Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/06/2011

இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)



இது  ஒரு தொடர்க(வி)தை,  கவிதை வடிவில் உள்ள உண்மைக்  கதை..
கொஞ்சம் பொறுமை வேண்டும் இதைப் படிப்பதற்கு ....

ரவெல்லாம் விழித்ததில் 
பகலில்
சிவந்து போன கண்கள்..!

ளமையில் காதலித்ததால் 
முதுமையில்
சிந்திப்போன கண்ணீர் ...!

ரண்டும் 
என்காதலை
ஞாபகப்படுத்துகின்றன
என் தன லக்ஷ்மியை...!

புதைந்துப் போன 
நினைவுகளை
தோண்டி எடுக்கிறேன்...!

ன்னோடும் 
உன் நினைவோடும் 
பள்ளியில்
சுற்றித் திரிந்த 
என் அகராதியை 
புரட்டிப் பார்க்கிறேன்...!

ள்ளியில்  படிக்கும்
மாணவர்கள் நாம்
காலை முதல் 
மாலை வரை
வகுப்புகளில்
நம் முகங்கள் 
சந்தித்துக் கொண்டன ...!

ரு நாள் 
உன் தவறி விழுந்த
நோட்டுப் புத்தகத்தில் 
உன் பெயர் தான்
என்
முதல் கவிதைக்கு
முகவரி தந்தது...!

ன்றுதான் 
எனக்குள் என்னை 
அறிமுகப் படுத்தியது காதல்...!

னுபவம் இல்லாத 
அனுபவத்திற்கு 
என் முனகல்களை எல்லாம் 
முடிச்சுப்போட்டு 
எழுதினேன் காகிதத்தில் 
அது உன் கைகளில் 
கடிதமாக...!

று நாள்
கண்களில்
காதலைத் தேக்கிக்கொண்டும்,
மனதில் ஆசைகளைச் 
சுமந்துக் கொண்டும்,
ஆவலோடு உன் வருகைக்காக 
காத்திருந்தேன்...!

மாற்றம்... மாற்றம்...!

- தொடரும் !!!

67 comments:

  1. 1990 எ லவ் ஸ்டோரின்னு டைட்டில் வெச்சுர்க்கலாம். மாப்ளையோட பழைய லவ் ஸ்டோரி போல. ஹி ஹி

    ReplyDelete
  2. முதல் கதை இல்லை கவிதை அசத்தலான தொடக்கம்...

    ஞாபகம் வருதே...
    ஞாபகம் வருதே...
    ஞாபகம் வருதே...
    ஞாபகம் வருதே...
    ஞாபகம் வருதே...
    ஞாபகம் வருதே...
    ஞாபகம் வருதே...
    ஞாபகம் வருதே...

    ReplyDelete
  3. ஆரம்ப அறிமுகம் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. இது நண்பருக்கு நேர்தது மாதிரி தெரியுதே

    ReplyDelete
  5. வாத்தியாரே சொந்த கதையா


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    லேப்டாப் மனோவின் New Keyboard
    http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html

    ReplyDelete
  6. நச்சுனு 3 ஓட்டு

    ReplyDelete
  7. காதல் கவிதை என்றாலே அதில் ஏமாற்றம் என்னும் சொல் எங்காவது வரவேண்டும் என்பது எழுதப் படாத விதியா?
    படித்துப் பாருங்கள்--
    http://chennaipithan.blogspot.com/2011/01/blog-post_27.html

    ReplyDelete
  8. என்ன நண்பரே கருண் உங்க சொந்த கதை போல இருக்கு... நல்ல இருக்கு

    ReplyDelete
  9. என்ன நண்பரே கருண் உங்க சொந்த கதை போல இருக்கு... நல்ல இருக்கு

    ReplyDelete
  10. அட அட அட பய புள்ள என்னமா உருகி இருக்கு.......மாப்ள சூப்பருய்யா!

    ReplyDelete
  11. ஓகே ஓகே...என்னாலையும் நறுக்குன்னு மூன்று ஓட்டுதான் குத்த முடிந்தது....கசாலி அண்ணன் லேப்டாப் இன்னும் சரியாக வரவில்லை...

    ReplyDelete
  12. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    முதல் ,மழை/// வாயா மாப்ள..

    ReplyDelete
  13. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    1990 எ லவ் ஸ்டோரின்னு டைட்டில் வெச்சுர்க்கலாம். மாப்ளையோட பழைய லவ் ஸ்டோரி போல. ஹி ஹி/// தலைப்பு நச்சுன்னு இருக்கு,...

    ReplyDelete
  14. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    முதல் கதை இல்லை கவிதை அசத்தலான தொடக்கம்...

    ஞாபகம் வருதே...// ஆமாம்..

    ReplyDelete
  15. இராஜராஜேஸ்வரி கூறியது...

    ஆரம்ப அறிமுகம் அருமை. பாராட்டுக்கள்// நன்றி சகோ..

    ReplyDelete
  16. ஷர்புதீன் கூறியது...

    இது நண்பருக்கு நேர்தது மாதிரி தெரியுதே// ஆமாம்..

    ReplyDelete
  17. Speed Master கூறியது...

    வாத்தியாரே சொந்த கதையா
    // இதில் பாதி என்னுடைய கதை மீதி ஏன் நண்பனுடையது..

    ReplyDelete
  18. Speed Master கூறியது...

    நச்சுனு 3 ஓட்டு// நன்றி..

    ReplyDelete
  19. ஏமாற்றம்... ஏமாற்றம்...!

    romba Emaanthu poitteenga pola

    super kavithai karun

    ReplyDelete
  20. சென்னை பித்தன் கூறியது...

    காதல் கவிதை என்றாலே அதில் ஏமாற்றம் என்னும் சொல் எங்காவது வரவேண்டும் என்பது எழுதப் படாத விதியா?// இருக்கலாம்..

    ReplyDelete
  21. அசோக் குமார் கூறியது...

    என்ன நண்பரே கருண் உங்க சொந்த கதை போல இருக்கு... நல்ல இருக்கு// நன்றி..

    ReplyDelete
  22. அசோக் குமார் கூறியது...

    என்ன நண்பரே கருண் உங்க சொந்த கதை போல இருக்கு... நல்ல இருக்கு// மீண்டும் நன்றி..

    ReplyDelete
  23. விக்கி உலகம் கூறியது...

    அட அட அட பய புள்ள என்னமா உருகி இருக்கு.......மாப்ள சூப்பருய்யா!// நன்றி மாப்ள..

    ReplyDelete
  24. NKS.ஹாஜா மைதீன் கூறியது...

    ஓகே ஓகே...என்னாலையும் நறுக்குன்னு மூன்று ஓட்டுதான் குத்த முடிந்தது....கசாலி அண்ணன் லேப்டாப் இன்னும் சரியாக வரவில்லை...// அப்படியா?

    ReplyDelete
  25. தமிழ்வாசி - Prakash கூறியது...

    hee....hee.... vaathiyaar kaathal paadam solli tharraaru./// கண்டுபிடிச்ட்டார்யா

    ReplyDelete
  26. sulthanonline கூறியது...

    ஏமாற்றம்... ஏமாற்றம்...!

    romba Emaanthu poitteenga pola

    super kavithai karun// நன்றி,,

    ReplyDelete
  27. நண்பன் நண்பன்னு சொல்லியே சொந்த கதைய சொல்லிடுறீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. Very nice . . I am waiting for balance kavithai

    ReplyDelete
  29. கவிதை அருமை!...சூப்பர்!.......
    சொந்தக் கதைமாதிரியே இருக்கு.
    (பழையபடி எங்க வீட்டில புரட்டாதிச்
    சனி விரதம்.இத ஏன் நான் சொன்னேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.நன்றி)
    வாழ்த்துகள் சகோதரரே!....

    ReplyDelete
  30. அண்ணரும் காதலில் வீழ்ந்திருக்கார் போல ...)

    ReplyDelete
  31. கண்ணீர், நினைவுகள், காதல், இதயம்
    இந்த வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் காதல் கவிதை எழுதவே முடியாதா உங்களால்?
    come out of the linearity!

    ReplyDelete
  32. கண்ணீர், நினைவுகள், காதல், இதயம்
    இந்த வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் காதல் கவிதை
    எழுதவே முடியாதா உங்களால்?
    come out of the linearity!

    ReplyDelete
  33. துவக்கமே அருமை நண்பா

    ReplyDelete
  34. காதல் அனுபவங்கள் கடைசிவரை கசக்காமல் இனிமையாக மனதில் நின்று மகிழ்ச்சியை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருப்பது, காதல் வெற்றியடையாமல் பாதியில் தொடர்கதைபோல நின்று போய்விடும்போது மட்டுமே!

    தொடருங்கள், வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  35. 1990 எ லவ் ஸ்டோரின்னு டைட்டில் வெச்சுர்க்கலாம். நல்லாருக்கு நல்லாருக்கு. அப்புறம் என்னாச்சு.. கடைசியா லவ்வர்ஸ் செர்ந்தாங்களா இல்லையா? வில்லன் யாரு?

    ReplyDelete
  36. கவிதையிலும் காதல் தொடர்...அருமை அருமை.தொடரட்டும் அருன் !

    ReplyDelete
  37. முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாதுன்னு சொல்லுவாங்களே! ஓ அதுதான் இதுவா கருன்?

    ReplyDelete
  38. சொந்த கதையென்பார் சிலர், சோகக்கதையென்பார் சிலர், ஆனால் கவிதை சூப்பரு வாத்யாரே!

    ReplyDelete
  39. பிரபாஷ்கரன் கூறியது...

    நண்பன் நண்பன்னு சொல்லியே சொந்த கதைய சொல்லிடுறீங்க வாழ்த்துக்க// நன்றி..

    ReplyDelete
  40. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    Very nice . . I am waiting for balance kavithai/// கண்டிப்பா நண்பா..

    ReplyDelete
  41. அம்பாளடியாள் கூறியது...

    கவிதை அருமை!...சூப்பர்!.......
    சொந்தக் கதைமாதிரியே இருக்கு.
    (பழையபடி எங்க வீட்டில புரட்டாதிச்
    சனி விரதம்.இத ஏன் நான் சொன்னேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.நன்றி)
    வாழ்த்துகள் சகோதரரே!....// ம்..ம்.. புரிந்த மாதிரி இருக்கு,, ஆனா புரியல..

    ReplyDelete
  42. கந்தசாமி. கூறியது...

    அண்ணரும் காதலில் வீழ்ந்திருக்கார் போல ...)/// அன்புக்கு அடிமையாகாதவர்கள் யார்?

    ReplyDelete
  43. நாம் அனுபவித்ததை மட்டுமே கவிதையாக எழுதணும்னு எழுதப்படாத விதியிருக்கிறதா என்ன? மற்றவர்களின் நிலைமையில் நாம்நின்றுகூட நம்முடைய உணர்வுகளு்க்கு கவி வரைவு தரலாம்தானே சகோதரரே. யாருடைய கதை என்பது முக்கியமல்ல. என்ன கதைக்குது கவி என்பது தான் முக்கியம். அடுத்த அத்தியாயாம் எப்போது சகோ?

    ReplyDelete
  44. சமுத்ரா கூறியது...

    கண்ணீர், நினைவுகள், காதல், இதயம்
    இந்த வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் காதல் கவிதை எழுதவே முடியாதா உங்களால்?
    come out of the linearity!// முயற்ச்சிக்கிறேன் சகோ..

    ReplyDelete
  45. முரளி நாராயண் கூறியது...

    துவக்கமே அருமை நண்பா// நன்றி..

    ReplyDelete
  46. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    தொடருங்கள், வாழ்த்துக்கள்!!/// கண்டிப்பாக..

    ReplyDelete
  47. Ashwin-WIN கூறியது...

    1990 எ லவ் ஸ்டோரின்னு டைட்டில் வெச்சுர்க்கலாம். நல்லாருக்கு நல்லாருக்கு. அப்புறம் என்னாச்சு.. கடைசியா லவ்வர்ஸ் செர்ந்தாங்களா இல்லையா? வில்லன் யாரு?/// தொடர்ந்து படியுங்கள் தெரியும்..

    ReplyDelete
  48. ஹேமா கூறியது...

    கவிதையிலும் காதல் தொடர்...அருமை அருமை.தொடரட்டும் அருன் !// நன்றி சகோ.. ஏன் பெயர் அருண் அல்ல கருண்..

    ReplyDelete
  49. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாதுன்னு சொல்லுவாங்களே! ஓ அதுதான் இதுவா கருன்?// ஆம் இதுதான் சகோ..

    ReplyDelete
  50. FOOD கூறியது...

    சொந்த கதையென்பார் சிலர், சோகக்கதையென்பார் சிலர், ஆனால் கவிதை சூப்பரு வாத்யாரே!// நன்றி..

    ReplyDelete
  51. கடம்பவன குயில் கூறியது...
    அடுத்த அத்தியாயாம் எப்போது சகோ?/// நாளை அல்லது நாளை மறு நாள்..

    ReplyDelete
  52. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் கூறியது...

    adengappa/// முதல முறை வருகைக்கு நன்றி சகோதரா..

    ReplyDelete
  53. ம்ம்ம்... அனுபவங்கள் சில புரிகின்றது. தொடருங்கள் நன்றாகத்தான் உள்ளது

    ReplyDelete
  54. Jana கூறியது...

    ம்ம்ம்... அனுபவங்கள் சில புரிகின்றது. தொடருங்கள் நன்றாகத்தான் உள்ளது//நன்றி..

    ReplyDelete
  55. அதுக்கப்புறம் என்னாச்சி .......

    ReplyDelete
  56. koodal bala கூறியது...

    அதுக்கப்புறம் என்னாச்சி .......// தொடர்ந்து படியுங்க தெரியும்..

    ReplyDelete
  57. பின்றீங்களே !தொடருங்கள் ....

    ReplyDelete
  58. பள்ளிக்கால நினைவுகளை தோண்டி விட்டீர்கள்

    ReplyDelete
  59. பாவம்யா வாத்தி......! ரொம்பத்தான் உருகி இருப்பாரு போல..... ம்ம் தொடரட்டும் தொடரட்டும்....!

    ReplyDelete
  60. இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)//

    ஆகா, தலைப்பே செம ஹாட்டா இருக்கே. இருங்க உள்ளார்ந்து இறங்கிப் படிப்போம்.

    ReplyDelete
  61. இரண்டும்
    என்காதலை
    ஞாபகப்படுத்துகின்றன
    என் தன லக்ஷ்மியை...!//

    பாஷ்...சான்சே இல்லை பாஸ்...பின்னிட்டீங்க...

    அதுவும் முதல் இரு பந்திகளில் உங்கள் உழைப்பின் வேகத்தினையும்,
    மூன்றாம் பந்தியில் இத்தனை வேலைச் சுமைகளுக்கு நடுவில் தனலக்‌ஷ்மி உங்களின் இதயத்தில்...
    அருமை

    ReplyDelete
  62. ஒரு நாள்
    உன் தவறி விழுந்த
    நோட்டுப் புத்தகத்தில்
    உன் பெயர் தான்
    என்
    முதல் கவிதைக்கு
    முகவரி தந்தது...!//

    வாத்தியாரே! இளமை பொங்க எழுதுகிறீர்கள்..

    ReplyDelete
  63. என் முனகல்களை எல்லாம்
    முடிச்சுப்போட்டு
    எழுதினேன் காகிதத்தில்
    அது உன் கைகளில்
    கடிதமாக...!//

    முதல் காதலுக்கான எழுத்துக்கள் தான் பலரைக் கவிஞர்களாக இந் நாட்டுல் உருவாக்கியிருக்கிறதாம்;-))

    ReplyDelete
  64. ஏமாற்றம்... ஏமாற்றம்...!//

    அருமையான ஒரு கவிதையை சஸ்பென்ஸ் வைத்து முடித்துள்ளீர்கள்.
    அடுத்த அங்கம் எப்போது வரும்....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"