Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/15/2011

தொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்?

ருவழியாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்துவிட்டன. ஆனால், இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உள்ளனரா என்பது கேள்விக்குறியே. 

சென்றமுறை சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போதே ஆட்சியில் பங்கு கிடைக்கும் என காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் எண்ணினர். ஆனால், காங்கிரஸின் தில்லி தலைமையும், தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் மௌனம் சாதித்தனர். 

தனால் திமுகவும் காங்கிரசைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.இதுமட்டுமல்லாமல் அரசுப் பணியிடங்கள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவைகளில் இருந்து, ஒப்பந்தப் பணிகள், டாஸ்மாக் மதுக்கூடம் அமைப்பதுவரை அனைத்தும் திமுகவினரே வைத்துக் கொண்டனர். 

கூட்டணிக் கட்சியான காங்கிரசாருக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை எனவும் மாறாக அதிமுகவினர் பலர் திமுக ஆட்சியில் பயனடைந்துள்ளனர் எனவும், அரசு விழாக்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரசார் புலம்பி வந்தனர்.

ந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. இதற்குக் காரணம் திமுகதான் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்துள்ளனர். இவ்வளவு நெருக்கடியிலும் திமுகவுடன் மீண்டும் கூட்டணி தேவையா? எனக் குரல் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களின் கருத்துகளை காங்கிரஸ் தொண்டர்கள் பெருவாரியாக வரவேற்றனர். 

மேலும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதும், ஆட்சியில் பங்கு தரமுடியாது என திமுக கூறியதும் காங்கிரஸ் தொண்டர்களைப் பெரிதும் பாதித்தது.இச்சூழலில் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகும் என திமுக தலைமை அறிவித்ததும் தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களும், திமுக வினரும் கூட பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வர்களுக்கு இடையே தேர்தல் களத்தில் தலைவர்கள் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்சியை முதுகில் தூக்கிச் சுமப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை. மூன்றாவது அணி அமைப்பது அல்லது தனித்து நிற்பது என்ற முடிவையே அவர்கள் விரும்புகின்றனர். 

திமுக தலைமையிலான கூட்டணியை அறவே வெறுக்கின்றனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தில்லி தலைமையும் தங்களது சுயலாபத்துக்காக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.இதன் தாக்கம் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள்.
Thanks Dinamani.


                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               4 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.
                                               5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல் 

                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....   

40 comments:

  1. தொண்டர்களை மதிக்காத கட்சிகளின் நிலை -தேர்தலுக்கு பிறகு தெரியும்.

    ReplyDelete
  2. நல்ல கருத்தை சொல்லியிருக்கிங்க... இருந்தாலும் கூட்டணியில இருக்கிற குழப்பத்தை யாராலயும் தீர்க்க முடியாது.

    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

    ReplyDelete
  3. காங்கிரஸ் தொண்டர்களின் மனக்குமுறலை தினமணி பதிவு
    செய்ததை அப்படியே பகிர்ந்துள்ளீர்கள். நன்றிகள்.

    அதெல்லாம் சரிங்க, காங்கிரஸ் தொண்டர்கள் அப்படிங்கிறவங்க யாருங்க?
    அவுங்க எம்பூட்டு பேரு இருப்பாங்க?
    (ஒரு வேளை இத மனசுல வச்சுத்தான் திமுக ஆட்டம் காமிக்குதோ)

    ReplyDelete
  4. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்பது மத்தியில் ஆட்சியில் இருப்பது தான் (சி.பி.ஐ அவுங்க கண்ட்ரோல் தானுங்க)

    ReplyDelete
  5. தமிழ் உதயம் சொன்னது…

    தொண்டர்களை மதிக்காத கட்சிகளின் நிலை -தேர்தலுக்கு பிறகு தெரியும்.
    ///ஆமா சார்..

    ReplyDelete
  6. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    நல்ல கருத்தை சொல்லியிருக்கிங்க... இருந்தாலும் கூட்டணியில இருக்கிற குழப்பத்தை யாராலயும் தீர்க்க முடியாது. --- காலையில ஆளைக் கானோம்..

    ReplyDelete
  7. தொண்டர்கள் சோர்ந்துவிட்டால் தலைவர்கள் காலிதான்

    ReplyDelete
  8. பாரத்... பாரதி... சொன்னது…

    அதெல்லாம் சரிங்க, காங்கிரஸ் தொண்டர்கள் அப்படிங்கிறவங்க யாருங்க?
    அவுங்க எம்பூட்டு பேரு இருப்பாங்க?
    (ஒரு வேளை இத மனசுல வச்சுத்தான் திமுக ஆட்டம் காமிக்குதோ)/////// Ha..ha..ha...

    ReplyDelete
  9. பாரத்... பாரதி... சொன்னது…

    தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்பது மத்தியில் ஆட்சியில் இருப்பது தான் (சி.பி.ஐ அவுங்க கண்ட்ரோல் தானுங்க)
    // correct..

    ReplyDelete
  10. காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல;தி.மு.க.தொண்டர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கவிழ்க்கத்தான் போறாங்க!

    ReplyDelete
  11. //இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உள்ளனரா என்பது கேள்விக்குறியே//

    திமுக புலிவாலைப் பிடித்தது மாதிரி. உழைத்தே தீர வேண்டும். ஆனால், திமுக தொகுதிகளிலேயே காங்கிரஸ் ஆப்பு வைக்கும்.

    ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், எல்லாத் தொகுதிகளிலும் கட்சிபாகுபாடின்றி பாடுபடும். அந்த விஷயத்தில் திமுக கில்லாடிதான்!

    ReplyDelete
  12. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    தொண்டர்கள் சோர்ந்துவிட்டால் தலைவர்கள் காலிதான்
    ///இவனுங்களுக்கு அது தெரிய மட்டேங்குதே...

    ReplyDelete
  13. சென்னை பித்தன் சொன்னது…

    காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல;தி.மு.க.தொண்டர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கவிழ்க்கத்தான் போறாங்க!
    --- உண்மைதான்...

    ReplyDelete
  14. சேட்டைக்காரன் சொன்னது… ----

    எங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  15. அடுத்த ரவுண்டு வந்திட்டிங்களா..

    ReplyDelete
  16. @வேடந்தாங்கல் - கருன்
    ///- காலையில ஆளைக் கானோம்..///

    நண்பா.. இந்த வாரம் பகல் ஷிப்ட்... வேலையையும் கொஞ்சம் பாக்கனுமில்ல....

    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

    ReplyDelete
  17. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    அடுத்த ரவுண்டு வந்திட்டிங்களா..
    ///எப்பவும் தண்ணி அடிக்கிற ஞாபகமாகவே இருங்க...

    ReplyDelete
  18. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    @வேடந்தாங்கல் - கருன்
    ///- காலையில ஆளைக் கானோம்..///

    நண்பா.. இந்த வாரம் பகல் ஷிப்ட்... வேலையையும் கொஞ்சம் பாக்கனுமில்ல....--- சும்மாதான் கேட்டேன் நண்பா... வேலைதான் முக்கியம்... நான் எங்க Headmaster என்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க.. எப்பவமே Computer labதான்... கணிணி ஆசிரியா் அதனால எஸ்கேப்...

    ReplyDelete
  19. எதுவுமே தனித்துப் போடியிட்டால் ஜெயிக்குமா என்பதுதன் கேள்வி இங்கு

    ReplyDelete
  20. தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    எதுவுமே தனித்துப் போடியிட்டால் ஜெயிக்குமா என்பதுதன் கேள்வி இங்கு --- கரெக்ட்டு..

    ReplyDelete
  21. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    அ தி மு க போல் ஆகும்
    --- அப்படியா?

    ReplyDelete
  22. ஏற்கனவே திமுக போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் எனவும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் திமுகவினர் எதிராக வேலை பார்ப்பார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது,

    ReplyDelete
  23. ///தமிழ்வாசி - Prakash சொன்னது…

    @வேடந்தாங்கல் - கருன்
    ///- காலையில ஆளைக் கானோம்..///

    நண்பா.. இந்த வாரம் பகல் ஷிப்ட்... வேலையையும் கொஞ்சம் பாக்கனுமில்ல....--- சும்மாதான் கேட்டேன் நண்பா... வேலைதான் முக்கியம்... நான் எங்க Headmaster என்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க.. எப்பவமே Computer labதான்... கணிணி ஆசிரியா் அதனால எஸ்கேப்...////

    கொடுத்து வச்ச மகராசன்.....ம்ம்ம்ம்...


    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

    ReplyDelete
  24. பாலா சொன்னது…

    ஏற்கனவே திமுக போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் எனவும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் திமுகவினர் எதிராக வேலை பார்ப்பார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது,
    // corractu...

    ReplyDelete
  25. தமிழ்வாசி - Prakash சொன்னது…
    // Thanks 4 coming..

    ReplyDelete
  26. !!!!!!தொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்?!!!!


    வாசகர்களை மதிக்காத பதிவர்களின் நிலை என்னவாகுமோ அதே நிலை தான்.

    ReplyDelete
  27. தமிழ் 007 சொன்னது…
    !!!!!!தொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்?!!!!

    வாசகர்களை மதிக்காத பதிவர்களின் நிலை என்னவாகுமோ அதே நிலை தான்.
    ரொம்ப ரொம்ப சரி

    ReplyDelete
  28. பதிவு அருமை..தினமணியா?..அப்புறம் ஒவ்வொரு பத்தி ஆரம்பிக்கும்போதும் போல்ட் லெட்டரில் ஆரம்பிக்கிறீர்கள்..அதனால் முந்தையதின் தொடர்ச்சியாகத் தோன்றவில்லை..தனித் தனி பிட்டோ என்று தோன்றுகிறது..ஒரே கட்டுரைக்கு அந்த போல்டு லெட்டர் அவசியமா வாத்யாரே..

    ReplyDelete
  29. வணக்கம் வாத்தியார் அய்யா!
    உள்ளேன் அய்யா!
    பட்டையை கிளப்புங்கள்...
    சூடு பறக்கட்டும்...

    ReplyDelete
  30. கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் தனியாக ஜெயிப்பது
    சாத்தியக் குறைவு

    ************************************

    நம்ம பக்கம் ஒரு தொடர் ஓடிச்சே.உங்களை ஆளையே காணோமே

    ReplyDelete
  31. நிச்சயம் அதன் தாக்கம் இருக்கும்....தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருக்க முடியாது....

    ReplyDelete
  32. Paavam congress thondargalaal earn panna mudiyaleye nnnu varutham..vera perusa sevai manapanmai ellam illa!!!!

    ReplyDelete
  33. தமிழ் 007 சொன்னது…

    !!!!!!தொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்?!!!!


    வாசகர்களை மதிக்காத பதிவர்களின் நிலை என்னவாகுமோ அதே நிலை தான்.
    // Thanks..

    ReplyDelete
  34. FOOD சொன்னது…

    தமிழ் 007 சொன்னது // thanks 4 coming.

    ReplyDelete
  35. செங்கோவி சொன்னது…

    பதிவு அருமை./// Thanks..

    ReplyDelete
  36. டக்கால்டி சொன்னது…

    வணக்கம் வாத்தியார் அய்யா!// Thanks..

    ReplyDelete
  37. raji சொன்னது…

    நம்ம பக்கம் ஒரு தொடர் ஓடிச்சே.உங்களை ஆளையே காணோமே..
    அப்படியா? இனி வருகிறேன்.

    ReplyDelete
  38. சௌந்தர் சொன்னது…

    நிச்சயம் அதன் தாக்கம் இருக்கும்....தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருக்க முடியாது....
    -- Thanks 4 coming first time.,

    ReplyDelete
  39. Kalpana Sareesh சொன்னது…

    Paavam congress thondargalaal earn panna mudiyaleye nnnu varutham..vera perusa sevai manapanmai ellam illa!!!!
    // Thanks..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"