Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/01/2011

அடச்சீ... வெட்கம்கெட்ட காங்கிரஸ்காரனே?



தொடர்ந்து வெளிவரும் ஊழல்கள், கறுப்புப் பண கோடீஸ்வரர்களுக்கு, பல்லக்குத் தூக்கி, மறைத்து காப்பாற்றுதல், நேர்மையை நிலை நாட்ட வேண்டிய பொறுப்புகளுக்கு, களங்கமுற்றவர்களை நியமித்தல் போன்ற நடைமுறைகள், வெட்கித் தலைக்குனிய வேண்டியவை. 

ஆனால், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், வீரப்ப மொய்லி மற்றும் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர்கள், சொற்கேடயங்களால் தவறுகளை மறைக்க முயல்கின்றனர். ஊழல் கண்காணிப்புக்குழு தலைவராக, பி.ஜே.தாமஸ் நியமனத்தை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து, ஒரு சூட்சமமான கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

"ஒரு அமைப்பின் நேர்மை, அதை நடத்தும் தலைவரின் நேர்மையைப் பொறுத்தே அமைய வேண்டியதல்லவா!' என, விமர்சித்துள்ளது. தாமசைத் தேர்வு செய்த உயர்மட்டக் குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ஆதாரங்களுடன் அவரது நியமனத்தை நிராகரித்தார். அதை ஏற்காததால் ஏற்பட்ட விளைவு, அக்குழுவிற்கு தலைக்குனிவு. "தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்' என்கிறார் மன்மோகன். தவறுகளுக்குப் பொறுப்பேற்பது, அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. 

ஒரு மறைமுக சக்தி, அவரை ஆட்டி வைக்கிறதோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது. பார்லிமென்ட், ஜனநாயக முறையில் செம்மையாக, தடம்புரளாமல் நடந்தேற உதவுபவை எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகளின் கருத்தை புறக்கணிப்பதால், பொது நல ஆர்வலர்கள், சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டியுள்ளது. 

மீடியாவும், உயிர் துடிப்புடன் செயல்படுவதால், நம் நாட்டில் மக்களாட்சி தத்துவம் முதிர்வு பெற்று வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிறந்த பல நாடுகளில், ஜனநாயகம் மறைந்துள்ளது. ஆனால், 100 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், மக்களாட்சி வலுப்பெற்று வருகிறது. 

குறைகளையும், குளறுபடிகளையும், ஊழல்களையும் மீறி, நாட்டில் ஜனநாயகம் தொடர்ந்து வளர்வதற்கு, நம் அரசியலமைப்பே காரணம். வயது வந்தோருக்கு ஓட்டுரிமை தந்த காந்திக்கும், மக்களாட்சியின் சிற்பிகளான அம்பேத்கர், நேரு போன்ற தலைவர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

முந்தைய பதிவுகள்: 
 
2.  குப்பைக் கூடையும்- அரசியல்வாதிகளும்!!!

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், 
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....     

23 comments:

  1. >>"ஒரு அமைப்பின் நேர்மை, அதை நடத்தும் தலைவரின் நேர்மையைப் பொறுத்தே அமைய வேண்டியதல்லவா!'

    நேர்மையா? அப்படின்னா?

    ReplyDelete
  2. தற்போது வோட்டு மட்டும் போட்டுள்னே் வருகின்றேன் மீண்டும்

    ReplyDelete
  3. இந்த தேர்தல்ல நல்ல பாடம் புகட்டுவோம் தம்பி..

    ReplyDelete
  4. மாப்ள ரொம்ப நாளைக்கு ஏமாத்த முடியாது.........சாயம் வெளுத்துக்கிட்டு இருக்கு!

    ReplyDelete
  5. தலைப்பு தப்புங்க... அவங்களால தான் வெட்கத்திற்கே கெட்ட பெயர்...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

    ReplyDelete
  6. அரசியல் பதிவு...
    காங்கிரஸ் அவ்வளவுதானா...

    ReplyDelete
  7. ஒரு மறைமுக சக்தி, அவரை ஆட்டி வைக்கிறதோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

    எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று!

    ReplyDelete
  8. இந்த தேர்தல்ல நல்ல பாடம் புகட்டுவோம் கருன்

    ReplyDelete
  9. காங்கிரெஸ் ஒரு காமெடி பீசு...எதுக்கு செத்த பாம்பையே அடிக்கறீங்க

    ReplyDelete
  10. நேர்மைன்னா ஹமாம் சோப்பு தானே வாத்யாரே?

    ReplyDelete
  11. தொடர்ந்து வெளிவரும் ஊழல்கள், கறுப்புப் பண கோடீஸ்வரர்களுக்கு, பல்லக்குத் தூக்கி, மறைத்து காப்பாற்றுதல்//
    போட்டு தாக்குங்க

    ReplyDelete
  12. குத்துங்க எஜமான் குத்துங்க இவங்க எப்பவும் இப்படித்தான்

    ReplyDelete
  13. இந்த தேர்தல்ல இருக்கு ஆப்பு....

    ReplyDelete
  14. கேரளாவிலும்,வங்காளத்திலும் தேறிடுவாங்கன்னு கருத்துக் கணிப்பு.

    தங்கபாலுவும் என்னா தெனாவெட்டா கைகூப்பிகிட்டே ஓட்டுப்போடுங்கன்னு தெரு சுத்துறாரு!தேர்தல் முடிவு சீக்கிரம் வரட்டும்.

    ReplyDelete
  15. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா..... உலகத்துக்கே தெரிஞ்ச செய்திதானே.
    பொம்மலாட்டத்தில் பொம்மை மன்மோகன் . பொம்மையை ஆட்டுவிக்கும் பொம்மலாட்ட கலைஞ்சன்(சி)
    எந்த நாட்டு அம்மான்னு தெரிந்த விஷயம் தானே. பூங்காக்கு வந்து மழையில் நனைந்துட்டு போங்கள்.

    ReplyDelete
  16. வந்தேன், வாக்கிட்டேன், வருகிறேன். சாரி, நோ கமெண்ட்ஸ்.

    ReplyDelete
  17. ஊழலில் காங்கிரசும், தி.மு.க.&வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது அனைவரும் அறிந்ததே!

    ReplyDelete
  18. இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்தது இந்த கூட்டணி தான்

    ReplyDelete
  19. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"