Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/22/2011

நேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா?


ம் முன்னோர் இயற்கையை வழிபட்டதன் காரணமாக, அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஆனால், அரசியல் பின்னணி கொண்ட சிலர், இயற்கை வளங்களை முடிந்த அளவுக்கு அழித்து வருகின்றனர். 

மிழகத்தில், ஆற்று மணல் கொள்ளை மூலம், ஒரு தரப்பினர், கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். வனங்களை அழித்து, மரங்களை கடத்துவது தொடர்கிறது. இதற்கு சான்றாக, மலைகளையொட்டிய மாவட்ட கிராமங்களில், யானைகள், சிறுத்தைகள் ஊடுருவுகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. 

சிட்டுக் குருவி இனமே மாயமாகி விட்டது. விவசாய நிலங்கள், விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுகிறது. பாலித்தீன் பயன்பாடு, டயர்களை எரிப்பது போன்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, மக்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகி விட்டது.

ற்கனவே ஆட்சியில் இருந்த போது, மழை நீர் சேமிப்பு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த வழி செய்த முதல்வர் ஜெயலலிதா, இம்முறை, இயற்கையை காப்பாற்ற, சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். 

ணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாற்று வழிமுறைகளை கண்டறிந்து, வனங்களை காத்து, விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயர செய்ய வேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆராய வேண்டும். இயற்கையை காப்பதன் மூலம், இனத்தை காப்பாற்ற முடியும். செய்வாரா முதல்வர்?

33 comments:

  1. பொறுங்கப்பா இப்பத்தானே வந்திருக்கிறாரு!

    ReplyDelete
  2. என்னாச்சு ரொம்ப நாளா நம்ம பக்கம் காணல்

    ReplyDelete
  3. //
    ""நேர்மையிருந்தால்"" இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா?//

    ஹா ஹா செம ஜோக் பாஸ்

    ReplyDelete
  4. நல்லதொரு அலசல். அரசியல்வாதிகள் கொஞ்சம் சிந்தித்து நடந்தால் நல்லது

    ReplyDelete
  5. போகப் போகப் புரியும் இந்த பூவின் வாசம் தெரியும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

    ReplyDelete
  6. அவருக்கு கொஞ்சம் டைம் குடுங்கய்யா சும்மா புளுபுளுன்னுட்டு...

    ReplyDelete
  7. Summa MANO annanuku poteya template comment poten

    ReplyDelete
  8. ya..may be she can do.. she have ability to do anything for nature.. its already proved as u said. we can just wait and see

    ReplyDelete
  9. நிச்சயமாகச் செய்வார் என்றே நம்புவோம். இப்போதைக்கு நம்பிக்கை வைப்பதே நல்லது.

    ReplyDelete
  10. நல்லதுதான் சொல்றீங்க!பார்க்கலாம்!

    ReplyDelete
  11. ஆம் சகோ...பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ..காலம் எல்லாற்றிற்கும் பதில் கண்டிப்பாக வைத்திருக்கும் :)

    ReplyDelete
  12. இப்பதானே வந்திருக்கங்க. கொஞ்சம் டைம் கொடுக்கலாமே. என்னென்ன பண்ராருன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ReplyDelete
  13. நிச்சயமாய் செய்வார் என்று நம்பலாம். நிலத்தடி நீர்மட்டம் உயர சட்டம் போட்டு வழிசெய்தவர் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று உறுதியாக நம்புவோம்.

    ReplyDelete
  14. நிச்சயமாய் செய்வார் என்று நம்பலாம். நிலத்தடி நீர்மட்டம் உயர சட்டம் போட்டு வழிசெய்தவர் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று உறுதியாக நம்புவோம்.

    ReplyDelete
  15. பொறுங்கப்பா போகப் போகப் புரியும்.
    மிக அருமையான சிந்தனை
    நம்ம பக்கம் காணல

    ReplyDelete
  16. நம் முன்னோர் இயற்கையை வழிபட்டதன் காரணமாக, அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஆனால், அரசியல் பின்னணி கொண்ட சிலர், இயற்கை வளங்களை முடிந்த அளவுக்கு அழித்து வருகின்றனர்.//

    என்ன செய்ய முடியும் சகோ. கேட்க யாருமில்லை என்றால் அடாவடி என்பது ஊரில் சகஜம் தானே(((;-

    ReplyDelete
  17. அம்மாவிடம் மக்கள் நலன் சார்ந்து நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள், கூற்றுக்கள் நியாயமானவை. அவை எப்போது நிறை வேறுகின்றன என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  18. நானும் ஆஜர் நண்பா...

    ReplyDelete
  19. நல்ல பதிவு.
    நல்ல வழி பிறக்க வேண்டும்.

    ReplyDelete
  20. செய்யட்டும் செய்யட்டும்

    ReplyDelete
  21. கருண்! கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

    ReplyDelete
  22. மாப்ள நேத்து உனக்கு தான் கமண்ட்டு போட்டதா ஞாபகம்........அய்யய்யோ யாருக்கு போட்டேன்னு தெரியலியே!

    ReplyDelete
  23. கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்,காலம்மாறும்!

    ReplyDelete
  24. நிச்சயம் புரட்சி தலைவி முதல்வர் அம்மா இதை எல்லாம் செய்வார்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"