Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/23/2011

முதல்வர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை!!!


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும், லேப் - டாப் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, தமது உரையில் உறுதி செய்துள்ளார் கவர்னர். நேற்று அதற்கான முயற்சிகளும் நடந்துள்ளது. 

அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும், பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்தால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

வில், அம்பு இருந்தால் மட்டும் போதாது; அதை பயிற்றுவிக்க, துரோணர் போன்ற ஆச்சாரியரும் தேவை. அப்போது தான், போர்க்களத்தில் வெல்ல முடியும். அதுபோல், மடி கணினி மட்டும் அரசு தந்தால் போதாது. அதை பயிற்றுவிக்க, தேர்ந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக நியமித்தால் தான், மாணவர்கள், வாழ்க்கையில் வெல்ல முடியும்.

செய்யுமா  இந்த அரசு?

21 comments:

  1. சரியான கோரிக்கை கரூன். வெறும் மடிக்கணினிகளை கொடுத்துவிட்டால் அதை வைத்து கொண்டு மாணவர்கள் என்ன பண்ணுவார்கள். உங்களின் கோரிக்கை ஏற்க்கப்பட வேண்டிய ஒன்று

    ReplyDelete
  2. அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும், பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன.>>>>

    மாம்ஸ், சைடு கேப்புல பிட்டு போட்டிருக்கிங்க.....

    ReplyDelete
  3. சொந்தக்குரலோ!

    ReplyDelete
  4. செய்வார் தமிழக முதல்வர்

    ReplyDelete
  5. நியாயமான கோரிக்கைதான் நண்பா.

    ReplyDelete
  6. சீக்கிரம்மா வாத்தியார்களைஎல்லாம் பதிவர்கள்கிட்ட அனுப்பி விடுங்கப்பா .கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்கிறோம் .....

    ReplyDelete
  7. சூப்பர் போஸ்ட் கருன். நியாயமான கோரிக்கை.

    ReplyDelete
  8. My Petition also.

    One more thing will be really a trend setter if only the Government Logo is printed instead of the Chief Minister's picture. (as seen in some of the newspapers)

    ReplyDelete
  9. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கணினி கற்பதில் மேலும் ஆர்வம் காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. பார்க்கலாம்.

    ReplyDelete
  10. //அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும்
    //
    தவறு கணினி உள்ளது . அதை பயன்படுத்துவது இல்லை

    ReplyDelete
  11. //
    பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன.
    //

    இது 100 % உண்மை

    ReplyDelete
  12. //போர்க்களத்தில் வெல்ல முடியும். அதுபோல், மடி கணினி மட்டும் அரசு தந்தால் போதாது. அதை பயிற்றுவிக்க, தேர்ந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக நியமித்தால் தான், மாணவர்கள், வாழ்க்கையில் வெல்ல முடியும்.//

    உண்மைதான்...

    நிச்சயம் அரசு ஆவண செய்யும் என்று நம்புவோம்....

    ReplyDelete
  13. நியாயமான கேள்வி சார் ..
    இதையும் காதுக்குள் போடட்டும் இந்த அரசு

    ReplyDelete
  14. சரியான கேள்விதான், பதில் கிடைக்கிறதா என பார்ப்போம்

    ReplyDelete
  15. நல்ல கேள்விதான். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு.

    ReplyDelete
  16. சரியான சமயத்தில் சொல்லியிருக்கும்
    சரியான யோசனைதான். கேட்க வேண்டியவர் காதுகளில் விழனும்.

    ReplyDelete
  17. சபாஷ் கருண், உங்களின் ஆதங்கத்தினையும், மக்களின் எதிர்பார்ப்பினையும் வெளிப்படுத்தும் ஒரு விடயத்தினை முன் வைத்திருக்கிறீங்க,
    இந்த விடயம் நிச்சயமாக ஜெயலலிதாவின் காதினை எட்ட வேண்டும்.

    ReplyDelete
  18. நீங்க இஸ்டடி சென்டர் என்பதால் இதனை நன்கு தெரிந்து வைத்துள்ளீர்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"