Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/11/2011

நெகிழ்வுகள் நீங்கிய வேறொரு தருணத்தில்...


பூர்வமான
ஒரு தனிமையில்
உட்கார்ந்து  கொண்டிருந்தோம்.

வார்த்தைகளின்
இடைவெளிகளை நிரப்பிய
நெகிழ்வான மௌனங்கள்
கரைத்துக் கொண்டிருந்தன
நாம் பேச இயலாத
சஞ்சலங்களை.

ந்த அடர்ந்த வனத்தின்
ஒற்றைப் பட்டாம்பூச்சியைப் பின்
தொடர்ந்துக்கொண்டிருக்கிறது
உன் மனம்.

ந்த நீர்க்குமிழிக் கணத்தின்
எதோவொரு இழையில்
மீண்டும் பலப்படுகிறது
நம் நட்பு .

நெகிழ்வுகள் நீங்கிய
வேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!

நன்றி: சந்தியாவின் முத்தம் .
ஆசிரியர்: கவிதா.
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்(2008).

45 comments:

  1. நீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது .......

    ReplyDelete
  2. ///வார்த்தைகளின்
    இடைவெளிகளை நிரப்பிய
    நெகிழ்வான மௌனங்கள்
    கரைத்துக் கொண்டிருந்தன
    நாம் பேச இயலாத
    சஞ்சலங்களை.// வார்த்தைகளால் விளையாடுரிங்க பாஸ், அருமையான வரி

    ReplyDelete
  3. //நெகிழ்வுகள் நீங்கிய
    வேறொரு தருணத்தில்
    பிரித்துக் காட்டுவேன்
    அதற்கு
    நான் தந்த விலையை...!//

    முடியுமா??

    ReplyDelete
  4. //நெகிழ்வுகள் நீங்கிய
    வேறொரு தருணத்தில்
    பிரித்துக் காட்டுவேன்
    அதற்கு
    நான் தந்த விலையை...!//

    முடியுமா??

    ReplyDelete
  5. மாப்ள கவிதை நல்லா இருக்கய்யா

    ReplyDelete
  6. காதலை நம்ம தாத்தா வள்ளுவர் அழகாக படம் பிடிக்கிறார் கண்ணினை கண் நோக்கொக்க வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல் எப்படி சிந்தித்து இருக்கிறார் பாருங்கள் உங்கள் ஆக்கம் பரட்டுகளுக்குரியான

    ReplyDelete
  7. தமிழ் மனம் 5வது ஓட்டு

    ReplyDelete
  8. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கவிதை பிடித்திருந்தது.

    ReplyDelete
  10. @koodal bala //நீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது ....// அவரே பாவம் லேப்டாப் கிடைக்காத சோகத்துல புலம்புதாரு..அதுலயும் நக்கலா...

    ReplyDelete
  11. இந்த கவிதைக்கு காரணகர்த்தா யாருங்க பாஸ்?

    ReplyDelete
  12. நல்லாருக்கு பாஸ்

    ReplyDelete
  13. Your sentence formation is very super

    ReplyDelete
  14. You are a master in all field . . . Kalakkal

    ReplyDelete
  15. ஆமா , கல்யாணம் ஆயுடுச்சா? கேக்க மறந்துட்டேன்

    ReplyDelete
  16. பட்டாம்பூச்சி மனது.. நன்று..

    ReplyDelete
  17. மாப்ளை சாரி.. கரண்ட் கட்

    ReplyDelete
  18. koodal bala கூறியது...

    நீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது ..../ஹ.ஹா.ஹா..

    ReplyDelete
  19. கந்தசாமி. கூறியது...
    வார்த்தைகளால் விளையாடுரிங்க பாஸ், அருமையான வரி// நன்றி..

    ReplyDelete
  20. கடம்பவன குயில் கூறியது...
    //நெகிழ்வுகள் நீங்கிய
    வேறொரு தருணத்தில்
    பிரித்துக் காட்டுவேன்
    அதற்கு
    நான் தந்த விலையை...!//

    முடியுமா??/// முடியும்..

    ReplyDelete
  21. இரவு வானம் கூறியது...

    nice...// நன்றி..

    ReplyDelete
  22. சசிகுமார் கூறியது...

    மாப்ள கவிதை நல்லா இருக்கய்யா..//ரொம்ப நன்றி..

    ReplyDelete
  23. போளூர் தயாநிதி கூறியது...
    காதலை நம்ம தாத்தா வள்ளுவர் அழகாக படம் பிடிக்கிறார் கண்ணினை கண் நோக்கொக்க வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல் எப்படி சிந்தித்து இருக்கிறார் பாருங்கள் உங்கள் ஆக்கம் பரட்டுகளுக்குரியான//// நன்றி..

    ReplyDelete
  24. ரியாஸ் அஹமது கூறியது...

    அருமை // நன்றி,,

    ReplyDelete
  25. ரியாஸ் அஹமது கூறியது...

    தமிழ் மனம் 5வது ஓட்டு// நன்பேண்டா..

    ReplyDelete
  26. Rathnavel கூறியது...
    அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்...// நன்றி..

    ReplyDelete
  27. தமிழ் உதயம் கூறியது...

    கவிதை பிடித்திருந்தது.// மிக்க நன்றி,,

    ReplyDelete
  28. செங்கோவி கூறியது...
    @koodal bala //நீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது ....// அவரே பாவம் லேப்டாப் கிடைக்காத சோகத்துல புலம்புதாரு..அதுலயும் நக்கலா...// நீங்களுமா?

    ReplyDelete
  29. குணசேகரன்... கூறியது...

    இந்த கவிதைக்கு காரணகர்த்தா யாருங்க பாஸ்?// கடைசியா சொல்லியிருக்கேன்.

    ReplyDelete
  30. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    நல்லாருக்கு பாஸ்// அப்படியா நன்றி பாஸ்..

    ReplyDelete
  31. என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    Your sentence formation is very super// நன்றி..

    ReplyDelete
  32. கோவி கூறியது...

    பட்டாம்பூச்சி மனது.. நன்று..// முதல முறை வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  33. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    You are a master in all field . . . Kalakkal// நன்றி..

    ReplyDelete
  34. ஷர்புதீன் கூறியது...

    ஆமா , கல்யாணம் ஆயுடுச்சா? கேக்க மறந்துட்டேன்// ஆயிடுச்சி நண்பரே..

    ReplyDelete
  35. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் கூறியது...

    கவிதைகளின் சுகமே தனி!// ஆமாம் நன்றி..

    ReplyDelete
  36. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    மாப்ளை சாரி.. கரண்ட் கட்/// ஓகே.ஓகே..ஓகே..

    ReplyDelete
  37. கவிதை நல்லாயிருக்கு கருன் எங்க நம்ம பக்கம் கானல தங்களை...

    ReplyDelete
  38. நட்பின் நெகிழ்ந்த தருணம் அமைதியாக !

    ReplyDelete
  39. நெகிழ்வுகள் நீங்கிய தருணத்தினூடாக கவிதாயினி- கவிதா மிக அழகாக வாழ்க்கையின் பேச முடியாத தருணங்களின் போது ஏற்படும் உணர்வுகளை எவ்வாறு வெளிக்காட்டலாம் என்பதனைக் கவிதையில் கோர்த்திருக்கிறார்.

    பகிர்விற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  40. இந்த நீர்க்குமிழிக் கணத்தின்
    எதோவொரு இழையில்
    மீண்டும் பலப்படுகிறது
    நம் நட்பு .// நட்பு.....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"