Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/02/2011

ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ?



ழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக, டில்லியில் நாளை மறுதினம் துவங்கும் தன் உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்,'' என, பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அறிவித்தார்.
 
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவர், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார். 

ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 4ம் தேதியில் இருந்து, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

ஆம்  யார் இந்த பாபா ராம்தேவ் .,

சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். 

இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.

56 comments:

  1. உண்ணாவிரதம் நல்ல விஷயம்தான் ஒரு வேளை இது பிரபலத்திற்காக இல்லாமல் இருந்தால் சரி...

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம்

    ReplyDelete
  3. எங்கே ரொம்ப நாளா காணும்

    ReplyDelete
  4. family tour நல்ல இருந்ததா ?

    ReplyDelete
  5. //உண்ணாவிரதம் நல்ல விஷயம்தான் ஒரு வேளை இது பிரபலத்திற்காக இல்லாமல் இருந்தால் சரி...//

    yes me too strongly agreed soundar

    ReplyDelete
  6. நல்லவிசயந்தான்...

    இவர் லஞ்சம் வாங்கிட்டு உண்ணாவிரதத்தை கைவிடாமல் இருந்தால் சரிதான்...

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    1st cut// என்ன தல கருத்த மாத்தி போடுது..

    ReplyDelete
  8. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    உண்ணாவிரதம் நல்ல விஷயம்தான் ஒரு வேளை இது பிரபலத்திற்காக இல்லாமல் இருந்தால் சரி...// unmai nanbaa..

    ReplyDelete
  9. இவர் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் ஒரு நிறுவனமும் வைத்துள்ளார் என நினைக்கிறேன்.ஏதோ நல்லது நடந்தாச் சரி!
    (எங்கே காணாமப் போயிட்டீங்க?)

    ReplyDelete
  10. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    MAAPLA.. POLAACCHI , BHAVAANI MAATEER POST PODAVUM HI HI/ அடுத்த வாரம் வரும்,

    ReplyDelete
  11. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    நல்ல அறிமுகம்// நன்றி.

    ReplyDelete
  12. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    எங்கே ரொம்ப நாளா காணும்// டூர் போயிருந்தேன் நண்பா..

    ReplyDelete
  13. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    family tour நல்ல இருந்ததா ?////// நல்லா இருந்தது நண்பா..

    ReplyDelete
  14. ஷர்புதீன் கூறியது...

    //உண்ணாவிரதம் நல்ல விஷயம்தான் ஒரு வேளை இது பிரபலத்திற்காக இல்லாமல் இருந்தால் சரி...//

    yes me too strongly agreed soundar// நன்றி..

    ReplyDelete
  15. தக்காளி நல்லது நடந்துதா சரி

    நாட்டுக்கும்
    வியட்நாமுக்கும்

    ReplyDelete
  16. சங்கவி கூறியது...

    நல்லவிசயந்தான்...

    இவர் லஞ்சம் வாங்கிட்டு உண்ணாவிரதத்தை கைவிடாமல் இருந்தால் சரிதான்....// உண்மை நண்பா..

    ReplyDelete
  17. சங்கவி கூறியது...

    நல்லவிசயந்தான்...

    இவர் லஞ்சம் வாங்கிட்டு உண்ணாவிரதத்தை கைவிடாமல் இருந்தால் சரிதான்....// உண்மை நண்பா..

    ReplyDelete
  18. பகிர்வுக்கு மிக்க நன்றி கருன்..!

    ReplyDelete
  19. பொறுத்திருந்து பார்ப்போம் பொதுநலமா சுயநலமா என்று

    ReplyDelete
  20. வாசித்ததில் ஒரு விஷயம் அறிந்துகொண்ட திருப்தி அவ்வளவுதான்.....//
    பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  21. சென்னை பித்தன் கூறியது...

    இவர் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் ஒரு நிறுவனமும் வைத்துள்ளார் என நினைக்கிறேன்.ஏதோ நல்லது நடந்தாச் சரி!
    (எங்கே காணாமப் போயிட்டீங்க?)// நன்றி டூர் போயிருந்தேன்..

    ReplyDelete
  22. சென்னை பித்தன் கூறியது...

    இவர் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் ஒரு நிறுவனமும் வைத்துள்ளார் என நினைக்கிறேன்.ஏதோ நல்லது நடந்தாச் சரி!
    (எங்கே காணாமப் போயிட்டீங்க?)// நன்றி டூர் போயிருந்தேன்..

    ReplyDelete
  23. வணக்கம் சகோ, நீண்ட நாளின் பின்னர் அதிரடியான அரசியல் தகவலோடு வந்திருக்கிறீர்கள்.

    பாபாராம் தேவின் உண்ணாவிரத நோக்கம் நிறைவேறி, ஊழலற்ற வகையில் மக்கள் வாழ்வு செழிக்க,அரசியல்வாதிகள் மாற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. இராஜராஜேஸ்வரி கூறியது...

    பகிர்வுக்கு நன்றி./// nanri..

    ReplyDelete
  25. பகிர்விற்கு நன்றி, கருண். பயணத்தில் சந்திக்கலாமென்று எண்ணியிருந்தேன். பரவாயில்லை,17.06.11ல் சந்திப்போம்.

    ReplyDelete
  26. Speed Master கூறியது...

    தக்காளி நல்லது நடந்துதா சரி

    நாட்டுக்கும்
    வியட்நாமுக்கும்/// இதுல வியட்நாம் எங்கிருந்து வந்தது?

    ReplyDelete
  27. தங்கம்பழனி கூறியது...

    பகிர்வுக்கு மிக்க நன்றி கருன்..!/// நன்றி நண்பா..

    ReplyDelete
  28. சசிகுமார் கூறியது...

    பொறுத்திருந்து பார்ப்போம் பொதுநலமா சுயநலமா என்று// பாக்கலாம் சசி..

    ReplyDelete
  29. பிரபலங்கள் இந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டும்போது இன்னும் கூடுதலாக ஈர்ப்பு கிடைக்கும் அதோடு அதிகளவில் இந்த விஷயம் மக்களை சென்றடையும். ம்... பார்க்கலாம்....

    ReplyDelete
  30. இவரை பற்றி தெரியாதவர்கள் வட இந்தியாவில் குறைவு....

    ReplyDelete
  31. இவர் திறமையான பேச்சாளரும் கூட....!!!

    ReplyDelete
  32. எதோ நல்லது நடந்தால் சரி தான்...

    ReplyDelete
  33. அம்பாளடியாள் கூறியது...

    வாசித்ததில் ஒரு விஷயம் அறிந்துகொண்ட திருப்தி அவ்வளவுதான்.....//
    பகிர்வுக்கு நன்றி..../// முதல் முறை வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  34. நல்லது நடந்தால் கைதட்டுவோம்

    ReplyDelete
  35. நிரூபன் கூறியது...

    வணக்கம் சகோ, நீண்ட நாளின் பின்னர் அதிரடியான அரசியல் தகவலோடு வந்திருக்கிறீர்கள்.

    பாபாராம் தேவின் உண்ணாவிரத நோக்கம் நிறைவேறி, ஊழலற்ற வகையில் மக்கள் வாழ்வு செழிக்க,அரசியல்வாதிகள் மாற வாழ்த்துக்கள்.// nanri sago..

    ReplyDelete
  36. FOOD கூறியது...

    பகிர்விற்கு நன்றி, கருண். பயணத்தில் சந்திக்கலாமென்று எண்ணியிருந்தேன். பரவாயில்லை,17.06.11ல் சந்திப்போம்./// கண்டிப்பாக நண்பா..

    ReplyDelete
  37. குடந்தை அன்புமணி கூறியது...

    பிரபலங்கள் இந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டும்போது இன்னும் கூடுதலாக ஈர்ப்பு கிடைக்கும் அதோடு அதிகளவில் இந்த விஷயம் மக்களை சென்றடையும். ம்... பார்க்கலாம்....//
    முதல் முறை வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  38. அன்பின் கருண் - அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து - அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி - ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இன்னொரெ உண்ணா விரதமா ? தனனிப் பிரபலப் படுத்திக் கொள்வதற்காகத்தான் செய்கிறார். தேவை யற்ற ஒன்று. நட்புடன் சீனா

    ReplyDelete
  39. வாழ்க வளமுடன்
    உண்ணாவிரதம் இருப்பது
    அவரால் முடியும்
    நம்மால் ???
    மன்னிக்கவும் என்னால் முடியாது இருந்தாலும்
    ஆதரவு உண்டு நல்ல விசியம் நடக்கட்டும்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  40. சாமியார்கள் என்றால் நம்பவே முடியாமல் இருக்கிறது இப்பல்லாம்.ஆனாலும் நல்லது நடந்தால் நல்லதே !

    ReplyDelete
  41. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    இவரை பற்றி தெரியாதவர்கள் வட இந்தியாவில் குறைவு....//அப்படியா எனக்கு இன்றுதான் அவரைப் பற்றி தெரியும்.

    ReplyDelete
  42. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    இவர் திறமையான பேச்சாளரும் கூட....!!!// ஆமாம்.

    ReplyDelete
  43. கந்தசாமி. கூறியது...

    எதோ நல்லது நடந்தால் சரி தான்...// உண்மை நண்பா..

    ReplyDelete
  44. நாட்டின் நன்மைகாக உண்ணாவிரதமா அல்லது புகழ்ச்சிகாகவா

    ReplyDelete
  45. பிரபாஷ்கரன் கூறியது...

    நல்லது நடந்தால் கைதட்டுவோம்/// முதல் முறை வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  46. நல்லது நடக்கணும்

    ReplyDelete
  47. பாபா ராம்தேவின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. //# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
    உண்ணாவிரதம் நல்ல விஷயம்தான் ஒரு வேளை இது பிரபலத்திற்காக இல்லாமல் இருந்தால் சரி.//

    நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
  49. வந்தாச்சா? சவுக்கியமா?

    ReplyDelete
  50. என்ன ரெண்டு நாட்களாக ஆளை காணோம் சகோ?நடக்கட்டும் போராட்டம்..ஒழியட்டும் ஊழல்....,

    ReplyDelete
  51. ம்ம்ம் என்ன வேணாலும் பண்ணட்டும், நாங்க ஒத்து வந்தாதானேன்னு காங்கிரஸ்காரனுங்க மல்லு கட்டிட்டி இருக்கானுங்கோ

    ReplyDelete
  52. எனக்கென்னவோ இவர் விளம்பரத்துக்காக ஸ்டண்ட் அடிக்கிற மாதிரி தெரியுதே. ஏன் சாமியார்ங்கறதாலயா????

    ReplyDelete
  53. எதோ கிசு கிசுதான் சொல்வீங்க போல ஓடோடி வந்தேன்.

    சரி!நீங்கதான் சொல்லல.அதனால ஒன்று.எந்த தொலைக்காட்சியென்று நினைவில்லை.மூன்று பெண்கள் ஒன்றாக சேர்ந்து பிரபலங்களை கலாய்க்கும் நிகழ்ச்சியொன்றில் ராம் தேவிடம்”பாபா உங்களுக்கு அந்த மாதிரி பீலிங்கெல்லாம் வருமா”ன்னு கேட்டாங்க.ராம் தேவ் பாபா சிரித்து மழுப்பி விட்டார்.இன்னும் எக்குத் தப்பான கேள்விகளுக்கு முகம் சிடுசிடுக்கவும் செய்தார்.

    நீதி:ஆன்மீகம் ஒரு மனிதனை ஓரளவுக்குத்தான் நேர்படுத்தும்.

    ராம் தேவ் பாபா செய்யும் வயிற்றை உள் இழுத்து வெளியே வரும் யோகா கலையும்,இன்னும் காலை நேரங்களில் யோகாசனப் பயிற்சியோடு உபதேசம் என்பதற்கு நிறைய மக்கள் கூட்டம் கூடுகிறது.

    ஊழலுக்கு எதிராக குரல்கள் எந்த திசையிலிருந்து தோன்றினாலும் வரவேற்போம்.

    ReplyDelete
  54. ஊழல் பெரிச்சாளிகலான, கருணாநிதி, ஜெயலலிதா ஊழல் ஒழிப்பு போராட்டம் என்று இறங்கினால் எப்படி இருக்குமோ அது மாதிரிதான் இது.

    இவருக்கு ஊழலை பற்றி பேச எந்த யோக்கிதையும் இல்லை. இவரே 1100 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். இந்த தகவல் அவர் தன்வாயால் பேட்டி ஒன்றில் தெரிவித்ததுதான் .

    இதுவல்லாமல் இவருக்கு சொந்தமான ஒரு தீவு ஒன்று ஸ்காட்லாந்தில் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் இவருக்கு பல நாடுகளில் சொத்துக்கள், சொகுசு பங்களாக்கள், பண்ணை வீடுகள், மருந்து கம்பெனிகள், இப்படி சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"