Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/15/2011

நான் நினைத்தது தான் நடந்தது விஜய் உற்சாகப் பேட்டி


சன்டேன்னா  வேடந்தாங்கலில் சினிமா செய்திதானே .. இன்றைய செய்தி ..
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.   இந்த தேர்தல் முடிவுகள் விஜய் ரசிகர்களையும் அவரையும் அதிகமான உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தேன். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தேன் என் ரசிகர்களும் என் முடிவை ஏற்றுக்கொண்டனர்.  

வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும்,  ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்.   அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன்.

நான் நினைத்ததையே மக்களும் நினைத்தார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.   நான் நினைத்தது நடந்துவிட்டது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து விஜய் நடித்து வரும் வேலாயுதம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 

ஜெயம் ராஜா இயக்கி இருக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஜெனிலியா நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் டிரெய்லர் ஜெயா டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.
செய்தி உதவி நக்கீரன்.

வலைச்சரத்தில்  இன்று :  என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்

20 comments:

  1. விஜய்க்கும் ஒரு காலம்!
    வலைச்சர அறிமுகத்துக்கு இங்கும் நன்றி!

    ReplyDelete
  2. விஜய்க்கு இனி பயம் போச்சா

    ReplyDelete
  3. பயபுள்ள ரொம்ப பயந்து கிடந்தாரு

    ReplyDelete
  4. விஜய் அரசியல்ல குதிக்காம டேக்கா கொடுத்துட்டாரு

    ReplyDelete
  5. Velayudham trailer already played in jaya tv

    ReplyDelete
  6. ஜெயலலிதா ஜெயிச்சதுக்கு யார் சந்தோசபட்டான்களோ இல்லையோ, சின்ன டாகுடர் நிச்சயமா ரூம் போட்டு சிரிச்சிருப்பார்....

    ReplyDelete
  7. விஜய் காமெடி... Interesting.

    ReplyDelete
  8. தேர்தல் முடிவுகளால்; விஜய்க்கு அரசியல் ஆசை மீண்டும் துளிர் விட்டுள்ளது போல தெரிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. ////ஜெயலலிதா ஜெயிச்சதுக்கு யார் சந்தோசபட்டான்களோ இல்லையோ, சின்ன டாகுடர் நிச்சயமா ரூம் போட்டு சிரிச்சிருப்பார்../// ஹஹாஹா சூப்பர் மனோ மாஸ்டர்...

    ReplyDelete
  10. விஜயின் அப்பா நல்லாவே ஜால்றா அடிக்கிறாரு.. மகனும் தான். எஸ்.ஏ.சி. மது பான ஃபேக்டரி ஆரம்பிக்க, அம்மா OK சொல்லீட்டாங்களா?

    ReplyDelete
  11. //சென்னை பித்தன் கூறியது...
    வலைச்சர அறிமுகத்துக்கு இங்கும் நன்றி!//
    நானும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  12. அப்போ டாகுடரு இனி பழையபடி எல்லா படத்தையும் ‘ஓட்டிடலாம்’...

    ReplyDelete
  13. டாகுடரு நைனாதான் பாவம், எப்படியாவது ரெண்டு சீட்டு வாங்கி இருந்தா இன்னேரம் கெலிச்சிருப்பாரு....!

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் இன்று என்னைப் பற்றி குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே, உங்கள் அன்பில் நெகிழ்கிறேன். மீண்டும் நன்றிகள்!

    ReplyDelete
  15. தமிழ்நாட்டு மக்கள் இனி வரும் 5 ஆண்டுகள் பஞ்சம் பிழைக்க வெளிமாநிலத்திற்கு செல்ல உதவிய நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  16. செம காமெடி


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே

    http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html

    ReplyDelete
  17. அப்பாவும் என்னென்னமோ பப்ளிசிட்டி செய்துதான் பிள்ளையை திரைத்துறையில் கொண்டுவந்தமாதிரி அரசியலிலும் கொண்டுவரணும்னு மெனக்கெடுகிறார். நல்ல அப்பா.....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"