Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/09/2011

தமிழக மக்களே இருண்ட காலம் மீண்டும் வேண்டாம் ?!


 த்து ஆண்டுகளுக்கு முன், உலக வங்கியிடம், 10 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தது குஜராத். ஆனால், இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய் உலக வங்கியில் டிபாசிட் செய்துள்ளது. 

குஜராத்தில் டாஸ்மாக் கிடையாது. ஆனால், டாஸ்மாக் மூலம் தமிழகம், 14 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுகிறது. இதற்கு, அரசியல்வாதிகளின் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை தான் சப்ளை செய்கிறது. இதனால், பல ஆயிரம் கோடிகள் சிலருக்கு லாபம். 

பல கோடி கேபிள் இணைப்பு கொடுப்பது, அரசியல்வாதிகளின் கம்பெனிகள் தான். மாதம் 300 கோடி, ஆண்டுக்கு நான்காயிரம் கோடிகள், சில அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு, அவர்களை உலக கோடீஸ்வரர்களாக்க! 

இலவச திட்டங்கள் ஏதும் குஜராத்தில் கிடையாது. இங்கு, இலவச திட்டங்களில் வாங்கும் கோடிக்கணக்கான பொருட்களில், கமிஷன்கள் கிடைக்கும். 

அங்கே, 100 சதவீதம் பெண்கள் படிக்கின்றனர். இந்தியாவின் ஏற்றுமதியில், 15 சதவீதம் குஜராத்தின் பங்கு! பங்கு மார்க்கெட்டில், 30 சதவீதம் குஜராத்திலிருந்து. மருந்து கம்பெனிகள் 60 சதவீதம் குஜராத்தில் உள்ளது. 

டாடா நானோ கார், ஹூண்டாய், போர்டு, ரிலையன்ஸ், ஹேர்டு கார் இன்னும் பல தொழிற்சாலைகள். குஜராத் இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவின் முதல் மாநிலமாக ஆகப்போகிறது. இந்தியாவின் குட்டி சிங்கப்பூர் ஆகிவிடும். மேல் நாட்டு இந்தியர்களின் முதலீடு வேறு. 

தமிழகத்தில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தவுடன், தனியார் சுயநிதி, இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரிகள் என்று, 500க்கும் மேலான கல்லூரிகள். தனியார், "டிவி'கள், பல அரசியல்வாதிகள் கையில்; தினமும் அவர்கள் முகம் தான் அதில் தெரிகிறது. வெறுப்பில், மக்கள் சேனலை திருப்பி விடுகின்றனர். 

நம் அரசியல்வாதிகள் சிலர், சுவிட்சர்லாந்து, வெர்ஜின் ஐலாண்ட், குயின்லேண்ட் முதலிய நாடுகளில், சொகுசு மாளிகை வாங்கி, வருடம் இருமுறை சுற்றுலா செல்கின்றனர். திரையுலகத்தினர் தொழில் செய்ய இயலாத நிலை இங்கு! 

சில அரசியல்வாதிகள், ஒட்டுமொத்த தயாரிப்பு, வினியோகம் இவர்கள் கட்டுப்பாட்டில். எதற்கெடுத்தாலும் இலவசம் கொடுத்து, நம் அரசியல் தலைவர்கள், சிங்கப்பூரையே வாங்கிவிடுவர். உலகில், இதுபோல கோடீஸ்வர அரசியல் தலைவர்களை வரவேற்க, பலகுட்டி நாடுகள் உள்ளன.   இன்னும் சொல்லாதது பல.பல...

தமிழக மக்களே... 
இருண்ட கற்காலத்திற்கு செல்லாதீர்கள். 

நன்றி டாக்டர்.எஸ்.எஸ்.அர்த்தநாரி, ராயப்பேட்டை, சென்னை.

23 comments:

  1. போற வழியில என்னையும் தட்டிட்டியே மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  2. irundu pona tamil naattukku yaar oli tharuvaa? nalla philips light vaangi podunga

    ReplyDelete
  3. first intha arasiyalvaathikalin fuse'i pudunganum. aagave makkale fuse pudunga 13 m thethi ungalukkaaga ullathu. sariyaaga fuse pudungavum

    ReplyDelete
  4. என்ன வாத்தி பயங்கர கடுப்புல இருக்குற மாதிரி இருக்கு.....

    ReplyDelete
  5. //நம் அரசியல்வாதிகள் சிலர், சுவிட்சர்லாந்து, வெர்ஜின் ஐலாண்ட், குயின்லேண்ட் முதலிய நாடுகளில், சொகுசு மாளிகை வாங்கி, வருடம் இருமுறை சுற்றுலா செல்கின்றனர்.//

    எல்லோரும் அரேபிய ஷேக்குகள் ஆயிட்டாங்கன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  6. We need change. . . Government and people mentalety

    ReplyDelete
  7. தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட அரசியல்வாதிகள் என்ன பொதுநல வாதிகளா? அவங்கல்லாம் அவங்க குடும்ப வளர்ச்சிக்கு பாடுபடவே நேரம் இல்ல. ஆட்சிக்கு வருவதே உலக கோடிஸ்வரர்களில் முதல் பத்து இடத்துக்குள் வரத்தானே தவிர நாட்டின் பொருளாதாரத்த உயர்த்தவா அரசியலுக்கு வராங்க. குஜராத்தோட ஒப்பிட்டு காமெடி பண்ணாதீங்கப்பா. ஒப்பிடலுக்கு கூட ஒரே category ஆக இருக்கணும்னு விதி இருக்கு. குஜராத் அரசியல்வாதிகளோட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை ஒப்பிடுவதே தவறு என்கிறேன் நான்

    ReplyDelete
  8. நீங்க சொல்றதெல்லாம் சரிதான், ஆனா குஜராத்தோட தொழில் வளர்ச்சிக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கிய காரணம் குஜராத்திகள்தான். இந்தியாவின் பெரும் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் குஜராத்திகளே, அவர்கள் அனைவரும் தங்கள் மாநிலத்திலேயே தொழில் துவங்கவே விரும்புகிறார்கள். குஜராத்திகளின் பிசினஸ் மைண்ட் பிரசித்தி பெற்றது. அவர்களோடு தமிழ்நாட்டை ஒப்பீடு செய்வது சரியல்ல. பங்கு வர்த்தகம் என்றால் என்னவென்று மற்றவர்களுக்கு தெரியும் முன்பே அவர்கள் அதில் கரைகண்டுவிட்டனர்.

    தமிழர்கள் பெரும்பாலும் சம்பள வேலைக்காரர்களாகவே இருக்க விரும்புகின்றனர். வடமாநில தொழிலதிபர்கள் இந்தி தெரியாத தமிழகத்தில் வந்து தொழில் தொடங்க விரும்புவதில்லை. வெளிநாட்டுக் கம்பெனிகள் தான் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர், அதுவும் இங்கு இருக்கும் திறமையான வேலைக்காரர்கள் மற்றும் ஆங்கில அறிவுக்காக! இவ்வளவு இருந்தும் தமிழகம் க்டந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் குஜராத்திற்கு அடுத்து 2-ம் இடத்தில் உள்ளது.

    குஜராத்தில் டாடா நானோ கம்பெனிக்காக எவ்வளவு சலுகைகள் வாரி வாரி வழங்கப்பட்டன என்று அறிந்திருப்பீர்கள். அதை மோடியைத்தவிர மற்றவர்களால் செய்திருக்க முடியுமா?

    திமுக ஆட்சியின் மேல் எனக்கும் விமர்சனங்கள் உண்டு, ஆனால் திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி முன்பைவிட சிறப்பாக இருந்ததாகவே எண்ணுகிறேன்!

    ReplyDelete
  9. விழிப்புண்ர்வு ஏற்பட்டால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. நமக்கு சமமான மானிலங்கலுடன் ஒப்பீடு இருக்கனும். குஜராத்துக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு விஷயத்தில்கூட ஒப்பிட்டுபார்ப்பது சரி இல்லீங்க.

    ReplyDelete
  11. Comment pottaa etho error solluthu vaathyaare...ennaanu konjam paarunga

    ReplyDelete
  12. நாளை நீங்க ஃபர்ஸ்டாடா? செகண்டா?

    ReplyDelete
  13. சாரி.. ஃபர்ஸ்ட்டா என்பதில் ஒரு டா எக்ஸ்ட்ரா சேர்ந்துடுச்சு

    ReplyDelete
  14. //நாளை நீங்க ஃபர்ஸ்டாடா? // எத்தனை நாள் ஆசையோ..இன்னைக்குத் தீர்த்துக்கிட்டாரு சிபி!..ஒருவேளை பதிவு பிடிக்கலையோ..ஓட்டாவது போட்டிருக்காரா..(ஏதோ நம்மால முடிஞ்சது!)

    ReplyDelete
  15. யார( எலிய) கொண்டாந்து உக்கார வச்சாலும் சுரண்டாமல் விடாது,மக்கள் நாம என்னதாங்க பன்றது

    ReplyDelete
  16. இன்று உலகெங்கும் உள்ள குஜராத்திகள் அனைத்தையும் கொண்டு குஜராத்தில் கொட்டுகிறார்கள்.பெரும் உழைப்பாளிகள்,வியாபாரிகள் அதே சமயம் பல நல்ல காரியங்களுக்கு மனமுவந்து தருபவர்கள். அங்கு இலவசங்கள் தேவையில்லாமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வாரி வழங்குகிறார்கள்,

    . தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கும் வெளி மாநில ஆளுமை இன்னும் உள்ளது. சுயநலவாதிகள் நிறைந்து வழிகின்றனர். மன சாட்சியை விடப் பணச் சாட்சிதான் மக்களை ஆளுகிறது. இவ்வள்விருந்தும் இரண்டாவது மாநிலமாக உள்ளது பாராட்டத்தக்கது. இந்த ஆட்சி தொடர்ந்தால் அடுத்த அய்ந்தாண்டு இன்னும் ஒளி வீசும்.

    ReplyDelete
  17. //உலகில், இதுபோல கோடீஸ்வர அரசியல் தலைவர்களை வரவேற்க, பலகுட்டி நாடுகள் உள்ளன//

    ஆளுக்கு ஒரு நாடு பார்சல்!

    ReplyDelete
  18. அருள் உங்க இம்சை தாங்கல...

    ReplyDelete
  19. உங்களின் இடுக்கைக்கு முதலில் பாராட்டுகள் நல்ல ஆய்வு கட்டுரைபோல செய்துளீர் . இன்றைய சூழலில் நாட்டின் வளர்ச்சி ,எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் என எதுவுமே இன்றைய தமிழக அரசியலரிடம் இல்லை இதற்க்கு கரணம் படித்தவர்கத்தான் படித்த அறிவு சார்ந்த அறிவுத்துறையினர் மக்களை நல்வழிபடுத்தமைதான் மக்களோ அறியமமையில் வைக்கப்பட்டு உள்ளனர் .இவர்கள் ஆண்டு கிடைக்கும் நூறுக்கும் இருநூறுக்கும் தங்கள் வாக்குகளை பணத்திற்கு விற்றுவிடுகின்றனர் .இதை தடுக்க வேண்டியது அறிவர்கள்தான்.சிந்திப்போம் .போலிகளை இனம் காண்போம் ஏமாற்றும் "கை "யை இனம் காண்போம் .

    ReplyDelete
  20. "உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

    இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

    இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

    மேலும் படிக்க...
    ஒரு தரம்... ரெண்டு தரம்...!
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"