Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/08/2011

இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)


இது  பகுதி - 2

ரு நாள் ...
ஒரு வாரம் ...
ஒரு மாதம் ...
முகம் காட்ட
மறுத்துவிட்டாய் !

னதிற்குள் கலவரம்
நீ என்னை
வெறுக்கின்றாயா?
விரும்புகிறாயா?
உன்னிடமே
கேட்டு விட  தீர்மானம்
நிறைவேற்றிவிட்டேன்.

ன்று
உனக்கு முன்னால்
நீ போகும் பாதையை 
நான் 
ஆக்கிரமித்துக் கொண்டேன்.

தோ வருகிறாய் 
உன் பெயரை உச்சரித்தவுடன்
திசை மாறி 
திரும்பிப் பார்த்தாய்.

ப்போதும் நீ 
பேசவில்லை
உன் உதடுகள்  தான் 
ஒரு புன்னகை 
புரிந்துவிட்டு போனது.

தில் 
என்னையே மறந்துப் போனேன்
என்  காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?

மீண்டும் கலவரமானேன்!!!

ன்று
இரவு முழுவதும் 
விடியலுக்காகவே
விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக 
விடிந்தது...!

மீண்டும் உன்முன் 
உதயமானேன்,
நீ  என்னை 
உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

ரிதான் 
என் நம்பிக்கை 
மீண்டும் ஒருமுறை 
தோற்றுப் போனது !!?

தொடரும்..

29 comments:

  1. அருமை

    உண்மைச்சம்பவமா?

    ReplyDelete
  2. நல்ல ரசனை கவிதையில் . நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை நண்பரே . மீண்டும் சுவாசிப்போம் .

    ReplyDelete
  3. அருமை. நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. கவிதை அருமை. தோல்வியே வெற்றிக்கு அறிகுறி. தொடர்ந்து முயற்சிசெய்யுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உண்மை சம்பவம் கவிதையில் மிளிர்கிறது...

    சுவாரஸ்யமான ஒரு காதல் கதை....

    ReplyDelete
  6. மாப்ள இன்ட்லி பட்டனே காணோம்

    ReplyDelete
  7. மாப்ள கவித கவித!

    ReplyDelete
  8. மாப்ளை ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுனதை வெச்சே 50 பதிவு போட்டுடுவாரு போல,, ஹி ஹி

    ReplyDelete
  9. அசத்துங்க... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. கவிதை நன்று. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி.

    ReplyDelete
  11. காதல் ஒரு தொடர் கதை என்பர்;இங்கு தொடர் கவிதையாகி விட்டது!நன்று!

    ReplyDelete
  12. அழகிய கவிதை நடை

    ReplyDelete
  13. ///
    பிளாகர் சி.பி.செந்தில்குமார் கூறியது...

    மாப்ளை ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுனதை வெச்சே 50 பதிவு போட்டுடுவாரு போல,, ஹி ஹி
    ///


    கண்டுபிடிசுடிங்களா ....

    ReplyDelete
  14. ////FOOD சொன்னது…

    கவிதை நன்று. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி/// ரைட்டு

    ReplyDelete
  15. அப்போதும் நீ
    பேசவில்லை
    உன் உதடுகள் தான்
    ஒரு புன்னகை
    புரிந்துவிட்டு போனது.//

    என்ன பாஸ்...இப்படிப் பண்ணிட்டா...

    ReplyDelete
  16. சரிதான்
    என் நம்பிக்கை
    மீண்டும் ஒருமுறை
    தோற்றுப் போனது !!//

    உணர்ச்சிகரமான ஒரு படைப்பினை அழகாகக் கோர்த்துத் தருகிறீர்கள் சகோ. அருமையான கவிதை...சோக உணர்ச்சி இழையோடி, உங்களின் காதல் கவிதைக்கு மெருகூட்டுகிறது.

    இங்கே தொக்கி நிற்கும் விடயத்தை அறியும் ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  17. ரசிக்க கூடிய வகையில் இருந்தது கவிதை..உண்மைச் சம்பவமா? அனுபவமா?

    கவிதை இன்னும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது..

    ReplyDelete
  18. சரிதான்
    என் நம்பிக்கை
    மீண்டும் ஒருமுறை
    தோற்றுப் போனது !!?


    தோல்வி அல்ல இது
    நாளைய நம்பிக்கையின் தொடக்கம்
    நல்லது நலமாய் நடக்கும்

    ReplyDelete
  19. சூப்பர் கவிதை பாஸ்

    ReplyDelete
  20. ஹீ ஹீ

    யார் அந்த லக்கி பொண்ணு பாஸ் ??

    ReplyDelete
  21. //சரிதான்
    என் நம்பிக்கை
    மீண்டும் ஒருமுறை
    தோற்றுப் போனது !!?
    //

    அவங்களுக்கு கொடுத்து வைத்தது அவளோ தான் பாஸ்

    ReplyDelete
  22. நல்லது தொடருங்கள் ....அப்புறம் ..

    ReplyDelete
  23. அழகான காதல் கதையொன்று.
    உருவான கதையா...
    உருவகிக்கும் கதையா அருன் !

    ReplyDelete
  24. காதலை உசுப்பேற்றும் வரிகள்

    ReplyDelete
  25. உண்மையான அனுபவம் மாதிரி இருக்கே..விசும்பிகிட்டே எழுதியிருப்பாரோ டவுட்டு

    ReplyDelete
  26. ஆஹா வாத்யாரே.. நீங்களுமா?

    ReplyDelete
  27. ஆனாலும் கவிதை அருமை பாஸ்

    ReplyDelete
  28. மெல்ல கொள்ளும் காதல் என்பது உண்மைதான் போலிருக்கிறது.. அடுத்தது என்ன?
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"