Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/07/2011

சுட்டிக்காட்டுங்கள்..., குத்திக்காட்டாதீர்கள்..- சபாஷ் கலெக்டர் .




சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொதுப்பணித்துறை மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட மகரபூஷனம், மேட்டூர் தண்ணீர் அணை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

வழக்கம் போலவே அதிகாரிகள் சால்வை, மாலை, பூங்கொத்து, எலுமிச்சம்பழம் என்று புதிய மாவட்ட ஆட்சியரை வரவேற்க காத்திருந்தனர். காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் எல்லோருக்கும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு அதிகாரிகள் கையில் வைத்திருந்த எதையும் வாங்காமல் தனது அறைக்கு சென்று விட்டார்.

பின்னர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்சியில் ஆட்சியர் கலந்து கொண்டபோது, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் ஒரு சால்வையுடன் ஆட்சியருக்கு பக்கத்தில் போக, அவருக்கு பின்னாலேயே போன சில பத்திரிகை புகைப்படக்காரர்களும் ராமநாதன் சால்வைபோடும் காட்சியை படமெடுக்க தயாராக இருந்ததை பார்த்து விட்ட ஆட்சியர் மகரபூசனம், சால்வையுடன் வந்த ராமநாதனை கையைகாட்டி சற்று தூரத்திலேய நிறுத்திவிட்டு, பொதுமக்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்துக்கு இவரை யார் உள்ள விட்டது என்று பக்கத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கி விட்டார். அவசர அவசரமாக ஆக்ஸ் போர்டை வெளியேற்றினார்கள் அதிகாரிகள்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது என் நிர்வாகத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததால் சுட்டிக்காட்டுங்கள்... சரிசெய்து கொள்கிறேன், தயவு செய்து குத்திக்காட்டதீர்கள் என்றார். 

சபாஷ்  கலெக்டர்.

32 comments:

  1. >>விக்கி உலகம் கூறியது...

    ரைட்டு!

    template comentter vikki vaazka

    ReplyDelete
  2. உங்களுக்கும் ஒரு சபாஷ்

    ReplyDelete
  3. உங்களுக்கும் ஒரு சபாஷ்

    ReplyDelete
  4. இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும் நண்பரே.

    http://nee-naan-ulagam.blogspot.com/2011/06/blog-post_07.html

    ReplyDelete
  5. அம்மா உட்பட நிறைய பேர் மாறுவது போல் இருக்கு இந்த மாற்றம் நிஜம் என்றால் உண்மையில் நம் இந்தியா வாழ் சகோதரர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் :)

    ReplyDelete
  6. /உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் ஒரு சால்வையுடன் ஆட்சியருக்கு பக்கத்தில் போக,/

    என்னைப் பொறுத்தவரை அவர்களை விட இவர்கள்தான் ஆபத்தானவர்கள்

    இவர்களை தூக்கி முதலில் உள்ளே போட வேண்டும்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்காரே!

    ReplyDelete
  9. இம்மாதிரியான அதிகாரிகளே நாட்டிற்கு தேவை.

    ReplyDelete
  10. ஆகா எல்லோரும் இப்படி இருந்திட்டா நல்லாயிருக்கும்...

    ReplyDelete
  11. இந்த கலெக்டர் எல்லா விஷயத்திலும் இதே மாதிரி ரைட்டா இருந்தா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் .......

    ReplyDelete
  12. வித்யாசமான மனிதர் தான். இதுபோலவே அனைத்து நிர்வாகிகளும், அதிகாரிகளும் நடந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

    ReplyDelete
  13. சுட்டிக்காட்டுங்கள்..., குத்திக்காட்டாதீர்கள்..- சபாஷ் கலெக்டர் >>>

    சுட்டி காட்டுங்கள்

    ReplyDelete
  14. உண்மையில் சிறப்பான செய்கை தான்.. இருந்தாலும் நாங்க திருந்தமாட்டோம்

    ReplyDelete
  15. ஆஹா, ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!

    ReplyDelete
  16. //சபாஷ் கலெக்டர்//
    ரிபீட்டு!

    ReplyDelete
  17. இவரை போன்ற அதிகாரிகள் தான் வேணும் ...
    நம்மா ஆட்கள் சும்மா இருப்பார்களா ..//

    ReplyDelete
  18. அரசு அதிகாரிகளின் வேலைகளில் தலையிடாமல் இந்த அரசியலவாதிகள் அரசு அதிகாரிகளை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டாலே போதும் . அதுவே நல்லாட்சிதான்.

    ReplyDelete
  19. அரசு அதிகாரிகளின் வேலைகளில் தலையிடாமல் இந்த அரசியலவாதிகள் அரசு அதிகாரிகளை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டாலே போதும் . அதுவே நல்லாட்சிதான்.

    ReplyDelete
  20. கலெக்டரின் ஆரம்ப ஜோர் நல்லா இருக்கு பார்ப்போம்

    ReplyDelete
  21. வீரபாண்டி ஆறுமுகத்தையும் இதே மாதிரி சமாளிக்கணும்

    ReplyDelete
  22. வீரபாண்டி ஆறுமுகத்தையும் இதே மாதிரி சமாளிக்கணும்

    ReplyDelete
  23. அதிகாரிகள் அளவிலான இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  24. ஜனநாயகம் எனப்படுவது போற்றிப் புகழ்தலில் இல்லை, உண்மையான மக்களின் அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்கு, இச் செயற்பாடு ஒரு நல்ல உதாரணம்,

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"