Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/06/2011

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் !?


விஜயகாந்த்துடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போகும் ஜெயலலிதா, ஹெல்மட் அணிந்து கொள்வது நல்லது என, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது தாராபுரத்தில் பேசிய அவர், 

தன் வயதை கூட எண்ணிப்பார்க்காமல் அன்றாடம் தமிழக மக்களுக்காக உழைப்பவர் கலைஞர். ஆனால் தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் ஜெயலலிதாவின் கண்களுக்கு தெரிகிறது. முன்னாள் கதாநாயகன் தற்போது அரசியலில் வில்லன். இப்ப அதுகூட இல்ல. காமெடியனாக மாறியாச்சு. நாடே சிரிக்குது.

முதல் முதல்ல பார்த்தோம். தொடங்கின உடனேயே வேட்பாளருக்கு அடி. உங்க வீட்டு அடியா. எங்க வீட்டு அடியா அது. செம்ம மாத்து. இப்ப அவங்க வேட்பாளர்கள் எல்லாம் ஹெல்மட் போட்டுக்கிட்டுதான் கூட போறாங்க. அந்த அளவுக்கு பயம் வந்துவிட்டது.


பத்திரிகையில் செய்தி ஒன்றை பார்த்தேன். 6ஆம் தேதி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசப் போகிறார்களாம். ஆகவே இப்போதே இந்த கூட்டத்திற்கு முன்பாகவே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்க சைசுக்கு ஹெல்மட் கிடைக்குதோ, கிடைக்கிலையோ இப்பவே ஆர்டர் கொடுத்து வாங்கிகொண்டு போங்கள். அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். 
படம், செய்தி உதவி நக்கீரன்.

ஒரு வேண்டுகோள்...

(நண்பா் செங்கோவி பிளாகில் படித்தது)

இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.

காலமெல்லாம் நம் முதுகில் சவாரி செய்தே பிழைத்து வரும் காங்கிரஸ், தன் தகுதிக்கு மீறிய ஆட்டத்தை கடந்த ஐந்தாண்டுகளில் போட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழர்கள், இனியும் காங்கிரஸைச் சுமக்க வேண்டுமா?

ஈழப்போரை நிறுத்தச் சொல்லி தெருவுக்கு வந்து போராடினோம். சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.

ஒரு இனத்தையே முள்வேலிக்குள் அடைத்தவர்களுக்கு, மனிதாபிமானமுள்ள நீங்கள் தரப்போகும் பதில் என்ன? உங்கள் கட்சி அபிமானத்தை இந்தத் தேர்தலில் ஒதுக்கி வைத்துவிட்டு, காங்கிரசைத் தோற்கடிக்க கை கொடுங்கள்.

உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள். அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

35 comments:

  1. ஹி ஹி.. நம்மாளுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான்

    ReplyDelete
  2. ஹா ஹா நேத்து செம ஹிட்டு பதிவு போட்டாங்காட்டி கருண் தூங்கவே இல்ல போல..

    ReplyDelete
  3. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    vadai - அப்பா வாங்கியாச்சா?

    ReplyDelete
  4. முத்துசிவா சொன்னது…

    ஹி ஹி.. நம்மாளுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் -- ஆமாமா..

    ReplyDelete
  5. ஒரு மாற்று சக்தியாக வளர்ந்து பரிமளிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட தலைவர் இப்படி காமெடி பீஸ் ஆக உருமாறி `மிதப்பதை' என்னவென்று சொல்ல ?

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    ஹா ஹா நேத்து செம ஹிட்டு பதிவு போட்டாங்காட்டி கருண் தூங்கவே இல்ல போல.. -- புரியலையே..

    ReplyDelete
  7. இரண்டு பெரிய கட்சிகளை பற்றியும் மக்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் . யார் யாரை விட மோசம் என்ற நிலையில் அந்த கட்சிகள் இருப்பதுதான் வேதனை.

    ReplyDelete
  8. வந்தேன் வந்தேன்...மீண்டும் நானே வந்தேன்

    ReplyDelete
  9. அவரு சைசுக்கு ஹெல்மெட் வாங்க சொன்ன இவரை...
    இவர் சைசுக்கு எதை வாங்கச் சொல்லுவார் அவர்? ஹி ஹி
    நான் எதையும் சொல்லலீங்க

    ReplyDelete
  10. நன்றி வாத்யாரே!

    ReplyDelete
  11. நிஷாந்தன் சொன்னது…

    ஒரு மாற்று சக்தியாக வளர்ந்து பரிமளிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட தலைவர் இப்படி காமெடி பீஸ் ஆக உருமாறி `மிதப்பதை' என்னவென்று சொல்ல ? --- என்னசெய்ய..

    ReplyDelete
  12. Chitra சொன்னது…

    இரண்டு பெரிய கட்சிகளை பற்றியும் மக்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் . யார் யாரை விட மோசம் என்ற நிலையில் அந்த கட்சிகள் இருப்பதுதான் வேதனை. -- சரியாச் சொன்னிங்க..

    ReplyDelete
  13. டக்கால்டி சொன்னது…

    வந்தேன் வந்தேன்...மீண்டும் நானே வந்தேன்
    -- இவரு ரொம்ப பிஸியாம்...

    ReplyDelete
  14. டக்கால்டி சொன்னது…

    அவரு சைசுக்கு ஹெல்மெட் வாங்க சொன்ன இவரை...
    இவர் சைசுக்கு எதை வாங்கச் சொல்லுவார் அவர்? ஹி ஹி
    நான் எதையும் சொல்லலீங்க --நன்றி பிஸியான நேரத்திலேயும் நம் கடை பக்கம் வந்ததற்கு..

    ReplyDelete
  15. செங்கோவி சொன்னது…

    நன்றி வாத்யாரே! - எதுக்குன்னு எனக்கு தெரியும்..

    ReplyDelete
  16. நண்பா...மறுமொழிக்கு சொல்லாம கொள்ளாம இப்படிஎல்லாம் மாடுரேசன் வைக்க கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா. வடை கிடைச்சுச்சா இல்ல அல்வா கிடைச்சுச்சான்னு தெரியாதுல்ல.

    ReplyDelete
  17. என்னது இப்ப மாடுரேசன் இல்லை.. வாத்தி காலையிலேயே குசும்பு தானா

    ReplyDelete
  18. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    நண்பா...மறுமொழிக்கு சொல்லாம கொள்ளாம இப்படிஎல்லாம் மாடுரேசன் வைக்க கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா. வடை கிடைச்சுச்சா இல்ல அல்வா கிடைச்சுச்சான்னு தெரியாதுல்ல.-கிடைச்சுதா?

    ReplyDelete
  19. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    என்னது இப்ப மாடுரேசன் இல்லை.. வாத்தி காலையிலேயே குசும்பு தானா -- என்னஆச்சு?

    ReplyDelete
  20. நல்ல வேண்டுகோள் தான் வச்சிருக்காரு!!

    ReplyDelete
  21. ஆமாம் பேச இது ஒண்ணு கிடைத்தது இவங்களுக்கு!

    ReplyDelete
  22. ஆமாம் காங்கிரஸை ஒழித்துக்கட்டுவோம்..

    ReplyDelete
  23. I am sorry , The crowd Which I saw on the party meetings,the voter seems equal.80% of people uneducated they are the supporter of Money.

    ReplyDelete
  24. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    நல்ல வேண்டுகோள் தான் வச்சிருக்காரு!! -- கேப்பாங்களா?

    ReplyDelete
  25. சென்னை பித்தன் சொன்னது…

    ஆமாம் பேச இது ஒண்ணு கிடைத்தது இவங்களுக்கு! - அப்படியா?

    ReplyDelete
  26. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    ஆமாம் காங்கிரஸை ஒழித்துக்கட்டுவோம்..-- ஆம் நண்பரே..

    ReplyDelete
  27. karu சொன்னது…

    I am sorry , The crowd Which I saw on the party meetings,the voter seems equal.80% of people uneducated they are the supporter of Money.
    -- இருக்கலாம் இப்படியும்..

    ReplyDelete
  28. தேர்தல் சூட்டில்த்தான் நிற்கின்றீர்கள் போல நண்பா!

    ReplyDelete
  29. காங்கிரசுக்கு கண்டிப்பா சங்கு ஊத வேண்டும்.

    ReplyDelete
  30. Jana சொன்னது…

    தேர்தல் சூட்டில்த்தான் நிற்கின்றீர்கள் போல நண்பா! -ஆமாமா..

    ReplyDelete
  31. சசிகுமார் சொன்னது…

    காங்கிரசுக்கு கண்டிப்பா சங்கு ஊத வேண்டும்.-- ஆம் நண்பரே...

    ReplyDelete
  32. ஹி ஹி.. காமெடியா பேசுறாராம் ஸ்டாலின்னு..

    ReplyDelete
  33. தம்பி கூர்மதியன் சொன்னது…

    ஹி ஹி.. காமெடியா பேசுறாராம் ஸ்டாலின்னு..--- ஹி ஹி..

    ReplyDelete
  34. \\தன் வயதை கூட எண்ணிப்பார்க்காமல் அன்றாடம் தமிழக மக்களுக்காக உழைப்பவர் கலைஞர்.\\வாய் கூசாம பேசுறாங்களே... தம் மக்களாகிய ஸ்டாலின், கனிமொழி, அழகிரி அப்புறம் அவங்கெல்லாம் பெத்து போட்ட குட்டிகளுக்காத்தான் இவர் உழைக்கிறாரே தவிர மக்களுக்காக உழைப்பவர் என்பது அபாண்டம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"