Ads 468x60px

6/26/2011

இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சேவை தப்ப விடலாமா ?


மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு நேற்று  திருச்சியில் ஹோட்டல் பெமினாவில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள்.

இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார்.

அவர், ‘’நடந்து முடிந்த தேர்தல் இயக்கத்துக்கு சோதனையான காலம். நமக்கு துரோகம் இழைக்கப் பட்டபோது கழக வழக்கறிஞர்கள் நீங்கள் தான் தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொன்னீர்கள்

மிக துணிவான முடிவு உங்களால் தான் எடுக்க முடிந்தது.நமது இயக்கத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டது... நாம் சுயமரியாதை இயக்கத்தின் அடையாளம்....

ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்...எத்தனையோ கஷ்டங்களை

சந்தித்துவிட்டோம்...இனி நமக்கு வசந்தம் வீசும்....

தனி நாடு கேட்டார் பெரியார்...சுய ஆட்சி கேட்டார் அண்ணா .... நாங்கள் அப்படி கேட்கவில்லை.... ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்....

ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது...ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள்... என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன் , இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது... நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா,மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே .... எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா?

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான்...ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா .....எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது.

குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு ... என் தமிழக மீனவன் இலங்கை சிங்கள அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு...

சேனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது...பல கொடுமைகள் நடத்தப்படும்

காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது... இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே

தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா..

இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொள்கிறார்கள் ... அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள்... ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள்... இதற்க்கு தீர்வு என்ன...சுதந்திரமான தனி ஈழம் தான்... அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும்... என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்..

உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாகிநீர்கள்... ஈழம் எப்போது.... சேனல் 4 ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள்.... நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா ?

வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம்...தன் மானத்தோடு வாழ்வோம்....’’ என்று பேசினார். உதவி நக்கீரன்.

14 comments:

 1. இனிய காலை வணக்கம் கருன்!

  ReplyDelete
 2. நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர, வேறேதும் மனதில் இல்லை சகோ...

  காலம் தான் இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 3. சாரி .. மாப்ளே.. நேத்து ஃபுல்லா கரண்ட் கட்

  ReplyDelete
 4. தமிழனை யாரும் மனுசனாவே மதிக்கலியே..

  ReplyDelete
 5. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
  சாரி .. மாப்ளே.. நேத்து ஃபுல்லா கரண்ட் கட்//
  கருன் பதிவிட்டது இன்று.கவனமா கமெண்ட் போடுங்க, சிபி.

  ReplyDelete
 6. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
  சாரி .. மாப்ளே.. நேத்து ஃபுல்லா கரண்ட் கட்//
  நடந்தது என்ன, குற்றம்!!!

  ReplyDelete
 7. ஹி...ஹி... இங்கேயும் நேத்து கரண்ட் கட்....

  ReplyDelete
 8. உண்மையான கருத்துக்கள் வைகோ பேசியது .
  ராஜபக்ச நிச்சியம் தண்டனை கிடைக்க வேண்டும் அதுதான் தமிழர்களின் ஆவல்

  ReplyDelete
 9. தமிழக அரசியலில் தூய்மையான அரசியல்வாதி வைகோ
  அவருக்கு அரசியலில் நல்ல ஒரு இடம் இல்லாமல் இருப்பது துரதிஸ்ரம்
  அதுசரி
  நல்லவர்களுக்கு அரசியலில் எப்படி இடம் கிடைக்கும்

  ReplyDelete
 10. நியாயமான கேள்விகள் தான்.காலம் தான் பதில் சொல்லும்.

  ReplyDelete
 11. இது சம்பந்தமாக நானும் சில வீடியோவைப் பார்த்தேன்.மனம் வலித்தது. பெண்களை அவர்கள் எப்படியெல்லாம்
  ......... ராஜ பக்ஸே நிச்சயம் தண்டிக்கப்படனும்.

  (ஓட்டும் போட்டாச்சு)

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"