Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/04/2011

தேவையா இந்தக் கொண்டாட்டங்கள்....


நீதிமன்றம் கொடுத்த தைரியத்தைத் தொடர்ந்து, "பஸ் டே கொண்டாடும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறை அறிவித்துள்ளது, பாராட்டத்தக்கது.இதுவரை தமிழக மாநகர காவல் துறை, "பஸ் டே' அட்டூழியங்களை அனுமதித்து வந்தது. தற்போது, நீதிமன்றம் தலையிட்டதால், காவல்துறைக்கு தெம்பு வந்து, களத்தில் குதித்துள்ளது. 

மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...இதை ஒரு கவுரவப் பிரச்னையாக்கி, காவல் துறையிடம், "மல்லு' கட்டாமல், தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, தலைசிறந்த குடிமகன்களாக மாற வேண்டும்."நூறு இளைஞர்களைத் தாருங்கள், வலிமைமிக்க பாரதத்தை உருவாக்கி காட்டுகிறேன்' எனக் கூறினார் விவேகானந்தர். இளைஞர்களின் சக்தி அளப்பரியது. அது, "பஸ் டே' போன்ற அருவெறுக்கத்தக்க விஷயங்களில் செலவாவதை, மக்கள் விரும்பவில்லை.

யுத பூஜை அன்று மக்கள், தம் தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகளை சுத்தம் செய்து, கும்பிட்டு மகிழ்வர். பொங்கலன்று, கலப்பை, உழவு மாடுகளை அலங்கரித்து, மகிழ்வர்.ஆனால், "பஸ் டே' அன்று, பஸ்கள் படும்பாடு, குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதி தான். ஆண்டு முழுவதும் தங்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல உதவும் பஸ்சுக்கு, மாணவர்கள் காட்டும் கைமாறா இது?

ந்தனம் அரசு கல்லூரி, பச்சையப்பன் கல்லூரிகளைத் தொடர்ந்து, விவேகானந்தா கல்லூரி மாணவர்களும், பஸ்தின கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.ஒரு கல்லூரி, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால், நாமும் அது போல் பயிற்சி எடுத்து, பதக்கம் வெல்ல வேண்டும் என துடிப்பதில் அர்த்தம் உண்டு.ஆனால், "அவர்கள் பஸ் தினம் கொண்டாடிவிட்டனர்; நாமும் கொண்டாட வேண்டும்' என, மாணவர்கள் நினைப்பது, அர்த்தமற்ற, அவசியமற்ற, தேவையற்ற, குறிக்கோளற்ற, சிந்தனையற்ற செயல்.
Thanks Dinamalar. 

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 . இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

45 comments:

  1. ஆயுத பூஜை அன்று மக்கள், தம் தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகளை சுத்தம் செய்து, கும்பிட்டு மகிழ்வர். பொங்கலன்று, கலப்பை, உழவு மாடுகளை அலங்கரித்து, மகிழ்வர்.ஆனால், "பஸ் டே' அன்று, பஸ்கள் படும்பாடு, குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதி தான். ஆண்டு முழுவதும் தங்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல உதவும் பஸ்சுக்கு, மாணவர்கள் காட்டும் கைமாறா இது?


    Good Question!

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு
    பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  3. ஓட்ட வட நாராயணன் சொன்னது…
    vada /// o.k.

    ReplyDelete
  4. ஓட்ட வட நாராயணன் சொன்னது…

    i put the second vote in all thiratties
    /// Thanks..

    ReplyDelete
  5. ஓட்ட வட நாராயணன் சொன்னது…

    ஆயுத பூஜை அன்று மக்கள், தம் தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகளை சுத்தம் செய்து, கும்பிட்டு மகிழ்வர்.// today leave ன்னு சொன்னீங்கல்ல.....

    ReplyDelete
  6. Speed Master சொன்னது…
    சிறப்பான பதிவு
    பகிர்தலுக்கு நன்றி /// Thanks for coming..

    ReplyDelete
  7. வாஸ்தவம்தான் கருன்

    ReplyDelete
  8. நச்னு சொன்னீங்க!

    ReplyDelete
  9. Jana சொன்னது…

    வாஸ்தவம்தான் கருன்
    /// Thanks...

    ReplyDelete
  10. செங்கோவி சொன்னது…

    நச்னு சொன்னீங்க! ///நன்றி..

    ReplyDelete
  11. //"அவர்கள் பஸ் தினம் கொண்டாடிவிட்டனர்; நாமும் கொண்டாட வேண்டும்' என, மாணவர்கள் நினைப்பது, அர்த்தமற்ற, அவசியமற்ற, தேவையற்ற, குறிக்கோளற்ற, சிந்தனையற்ற செயல்.//

    correct

    ReplyDelete
  12. அவசியமான விழிப்புணர்வுமிக்க பதிவு.

    ReplyDelete
  13. இந்திய ஜன நாயகத்தின் தூண்களான மாணவர்கள் செய்வது மிகவும் தவறான விசயம்..

    ReplyDelete
  14. //ஒரு கல்லூரி, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால், நாமும் அது போல் பயிற்சி எடுத்து, பதக்கம் வெல்ல வேண்டும் என துடிப்பதில் அர்த்தம் உண்டு.ஆனால், "அவர்கள் பஸ் தினம் கொண்டாடிவிட்டனர்; நாமும் கொண்டாட வேண்டும்' என, மாணவர்கள் நினைப்பது, அர்த்தமற்ற, அவசியமற்ற, தேவையற்ற, குறிக்கோளற்ற, சிந்தனையற்ற செயல்.//

    நல்ல கருத்து நண்பரே!

    ReplyDelete
  15. shanmugavel சொன்னது…

    //"அவர்கள் பஸ் தினம் கொண்டாடிவிட்டனர்; நாமும் கொண்டாட வேண்டும்' என, மாணவர்கள் நினைப்பது, அர்த்தமற்ற, அவசியமற்ற, தேவையற்ற, குறிக்கோளற்ற, சிந்தனையற்ற செயல்.//

    correct
    /// Thanks...

    ReplyDelete
  16. பிரவின்குமார் சொன்னது…

    அவசியமான விழிப்புணர்வுமிக்க பதிவு.
    /// Thanks 4 coming..

    ReplyDelete
  17. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

    இந்திய ஜன நாயகத்தின் தூண்களான மாணவர்கள் செய்வது மிகவும் தவறான விசயம்..
    /////

    எங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  18. தமிழ் 007 சொன்னது…
    /// Thanks 4 ur comments...

    ReplyDelete
  19. நல்லவேளை 'ட்ரைன் டே' அப்படின்னு நம்ம மக்க கொண்டாட ஆரம்பிக்கலை... பிழைத்தது சென்னை! ;-)))

    ReplyDelete
  20. நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று

    ReplyDelete
  21. இவனுக முழிச்சிகிட்டாத்தான் ஊழல் அரசியல்வாதிகள் தோலுரிக்க முடியும்

    ReplyDelete
  22. எதிர்கால இந்தியாவே இந்த மாணவர்களை நம்பித் தான் உள்ளது.

    இது போலத்தான் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது 1965-66 இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில், மாணவர்களின் ஆக்க பூர்வ சக்திகளை அப்போதிருந்த அரசாங்கம், பள்ளி ஆசிரியர்கள் மூலமே வீணடிக்க வைத்து, எல்ல்லா ஊர்களிலும், அனைத்துப் பள்ளிகள் கல்லூரிகளையும் மாதக் கணக்கில் மூட வைத்து, எதையோ பெரியதாக் சாதித்தது போல இன்றும் சொல்லி வருகிறார்கள்.

    இதனால் வேற்று மொழியொன்றை கற்கும் கதவுகள் முற்றிலும் மூடப்பட்டு, அதனால் பிற மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கவும் முடியாமல் அவதிப்பட்டோர் ஏராளம் ஏராளம்.

    இப்போது தான், அன்று நடந்த தவற்றை மக்களும் உணர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்க ஆவலாக உள்ளனர். ஆங்காங்கே தெருவுக்குத் தெரு ஹிந்தி வகுப்புகள் நடைபெற்று சக்கை போடு போட்டு வருகின்றன.

    இது போன்ற செயல்களால் நமக்குத் தான் நஷ்டம் என்பதை மாணவர்கள் உணருமாறு இந்தப் பதிவினைச் செய்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போய், சங்கடங்கள் தருவதாவ மாறிவிட்டால், அப்படி ஒரு கொண்டாட்டமே தேவை இல்லை. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  24. பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  25. நியாயமான கேள்வி இது கலைகல்லூரியில் மட்டும் நடக்கும் கேவலம் ......................

    ReplyDelete
  26. எல்லொரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை சகோதரம்...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா

    பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

    ReplyDelete
  27. அர்த்தமுள்ள கட்டுரை.

    ReplyDelete
  28. நல்ல விஷயமுங்க. நல்லா சொன்னீங்க!

    ReplyDelete
  29. சமூக அக்கறையுடன் கூடிய
    மிக அவசியமான பதிவு
    தங்களைத் தொடர்வதில்
    பெருமை கொள்கிறேன்

    ReplyDelete
  30. சமூக அக்கறையுடன் கூடிய
    மிக அவசியமான பதிவு
    தங்களைத் தொடர்வதில்
    பெருமை கொள்கிறேன்

    ReplyDelete
  31. வணக்கம் சார்,நலம்தானே?நல்லபதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. இந்த வார ஆனந்த விகடன்,குமுதம் இதழ்களில் கூட இது பற்றி கட்டுரை வந்துள்ளது.\

    கண்டிக்கபடவேண்டிய ஒன்று

    ReplyDelete
  33. வேலைப்பழு நண்பரே
    இப்போ வந்து விட்டேன்
    தரமான பதிவு

    ReplyDelete
  34. நல்லாத் தான் சொல்றீங்க...ஆனா கேக்க தான் ஆளில்லை...

    ReplyDelete
  35. நமீதா பத்தி எழுதாதேன்னு நம்ம அண்ணன் சி.பி கிட்ட சொல்றது மாதிரி இருக்குங்க...

    ReplyDelete
  36. இதுக்கெல்லாமா டே .. தேவையில்லாததுக்கேல்லாம் கோவப்படுறாங்க ..தேவையானதுக்கு படேல்லையே ..நல்லா சொனீங்க :)

    ReplyDelete
  37. நண்பர் தொப்பி தொப்பியின் தலத்தில் இதை பற்றிய வாதங்கள்( விதண்டா வாதங்கள் ) தொடர்கின்றன.

    ReplyDelete
  38. நீங்களும் மர்மயோகி போல் நொந்து போயுள்ளீர்களோ?? லூசுல விடுங்க சார்.. நாங்களும் அந்த காலத்துல கொண்டாடியுள்ளோம்?? இப்போதைய நிலைமை தெரியாது எனக்கு.. கொஞ்சம் கன்ட்ரோல் தேவைதான், தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும் என நினைக்கிறேன், பஸ்டேயே வேண்டாம் என்பதற்குபதில்..

    ReplyDelete
  39. நாம சொல்றதை பசங்க கேட்டாதானே...

    ReplyDelete
  40. ஒரு கல்லூரி, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால், நாமும் அது போல் பயிற்சி எடுத்து, பதக்கம் வெல்ல வேண்டும் என துடிப்பதில் அர்த்தம் உண்டு. - Healthy Thought

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"