Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/06/2011

வளைகுடாவில் தமிழன்...!




நாங்கள் ,
திரவியம் தேடி ஓடி வந்தோம்...!
இடையில் முகவரி மறந்தோம்..!

ல்லோன்று வாங்கிட 
இளமையை விற்றோம்...!

காதலைத் துறந்து 
வீடு மனை வாங்கினோம்...!

வாலிபத்தை கரைத்து
வங்கி கணக்கை ஏற்றினோம்...!

ளநரை பெற்றோம்,
இளைமையைத் தொலைத்தோம்,
பணம் பண்ணும்
இயந்திரங்கள் ஆனோம்...!


காற்றில்லா ஆடி,
கொலுவில்லா  புரட்டாசி,
பொரியில்லா கார்த்திகை,
கோலமில்லா மார்கழி ,
கும்மியில்லாப் பொங்கல் ,
எம்  பிள்ளைகள் 
இழந்தவை தான் எத்தனை...!

ணல் வீடு கட்ட 
ஆற்று மணலில்லை ,
கட்டிய வீட்டைக் கலைக்க 
அத்தை, மாமன்
மக்களுமில்லை...!

ழைக்கு முன் வீசும் 
மண்வாசம் நுகர்ந்ததில்லை ,
மழை பெய்த ஈரமண்ணை 
வெறும் பாதம் தொட்டதில்லை...!

ம்..ம்...
நாங்கள்,
திரவியம் தேடி ஓடி வந்தோம்,
டாலர் நாடி 
ஓடிக்கொண்டிருக்கிறோம்...!


57 comments:

  1. வாலிபம் போனபின் வாழ்கை என்னாகும்.....வயது போன காலத்தில் எண்ணி வருந்துவதை தவிர நண்பா!

    ReplyDelete
  2. ஃபாரீன் பதிவர்கள் எல்லாம் வந்து கும்மப்போறாங்க ஹா ஹா

    ReplyDelete
  3. விக்கி உலகம் சொன்னது…

    வாலிபம் போனபின் வாழ்கை என்னாகும்.....வயது போன காலத்தில் எண்ணி வருந்துவதை தவிர நண்பா!
    /// அமாம் நண்பா ..

    ReplyDelete
  4. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    ஃபாரீன் பதிவர்கள் எல்லாம் வந்து கும்மப்போறாங்க ஹா ஹா /// இதுல கும்மரதுக்கு என்ன இருக்கு..

    ReplyDelete
  5. நல்லாத்தான் சொல்றீங்க ஆனா....

    ReplyDelete
  6. சொந்த பதிவு போடறவங்க... யோசனை செய்து போட நேரம் போதாது, திருட்டு பதிவு, ஆனந்த விகடன், ஜீவி, நக்கீரன் போன்ற காப்பி பேஸ்ட் பதிவென்றால் வாரத்திற்கு 300 பதிவு போடலாம்.அனைத்து திருட்டு பதிவுகள் தானே! மத்தவங்க திருடும் முன் சீக்கிரமா திருட வேண்டிய கட்டாயம். பொதுவாக, திருட்டுக்கு அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது திருட்டு பதிவர்களின் லட்சியம்.பாவம்...

    ReplyDelete
  7. விமர்சனம் சொன்னது…

    சொந்த பதிவு போடறவங்க... யோசனை செய்து போட நேரம் போதாது, திருட்டு பதிவு, ஆனந்த விகடன், ஜீவி, நக்கீரன் போன்ற காப்பி பேஸ்ட் பதிவென்றால் வாரத்திற்கு 300 பதிவு போடலாம்.அனைத்து திருட்டு பதிவுகள் தானே! மத்தவங்க திருடும் முன் சீக்கிரமா திருட வேண்டிய கட்டாயம். பொதுவாக, திருட்டுக்கு அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது திருட்டு பதிவர்களின் லட்சியம்.பாவம்...
    /// நன்றி முகம் தெரியாத நண்பரே..

    ReplyDelete
  8. அப்பாவின் பாசம் என்பதையே தெரியாமல் உள்ளன வெளிநாட்டில் வேலை செய்யும் அன்பர்களின் குழந்தைகள். என்ன செய்வது வாழ்ந்தாக வேண்டுமே

    ReplyDelete
  9. ம்ம்...புலம்பெயர் உறவுகளின் வலிகளை உணர்த்தும் கவிதை
    நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  10. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று முன்னோர்கள் சொல்லி வைத்தது தானே. ஒன்றை விட்டு ஒன்றை பெறுகிறோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லையே. :-(

    ReplyDelete
  11. வாலிபத்தை கரைத்து
    வங்கி கணக்கை ஏற்றினோம்...!//

    இவை...வலிகளைச் சொல்லும் வார்த்தைகள்..
    கவிதையில் புலம் பெயர் உறவுகள் படும் கஷ்டங்களை உணர்வூட்டிச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  12. காற்றில்லா ஆடி,
    கொலுவில்லா புரட்டாசி,
    போரியில்லா கார்த்திகை,
    கொலமில்லா மார்கழி ,
    கும்மியில்லாப் பொங்கல் ,
    எம் பிள்ளைகள்
    இழந்தவை தான் எத்தனை...!//

    கவிதையினுள் மாதங்களை உள் நுழைத்து, எல்லா நாளுமே இருண்ட நாட்கள் போலத் தான் அவர்கள் வாழ்வு எனும் படி விளித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  13. இன்னோர் சந்ததிக்காக, தங்களை வருத்தும், இவர்கள் செய்யும் தியாகங்கள் தான் எத்தனை எத்தனை.

    ReplyDelete
  14. வேதனையின் விளிம்பு கவிதை.

    ReplyDelete
  15. இனிமையான யதார்த்தமான கவிதை..!மனதை கணக்கச் செய்தது..!

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கருன் அவர்களே..!

    ReplyDelete
  16. அருமையான மேட்டரை கவிதையா சொல்லிட்டீங்க

    ReplyDelete
  17. கடல் கடந்து வாழ்பவர்களின் கவலைகளை கண்ணீராய் உணர்த்துகிறது...அருமை...

    ReplyDelete
  18. அடுத்தவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வதே பெரிய விஷயம்! நீங்க கவிதை வேறு எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  19. தியாகங்களின்றி வாழ்க்கையில்லை!
    நல்ல சிந்தனைக் கவிதை!

    ReplyDelete
  20. //மழைக்கு முன் வீசும்
    மண்வாசம் நுகர்ந்ததில்லை ,
    மழை பெய்த ஈரமண்ணை
    வெறும் பாதம் தொட்டதில்லை...!//
    அருமை,அருமை.

    ReplyDelete
  21. வலிகளுக்கு வார்த்தைகளால் மருந்திட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. சொந்தங்களை விட்டு அக்கறை சீமையில் இருப்பவர்களின் வலி புரிகிறது உங்கள் கவிதையில்.

    ReplyDelete
  23. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
    ஃபாரீன் பதிவர்கள் எல்லாம் வந்து கும்மப்போறாங்க ஹா ஹா//
    கருன் நல்ல கவிதை எழுதினா பாராட்டுறத விட்டுட்டு ஹா ஹாவா. பொறாமை பொறாமை.

    ReplyDelete
  24. வளைகுடாவாழ் தமிழர்களின் மன ஓட்டத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ள பதிவு. சூப்பர் கருன்.

    ReplyDelete
  25. ####
    மணல் வீடு கட்ட
    ஆற்று மணலில்லை ,
    கட்டிய வீட்டைக் கலைக்க
    அத்தை, மாமன்
    மக்களுமில்லை...!
    ####

    அருமையான வரிகள்...

    பாலைவனத்தில் சேகரித்த மணலை கொண்டு சொந்த ஊரில் வீடு கட்டும் வளைகுடா வாழ் தமிழர்களின் மனநிலையை எடுத்துரைக்கிறது.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. நல்ல கருத்துள்ள கவிதை கருன்!

    ReplyDelete
  28. good poem karun. you have friends to vote minus for your posts ah.. great man. then its proved you are a good blogger.

    ReplyDelete
  29. Very painful poem . . Very Good . .

    ReplyDelete
  30. ம்ம், ஈடு செய்ய முடியாத இழப்புகள் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும்..

    இதே கருத்துகொண்ட கவிதை ஒன்றை நானும் கிறுக்கி இருக்கிறேன்.. நேரம் இருக்கும்போது பார்க்கும்படி கேட்டுகொள்கிறேன்

    "தேடல்களை தொலைத்துவிட்டேன்"
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  31. அன்பின் கருண்

    கவிதை அருமை. என்ன செய்வது - சிலவற்றை இழந்தால் தான் பலவற்றைப் பெற இயலும். நமது சுற்றம் நன்றாக இருக்க நாம் செய்யும் தியாகங்கள் இவை.

    எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாமே நண்பா

    போரியில்லா - கொலமில்லா - ம்ம்ம்ம்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  32. உண்மைதான்..இவர்கள் குடும்பத் தியாகிகள்.

    ReplyDelete
  33. ஏக்கம்


    ================================
    நாமே ராஜா, நமக்கே விருது-6


    http://speedsays.blogspot.com/2011/05/6.html

    ReplyDelete
  34. //
    வீடு மனை வாங்கினோம்...!

    வாலிபத்தை கரைத்து
    வங்கி கணக்கை ஏற்றினோம்...!//

    இது இன்னும் எனக்கு நடக்காத காரியம்..!!!!! ம்ஹும் நானும் வளைகுடாவில்.....

    ReplyDelete
  35. கலக்கீட்டிங்க பாஸ் உண்மையிலே வெளிநாட்டு வாழ்க்கையின் அவஸ்த்தைகளை கண் முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்

    ReplyDelete
  36. உண்மைதான் வேதனையான நிலையை அழகாகச் சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  37. All are true and practically happening...especially i am feeling that...

    ReplyDelete
  38. வெளி நாட்டில் இருக்கும் எங்களைப்போன்றோரின் உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    //கவிதை அருமை. என்ன செய்வது - சிலவற்றை இழந்தால் தான் பலவற்றைப் பெற இயலும். நமது சுற்றம் நன்றாக இருக்க நாம் செய்யும் தியாகங்கள் இவை. //

    சீனா ஐயா சொல்வது போலத்தான்.

    ReplyDelete
  39. உண்மைதான் சகோ. குடும்பத்தை இங்கே விட்டு்ட்டு அயல்நாட்டில் பணிபுரிபவரகள் தன்னையே உருக்கி மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்திகளே. என்ன செய்ய. குடும்பத்திற்காக குடும்பத்தையே பிரிந்து வாடவேண்டியிருக்கு. தங்கள் கவிதை உண்மையின் உரைகல்.

    ReplyDelete
  40. கவிதை நல்லா இருக்கு கரூன்.

    ReplyDelete
  41. மனதை கனக்கவைத்தௌண்மையான
    வரிகள்.

    ReplyDelete
  42. வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html

    ReplyDelete
  43. அருமையான வரிகளில் உண்மை நிலையை விளக்கும் பதிவு.

    ReplyDelete
  44. உண்மைகளை எடுத்துரைக்கும் கவிதை..

    வாழ்த்துகள் கருன்

    ReplyDelete
  45. வளைகுடாவுக்கு சென்றாவது மனை வாங்கிடுறிங்க.நாங்க அதுவுமில்லாம
    வெயிலுக்கும் மழைக்கும் அல்லாடுறோம்.

    ReplyDelete
  46. தன் குடும்பத்திற்காக, நாடு விட்டு நாடு வந்து வாழ்க்கையின் அத்துணை கசப்புக்களையும் வருத்தமில்லாமல் விழுங்கும் ஒவ்வொரு மனிதனுக்கு உங்கள் இந்த கவிதை சமர்பணமாகட்டும்.

    ReplyDelete
  47. உங்கள் கவிதையில் இது சிறப்பான ஒன்று. இன்னும் இது போன்று உணர்வு மிக்க கவிதைகளை தாருங்கள்,\

    ReplyDelete
  48. //இளநரை பெற்றோம்,
    இளைமையைத் தொலைத்தோம்,
    பணம் பண்ணும்
    இயந்திரங்கள் ஆனோம்...!

    மிக கவித்துவமாய் வலியை சொல்லிய இடம் இது.

    ReplyDelete
  49. வெளிநாட்டில் வாழும் நம் பிள்ளைகளின் வலியை உணர்த்தும் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  50. கண்களை விற்று சித்திரம் வாங்கும் வித்தைக்காரார்கள்.

    ReplyDelete
  51. டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?
    http://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post_09.html

    @NKS.ஹாஜா மைதீன்
    @வேடந்தாங்கல் - கருன்
    @Abu Sana
    @MANO நாஞ்சில் மனோ
    @ஆர்.கே.சதீஷ்குமார்
    @கக்கு - மாணிக்கம்

    டோனி மது விளம்பரங்களில் நடிப்பதும் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதும் எவ்வளவு பெரிய கேடாக முடியும் என்பது நான் சொன்னால் உங்களுக்கு விளங்காது. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான அதிபர் விஜய மல்லயா என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்:

    “F1 and Cricket are part and parcel of our business tools for promotion, and are sports in which, not only I am interested, but in which India is hugely interested.

    Why do you think I paid $112m for Royal Challengers cricket team?

    In India…cricket is almost like a religion. You then have the young demographic, new consumers coming into my industry, who are going to turn 21, coming of legal drinking age.

    The same people are going to watch cricket, are going to enter the consumer sector of India, and advertisers are going to look at that ever-increasing consumer sector.”

    - Vijay Mallya, chairman of the United Breweries Group (the king of India Liquor Industry)

    http://www.bbc.co.uk/news/business-12217018

    http://alcoholfreecricket.blogspot.com

    ReplyDelete
  52. டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?
    http://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post_09.html

    @NKS.ஹாஜா மைதீன்
    @வேடந்தாங்கல் - கருன்
    @Abu Sana
    @MANO நாஞ்சில் மனோ
    @ஆர்.கே.சதீஷ்குமார்
    @கக்கு - மாணிக்கம்

    டோனி மது விளம்பரங்களில் நடிப்பதும் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதும் எவ்வளவு பெரிய கேடாக முடியும் என்பது நான் சொன்னால் உங்களுக்கு விளங்காது. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான அதிபர் விஜய மல்லயா என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்:

    “F1 and Cricket are part and parcel of our business tools for promotion, and are sports in which, not only I am interested, but in which India is hugely interested.

    Why do you think I paid $112m for Royal Challengers cricket team?

    In India…cricket is almost like a religion. You then have the young demographic, new consumers coming into my industry, who are going to turn 21, coming of legal drinking age.

    The same people are going to watch cricket, are going to enter the consumer sector of India, and advertisers are going to look at that ever-increasing consumer sector.”

    - Vijay Mallya, chairman of the United Breweries Group (the king of India Liquor Industry)

    http://www.bbc.co.uk/news/business-12217018

    http://alcoholfreecricket.blogspot.com

    ReplyDelete
  53. Boss...Kadai kaaliyaa irukke...Waiting for your new post...

    ReplyDelete
  54. Mind blowing words in poem,very meaningful and with many truths about the life..........

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"