Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/27/2011

ஈழத்தமிழர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்க‌ளின் உணர்வுபூர்வ அ‌ஞ்ச‌லி


லங்கை இராணுவத்தினரா‌ல் கொடூரமாக கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ஈழத்தமிழர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆ‌ம் தே‌தியை உலககெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. சபை கடைபிடித்து வருகிறது. 


அந்த வகையில் இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கி, சித்ரவதைக்கு உள்ளாகி உயிர் இழந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு நேற்று பல்வேறு அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள், மே 17 இயக்கம்
நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க. பதிவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலைக்கு பின்புறம் குவிந்தனர்.  இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை சித்தரிக்கும் படங்களை கையில் ஏந்தி வந்திருந்தனர்.

இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் நினைவாக மெரினா கடற்கரை மணலில் நினைவு தூண் அமைக்கப்பட்டு, அதன் அருகில் மலர்களால் தூவப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினா கடற்கரைக்கு பெற்றோர், நண்பர்களுடன் வந்திருந்த மாணவ-மாணவிகளும் இந்த உணர்வுபூர்வமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் அர்ப்பணிப்பை வழங்கினர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காட்சியளித்தனர். 

இந்த நிகழ்ச்சிக்கு சென்றிந்த நானும், கவிதைவீதி சௌந்தர், வந்தேமாதரம் சசியும் அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து பெருமிதம் அடைந்தோம். மேலும் பதியுலகைச் சேர்ந்த பதிவர் கும்மி, உண்மைத்தமிழன், செந்தில், மதராச பவன் சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தரத் தான் நான் அனைவரும் இங்கே கூடினோம். இந்த ஒற்றுமை, ஒன்றுப்பட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை நிச்சயமாக அடைய முடியும். 

அதற்கு இந்த நிகழ்வு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.

29 comments:

  1. //இந்த நிகழ்வு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.//

    அதுவே அனைவர் பிரார்த்தனையும்!

    ReplyDelete
  2. அன்பின் கருண் - நல்லதொரு நிகழ்ச்சியினில் கலந்து கொண்டது மகிழ்வினைத் தருகிறது. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. உணர்வுபூர்வமான நிகழ்ச்சிப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல தொடக்கமாக இருக்கட்டும்...!

    ReplyDelete
  5. இந்த உணர்வு தமிழனுக்கு எப்பவும் இருக்க வேண்டும்...

    ஏற்பாட்டாளர்கள் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. மகிழ்ச்சியான நிகழ்வு. பதிவர்களும் இதில் கலந்துகொண்டதற்கு பெருமையடைகிறேன் .

    ReplyDelete
  7. படமும் பதிவும் அருமையாக
    உள்ளன
    இதுபற்றி என் வலையில்
    கவிதை ஒன்று எழுதியுள்ளேன்
    படிக்க வேண்டுகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. தீ கொழுந்து விட்டு எரியட்டும்..... அது எதிரிகளை மட்டும் அல்லாது துரோகிகளையும் பொசுக்கட்டும் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இந்த நிகழ்வு நல்ல தொடக்கமாக அமையட்டும்.

    ReplyDelete
  10. அன்பு தொப்புள்கொடி உறவுகளுக்கு இலங்கை தமிழனின் கடமை கலந்த நன்றிகள்

    ReplyDelete
  11. அன்பு தொப்புள்கொடி உறவுகளுக்கு இலங்கை தமிழனின் கடமை கலந்த நன்றிகள்

    ReplyDelete
  12. நன்றிகள் உரித்தாகட்டும்

    ReplyDelete
  13. நேரில் வர முடியாத சூழ்நிலையில் இருந்தாலும், என்னுடைய உணர்வுபூர்வமான பங்களிப்பை இந்த நேரத்தில் பதிவு செய்ய விழைகிறேன். ஒரு விடியல் இந்த மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் தெரிகிறது. அது அஸ்தமித்துக்கொண்டிருக்கும் எம் தேசத்து மக்களுக்கு விரைவில் பகலவனாய் ஒளிகொடுக்கும் என்ற நம்பிக்கையில்....

    ReplyDelete
  14. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் ...

    ReplyDelete
  15. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோருக்கும் கலந்து கொண்டோருக்கும் எமது நன்றிகள்.

    ReplyDelete
  16. பகிர்விற்கு நன்றி கருன்.

    ReplyDelete
  17. இந்த நிகழ்ச்சிக்கு சென்றிந்த நானும், கவிதைவீதி சௌந்தர், வந்தேமாதரம் சசியும் அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து பெருமிதம் அடைந்தோம். மேலும் பதியுலகைச் சேர்ந்த பதிவர் கும்மி, உண்மைத்தமிழன், செந்தில், மதராச பவன் சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.//

    அருமை அருமை நண்பர்களே....

    ReplyDelete
  18. நிச்சயம் விடியல் பிறக்கும்.....

    ReplyDelete
  19. நேற்று நக்கீரனில் படங்களைப் பார்க்கும் போதே பரவசமாக இருந்தது.இன்று பதிவர்களின் எழுத்துக்கள் அதற்கு வலுவூட்டுகின்றன.

    மெழுகுவர்த்தியின் ஒளி தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் பரவட்டும்.

    வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

    ReplyDelete
  20. நன்றிகள் கருன்

    ReplyDelete
  21. //ஒற்றுமை, ஒன்றுப்பட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை நிச்சயமாக அடைய முடியும். //

    அதே

    ReplyDelete
  22. முயற்ச்சிக்கு நன்றிகள் ....

    ReplyDelete
  23. உண்மைதான் எல்லோரும் யோசித்து மீண்டும் கூடுவோம்

    ReplyDelete
  24. உணர்வுபூர்வமான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  25. நல்ல பதிவு நேரடியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறாவிட்டாலும் உங்கள் அனுபவத்தை படிப்பதில் மகிழ்ச்சி! மே பதினேழு இயக்கத்திற்கு எனது வாழ்த்துகள் நன்றிகள் வாழ்க தமிழ் இந்த ஒற்றுமை ஓங்குக

    ReplyDelete
  26. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  27. விடியும் ஒரு நாள்

    ReplyDelete
  28. வணக்கம் வாத்தியாரே...... கேள்விப் பட்டேன். உங்கள் ஆர்வத்திற்கு வணக்கம்.

    ReplyDelete
  29. உங்கள் உணர்வுகளுக்குத் தலை தாழ்த்துகிறேன் நண்பர்களே,

    இந்த ஒளியானது, விடுதலைப் பேரொளியாக உலகம் முழுவதும் பரவட்டும்,.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"