Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/10/2011

நானும், கலைஞரும், பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியாக...ராமதாஸ்


 "நானும், கலைஞரும், பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியாக இருப்பது போல, தொண்டர்களும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

ரசுப் பள்ளிக்கூடங்கள், தரமற்ற கல்வியைத் தருகின்றன. ஏழை, பாமர மக்களின் பிள்ளைகளால், தரமானக் கல்வியை பெற முடியவில்லை. பின், மக்கள் எப்படி மகிழ்ச்சியோடு இருக்க முடியும். 

ரசு மருத்துவமனைகளில், தரமான சிகிச்சை தரப்படுவது இல்லை. சாதாரண இருமலுக்குக் கூட, தனியார் மருத்துவர்களிடம் சென்று, ஏழை மக்கள், நூற்றுக்கணக்கில் பணத்தை அழ வேண்டியிருக்கிறது. 

காமன்வெல்த் போட்டியில், 70 ஆயிரம் கோடி ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 1.76 லட்சம் கோடி ஊழல் என்று, ஊழலின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. நாட்டை குட்டிச் சுவராக்கும் இந்த ஊழல்களைப் பார்த்து, மக்கள் எப்படி மகிழ்ச்சியோடு வாழ முடியும். 

ண்மையான இந்திய குடிமகன் மனம் வாட்டம் அடையும், வருந்தும் சூழலே இந்தியாவில் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இந்த ஆண்டிலாவது, "விவசாயி தற்கொலை' என்ற செய்தி காதில் விழாமல் இருக்க, அரசு வழி செய்ய வேண்டும்.  நன்றி தினமலர்.

வெளிநாடுகளில் உள்ள, 70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தில் பாதியளவையாவது, இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வர வேண்டும். தமிழக மீனவர் யாரும், சிங்கள கடற்படையால் சுட்டு சாகடிக்கப்படக் கூடாது. மேலும், கடன் இல்லாத பட்ஜெட்டை, இந்திய நிதி அமைச்சர்  எப்போது தாக்கல் செய்வாரோ அப்போதுதான்  உண்மையான இந்திய குடிமகன் பெரு மகிழ்ச்சி அடைந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவான்.

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3 . முடிவெடுக்கக் கற்கலாமா?
                              4.  பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்
                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

31 comments:

  1. >>>
    அரசுப் பள்ளிக்கூடங்கள், தரமற்ற கல்வியைத் தருகின்றன. ஏழை, பாமர மக்களின் பிள்ளைகளால், தரமானக் கல்வியை பெற முடியவில்லை. பின், மக்கள் எப்படி மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

    கரெக்ட்..

    ReplyDelete
  2. நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா..என்ன வுடுங்க.. ஜூட்...கிளம்பிட்டானய்யா கிளம்பிட்டானய்யா...ஆங்..

    ReplyDelete
  3. //வெளிநாடுகளில் உள்ள, 70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தில் பாதியளவையாவது, இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வர வேண்டும். தமிழக மீனவர் யாரும், சிங்கள கடற்படையால் சுட்டு சாகடிக்கப்படக் கூடாது. மேலும், கடன் இல்லாத பட்ஜெட்டை, இந்திய நிதி அமைச்சர் எப்போது தாக்கல் செய்வாரோ அப்போதுதான் உண்மையான இந்திய குடிமகன் பெரு மகிழ்ச்சி அடைந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவான்

    சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  4. இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடலாமா ?

    ReplyDelete
  5. நல்லா கனவு காணறீங்க போல..:))

    ReplyDelete
  6. அரசியல் செய்திகள கேட்டாலே எரிச்சலா வருது நண்பா:-)

    ReplyDelete
  7. //"நானும், கலைஞரும், பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியாக இருப்பது போல, தொண்டர்களும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.//

    இவனுங்க ரெண்டு பேரும் இருக்கிற வரைக்கும் இது மட்டும் நடக்காது.

    ReplyDelete
  8. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க ப்ளாக்குக்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  9. ராமதாஸ் என்னிக்கி கியாகியான்னு கூவிகிட்டு ஓடிவருவாரோ

    ReplyDelete
  10. கடன் இல்லாத பட்ஜெட்டை, இந்திய நிதி அமைச்சர் எப்போது தாக்கல் செய்வாரோ அப்போதுதான் உண்மையான இந்திய குடிமகன் பெரு மகிழ்ச்சி அடைந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவான்.

    ReplyDelete
  11. சரியாக சொன்னீர்கள் வாத்தியாரே.......

    ReplyDelete
  12. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    முதல் மழை//

    அப்போ இதுக்கு முன்னாடி பெஞ்சது எல்லாம்....

    ReplyDelete
  13. இப்படி புலம்புவதே நமது அன்றாட வேலையாக போய் விட்டது. இதற்கு ஒரு விடிவே கிடையாதா?

    ReplyDelete
  14. இந்த கொடுமையெல்லாம் பார்க்கணும்கிறது நம்ம தலையெழுத்து.

    ReplyDelete
  15. கருணாநிதியோட பேரன், மகன், மத்திய அமைச்சராக இருக்கிறார்கள், மகள் எம்பி, இன்னொரு மகன் துணை முதலமைச்சர்,
    கூட்டணிக்கு அல்லாடிக்கொண்டிருந்த ராமதாசுக்கு, கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கப் போன இடத்தில் 31 சீட் கிடைத்தது, அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டு அப்புறம் மத்திய அமைச்சர் பதவி..இப்படி இருக்குபோது சந்தோசமா இல்லாம துக்கமா அனுஷ்டிக்க போறாங்க...அடபோங்க தோழரே..

    ReplyDelete
  16. அப்போ, அவரு சொல்றதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கறீங்களா? :-))
    ஆனால், கேள்விகள் நியாயமானவைதான்! நன்று!

    ReplyDelete
  17. கோடிகளில் புரள்கிற உங்களுக்கு ஏனப்பா கவலை. உங்கள் பேரன்களின் பிறப்பே தங்க கட்டிலில் தானே. இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
  18. "நானும், கலைஞரும், பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியாக இருப்பது போல, தொண்டர்களும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    ReplyDelete
  19. "நானும், கலைஞரும், பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியாக இருப்பது போல, தொண்டர்களும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    ஆமா இவரு சொல்லும் வரைக்கும் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்! இப்ப சொல்லிட்டாரு! இனி மகிழ்ச்சியா இருக்கிறேன்!

    ReplyDelete
  20. இப்போ ப்ளாக் ஓகே தானே? வாத்யாரே என்னாச்சு?

    ReplyDelete
  21. அப்படிப் போடு அருவாள... ஹீ...ஹீ...

    எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

    ReplyDelete
  22. நியாயமாத்தான் கேட்டிருக்கீங்க.....!

    ReplyDelete
  23. தேர்தல் முடியும்வரை தொப்பி தொப்பி என்ற அல்லக்கையை தடை செய்யமுடியாது கருணாநிதியின் அடிமை என்பதை நிரூபிக்கின்றார்

    ReplyDelete
  24. இத்தனையும் அரசியல்வாதிகளே செய்து விட்டு சந்தோஷமாக இருங்கள் என்று மக்களை பார்த்து கேட்டால், சந்தோஷம் எங்கிருந்து வரும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"