Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/04/2011

விக்ரமிற்கு இன்னொரு தேசிய விருது!


 விக்ரம்-அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதை மதரசபட்டிணம் படத்தை இயக்கிய விஜய் இயக்கியுள்ளார். இவர் அஜீத் நடித்த கிரீடம் படத்தை இயக்கியவர். 

தெய்வத்துமகன் படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருக்கிறார் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடும் நிகழ்ச்சியில் விக்ரம், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படத்தின் டெக்னீஷியங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, தெய்வத்திருமகன் என் திரையுலக வாழ்கையில் திருப்பு முனைப்படம். படப்பிடிப்பு ஹாலிடே மாதிரி கழிந்தது. நீரவ்ஷா ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை, படத்துக்கு பெரிய பலம். அருமையான பாடல்களை ஜி.வி.பிரகாஷ் பண்ணி இருக்கிறார். என்னுடன் நடித்த எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

உணர்வுப்பூர்வமான சீன்கள், சென்டிமென்ட் காட்சிகள் நிறைய இருக்கு. கிளைமாக்ஸ் அற்புதமாக வந்துள்ளது. அனுஷ்கா கிளாமர் குயினாக இருக்கிறார். அவரை இந்த படத்தில் வித்தியாசமாக பார்க்கலாம். தயாரிப்பாளர் மோகன் நடராஜன் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்.
விஜய் அற்புதமான இயக்குனர். குழந்தை தனமாக பழகுவார். படத்திலும் அவர் குணத்தைகொண்டுவந்து இருக்கிறார் என்று விக்ரம் கூறினார். மேலும், அதென்னவோ தெரியல. எனக்கு நல்ல நல்ல இயக்குனர்கள் கிடைக்கிறாங்க. 

இந்த படத்தில் விஜய் கிடைத்த மாதிரி என்று சொன்ன விக்ரம், தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கணும்னு விரும்புறேன் என்றார். அதை அப்படியே திருப்பி சொன்னார் விஜய். இப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட்டை நான் ஆச்சர்யமா பார்க்கிறேன். விக்ரம் சார் படங்களை மட்டுமே தொடர்ந்து இயக்கணும்னு ஆசைப்படுறேன் என்றார்.

இந்தப் படத்தில் விக்ரமிற்கு இரண்டாவது தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார் இயக்குனர் விஜய். படத்தின் ஒரு நிமிடக் க்ளிப்பிங் அதை நிரூபனம் செய்தது அதை பார்த்தும் பத்திக்கையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டினர்.
தயாரிப்பாளர் மோகன் நடராஜன், நடிகர் நாசர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர். அனுஷ்கா விழாவில் மிஸ்ஸிங்!
சன்டேன்னா வேடந்தாங்களில் சினிமா செய்திகள் வரும்.. நேற்று போடமுடியவில்லை   அதனால் இன்று..   நண்பர்கள்  யாரும் இப்பதிவிற்கு கருத்து வழங்கவேண்டாம்.. 
செய்தி உதவி நக்கீரன்.

16 comments:

  1. ஓட்டு போட்டுட்டு ஓடிற்றேன்

    ReplyDelete
  2. ஒக்கே! போட்டுட்டேன் பாஸ்! :-)

    ReplyDelete
  3. சரிங்கோ மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  4. தெய்வத்திருமகன் ஜெயிக்க வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. நண்பர்கள் யாரும் இப்பதிவிற்கு கருத்து வழங்கவேண்டாம்.. ஓட்டு போட்டால் போதும்..

    right...

    ReplyDelete
  6. விக்ரம் பிதாமகனைப் போல இப் படத்திலும் பின்னிப் பெட்லெடுதிருப்பாரோ?

    ReplyDelete
  7. கமெண்ட் போட்டாத்தானே யார் யார் வந்தாங்கன்னு மத்தவங்களுக்கு தெரியும்?

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  9. நான் கருத்து வழங்கல்ல பாஸ்...ஓட்டு மட்டும் போடுறன்

    ReplyDelete
  10. போட்டாச்சு பாஸ்

    ReplyDelete
  11. இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்த "I am SAM" திரைப்படத்தின் மறு பதிப்பு போல தெரிகிறது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"