Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/14/2011

அப்பா ஓய்ந்தது அரசியல்..இப்பதிவிற்கு தலைப்பு தேவையில்லை?!


ண்டி நிறுத்தும்போதெல்லாம்
மனைவி சொல்வாள்
கையோடு 
‌அந்த வண்டிக்கவரப்
போட்டா என்ன?
வெய்யிலிலே காய்ந்து
வெளுத்து போகுதில்ல!?
ஒவ்வொரு முறையும்
காதில் விழாதது மாதிரி
நகர்ந்துப் போவேன் நான்...!
வண்டிக் கண்ணாடியில்
லாவகமாய் அமர்ந்து
கொத்தி விளையாடும்
சிட்டுக்குருவி பாவம் என்று
எப்படிச் சொல்ல அவளிடம்...!


அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

33 comments:

  1. Your poem is nice. And the siddukkuruvi varnanai is cute.

    ReplyDelete
  2. Sorry for type in English. what's you new year special?

    ReplyDelete
  3. Sako. I ca't vote. Because I'm using the mobile version of your blog. I will do it later.

    ReplyDelete
  4. New year, deepavali, thaiponk, navarathri,

    ReplyDelete
  5. கவிதை அருமை.

    ReplyDelete
  6. அம்புட்டு நல்லவனாய்யா நீ?

    ReplyDelete
  7. கவிதை அருமை நண்பா

    ReplyDelete
  8. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    அம்புட்டு நல்லவனாய்யா நீ?//

    நீங்க நினைக்கிறதவிட நல்லவர் கருன் (அப்பாடா அடுத்த பதிவுக்கு ஓட்டு கன்ஃபோர்ம்)

    ReplyDelete
  9. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பார்ரா இந்த புள்ளைய!

    ReplyDelete
  11. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்யாரே

    ReplyDelete
  12. அட அட்டகாசம் நண்பரே

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அழகு!அதைரசிக்கும் உங்கள் குணமும்தான்.

    ReplyDelete
  14. @சி.பி.செந்தில்குமார்


    நான் நல்லவன்னு சொல்ல கெட்டவன் இல்ல
    நான் கெட்டவன் னு சொல்ல நல்லவனும் இல்லை
    by "மாப்பிளை " கருண்

    ReplyDelete
  15. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மகா நல்லவரா இருப்பாரு போல நம்ம கருண்

    ReplyDelete
  17. உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதால தான், ஊர்ல மழை பெய்யுது..

    ReplyDelete
  18. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. சூப்பர் வரி கடைசியில்..

    ReplyDelete
  20. நல்ல கவிதை கருண். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. புத்தாண்டு வாழ்த்துகள் கருன்.

    ReplyDelete
  22. மனைவியிடம் அவசியம் கூறுங்கள்.ஏனென்றால் உங்களை விட அவர்
    இன்னும் தயாள குணத்தோடு குருவிக்கு உணவு தயார் செய்து விடுவார் பாருங்கள்.

    ReplyDelete
  23. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சகோதரர் கருண் மற்றும் அவரது சுற்றத்தாரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  25. குருவிக்கு பரிவு காட்டுனா உங்களுக்கு சாப்பாடு கட்டாகும் நினைவில் வச்சுக்கோங்க சகோ

    ReplyDelete
  26. அடபாவி வாத்தி நீரும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீராக்கும்....

    ReplyDelete
  27. தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
    இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
    எனது இதயம் கனிந்த
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. வேடந்தாங்கல் கருன்...அதான் சிட்டுக்குருவில இவ்ளோ கரிசனம் !

    ReplyDelete
  29. சிட்டுக்குருவின்னா இந்த லேகியம்லாம் செய்யறாங்களே அதுவா?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"