாக சொன்நீர்கள்..

    ReplyDelete
  19. ராஜி கூறியது...

    இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நமக்கேன் வம்பு?// அப்படியா?

    ReplyDelete
  20. செங்கோவி கூறியது...

    நல்ல அலசல்./// நன்றி..

    ReplyDelete
  21. கடம்பவன குயில் கூறியது...

    காங்கிரஸே சந்தர்பவாத காங்கிரஸ் தானே. எல்லாம் செய்வாங்க. ஜெ வுடன் கூட்டுசேர்வதில் ஆச்சர்யம் இல்லை.// கரெக்ட்டு..

    ReplyDelete
  22. கடம்பவன குயில் கூறியது...

    திரும்ப திரும்ப ஒரே பாராவே 2 தடவைகள் வந்துள்ளது. இரண்டு 3 பாரா இப்படி வந்துள்ளதே. எப்பவுமே இப்படி இருக்கமாட்டீர்களே. ஏன் இந்த கவனமின்மை?// ஆம்..

    ReplyDelete
  23. கந்தசாமி. கூறியது...

    ஜெயா மேடம் வளைஞ்சு கொடுப்பாங்களா!!!! பொறுத்திருந்து பார்ப்போம் .......// ஆமாம்..

    ReplyDelete
  24. துஷ்யந்தன் கூறியது...

    திமுகா எடுத்த முடிவு எதிர்பார்த்ததுதான்,
    நீங்கள் சொல்வதுபோல் நடந்தால்... ம்ம் என்னத்த சொல்ல பாவம் ஜெயா.////அப்படியா?

    ReplyDelete
  25. பிளாகர் விக்கி உலகம் கூறியது...

    மாப்ள நடத்துய்யா...பாடத்தை அல்ல!/// ஒகே ..ஓகே..

    ReplyDelete
  26. ஐயா வளைச்சு உள்ளே போட்டப் பிறகு,
    அம்மாவை வளைத்தால் பயன் ஏதும் கிட்டும் என காங்கிரஸ் கட்சியினர் நினைத்திருப்பார்களோ?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"