Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/12/2011

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா!?


சென்னையில் உள்ள நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, ‘’இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகும். இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கச்சத் தீவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதும் பாராட்டுக்குரியது’’ என்று தெரிவித்தனர். 

19 comments:

  1. நடக்கட்டும் நடக்கட்டும் நல்லது நடக்கட்டும்

    ReplyDelete
  2. நல்லவை நடக்க நல்லோரை வரவேற்கிறேன் ......

    ReplyDelete
  3. நல்லதெல்லாம் நடக்கட்டும்
    தினமும் நல்லபொழுதாய் விடியட்டும்.

    ReplyDelete
  4. அரசியல் பதிவு அணி வகுத்து வருது!நடக்கட்டும்,நடக்கட்டும்.

    ReplyDelete
  5. அம்மா கடைசி வரை ஸ்டெடியாக இருக்கவேண்டும் ....

    ReplyDelete
  6. நல்லதை பாராட்டனும் ,தப்பை சுட்டிகாட்டனும் ..இது சந்தேகம் இல்லாமல் நல்ல நடவடிக்கை ...வாழ்த்துவோம்

    ReplyDelete
  7. நன்றி மறப்பது நன்றல்ல-என
    நவின்றது வள்ளுவன் இன்றல்ல
    வென்று ஈழம் மலரட்டும்-விடி
    வெள்ளியாய் பொழுதும் புலரட்டும்
    என்றும் ஒற்றுமை நிலவட்டும்-என்ற
    எண்ணம் நெஞ்சில் உலவட்டும்
    ஒன்றே தமிழர் குலமாகும்-எனும்
    உணர்வே எந்தன் உளமாகும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. ஆஹா சீமான் விக்கட் விழுந்திரிச்சு

    ReplyDelete
  9. ஜெயலலிதாவை நாம் அனைவரும் பாராட்டும் தருணம் இது!

    ReplyDelete
  10. நல்லதை நினைப்போம்..நிச்சயம் நடக்கும்

    ReplyDelete
  11. நல்ல முடிவு
    ஜெயா நல்லது செய்யும் போது பாராட்டுவதில் எந்த தப்பும் இல்லையே..

    ReplyDelete
  12. /இந்த கூட்டத்தில் கச்சத் தீவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதும் பாராட்டுக்குரியது’’ /

    இது ஜெயலலிதாவுக்குப் பாராட்டுவிழா என்பதாகப் பொருள்படுமா?

    ReplyDelete
  13. யார் மூலமாவது அங்குள்ள தமிழர்கள் அமைதியான வாழ்வு வாழட்டுவோம! வாழ்த்துவோம்!

    ReplyDelete
  14. தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.//
    ஆம் நிச்சயம் இது சாதனைதான்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"