Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/23/2011

மனம் எனும் சாக்கடை...!


ற்றவர் மனதிற்குள் 
நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள்
நீ,
நுழைந்ததுண்டா ...?




ன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?


ன் மனம்
உன் அசிங்கங்களின்
குப்பை கூடையாக
இருக்கிறதல்லவா...?

ன் மனம்
உன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?

 
ன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்து
உன் கனவு என்ற
அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து,
இரசிக்கிறதல்லவா...?




ந்த
படத்தில் மட்டும் தான்
நீ,
ஒர் நடிகனாக இல்லாமல்
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா...?

ந்தப் படத்தை
பகிரங்கமாய்
உன்னால்வெளியிட முடியுமா...?

ன் மனம்
ஓர் பாற்கடல்
அதை கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல !!!
ஆலகால விஷமும்
வெளிப்படும்   என்பதை
நீ,
அறிவாய் அல்லவா...?
 ன் முகவரி
உன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது 
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?


ம்முடைய முகவரிகள் 
பொய்யானவை,
நம்முடைய முகங்கள் 
பொய்யானவை,

நாம் யாருமே
நம்முடைய
முகவரியில் இல்லை !?


தனால்
யாரும்,யாரையும்,
!!!!!! பார்க்க  முடிவதில்லை.....




முகம்,
ஓர் முகமூடி !!!???
ஓர் நாடக அரங்கம்...

நாம்
எல்லோரும்
அந்த அரங்கத்தில்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்.



 
ம்
முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???

 யாரும்  அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????


இது மீள்பதிவு..


முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!
 
 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

48 comments:

  1. உண்மை கசக்குது.

    செமய இருக்குது.

    ReplyDelete
  2. ”குப்பை கூளம் நிறைந்த மனதில்
    எப்படி வருவான் இறைவன்?”
    நன்று கருன்!

    ReplyDelete
  3. ஐ நல்லாயிருக்கே
    4 ஓட்டு போட்டுட்டு ஓடிட்டேன்

    ReplyDelete
  4. மனம் சாக்கடை அல்ல நண்பரே...! சங்கமம்...!! பலவித எண்ணங்களின் சங்கமம்..!! பலவித உணர்வுகளின் சங்கமம்.!!! பலவித முரண்பாடுகளின் சங்கமம்..!! நம் மனதை நல்லவிதமாக்குவதும், தீயவிதமாக்குவதும் நம் கையில் தான்..!! அதை தனியே பிரித்து அதை மட்டும் திட்டி நம்மை நியாபடுத்துவது தவறு..

    நம் மனதை நாம் வடிவமைப்போம் அழகாக.. அற்புதமாக...!!

    ReplyDelete
  5. //நாம் யாருமே
    நம்முடைய
    முகவரியில் இல்லை !?//

    அருமை...நண்பா!

    ReplyDelete
  6. //நம்
    முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
    அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???

    யாரும் அவரவர் நிலையில்
    இருக்க முடியுமா ???????//
    வேடங்கள் தரித்து திரியும் போதே துரத்துகின்றன சமூகப் பேய்கள்.

    ReplyDelete
  7. மாப்ள சூப்பரா சொல்லி இருக்கய்யா!

    ReplyDelete
  8. நல்லாருக்கு ,கருன்

    ReplyDelete
  9. மனதின் குறை நிறைகள் அழகிய கவிதையாக. அர்த்தமுள்ள கவிதை.

    ReplyDelete
  10. ஆரம்பத்தில் தேவதையும் சாத்தானுமாய் சேர்ந்திருக்கும் மனதை , நல்ல எண்ணங்கள் பதிய வைப்பதன் மூலம் தேவதையின் கோவிலாக்க முடியும். நம் மேல் நாம் கொள்ளும் உண்மையான நல்ல அபிப்ராயமே இதற்கு வினை ஊக்கி. அல்லாததை மறப்போம். கவிதையை இன்னும் கொஞ்சம் எழுதி சாக்கடை மனதை கோவிலாக்க உதவுங்கள். திரு.கருன்.

    ReplyDelete
  11. தமிழ் 007 சொன்னது…

    டன்...டனா...டன்... -- ஆகா..

    ReplyDelete
  12. தமிழ் 007 சொன்னது…

    உண்மை கசக்குது.

    செமய இருக்குது. -- அப்படியா?

    ReplyDelete
  13. சென்னை பித்தன் சொன்னது…

    ”குப்பை கூளம் நிறைந்த மனதில்
    எப்படி வருவான் இறைவன்?”
    நன்று கருன்! --- கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  14. Speed Master சொன்னது…

    ஐ நல்லாயிருக்கே
    4 ஓட்டு போட்டுட்டு ஓடிட்டேன் - போதுமே..

    ReplyDelete
  15. தேகா சொன்னது…

    நம் மனதை நாம் வடிவமைப்போம் அழகாக.. அற்புதமாக...!!-- கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  16. யோவ் சொன்னது…
    அருமை...நண்பா! - நன்றி..

    ReplyDelete
  17. Nagasubramanian சொன்னது…

    வேடங்கள் தரித்து திரியும் போதே துரத்துகின்றன சமூகப் பேய்கள். - நன்றி.

    ReplyDelete
  18. விக்கி உலகம் சொன்னது…

    மாப்ள சூப்பரா சொல்லி இருக்கய்யா! - 3 - வது ஷோ எப்படியிருக்கு..

    ReplyDelete
  19. shanmugavel சொன்னது…

    நல்லாருக்கு ,கருன் - Thanks..

    ReplyDelete
  20. அழகான கவிதை தோரணம்

    ReplyDelete
  21. முதல் கவிதை செம டாப்

    ReplyDelete
  22. தமிழ் உதயம் சொன்னது…

    மனதின் குறை நிறைகள் அழகிய கவிதையாக. அர்த்தமுள்ள கவிதை.
    ---- Thanks 4 ur comments..

    ReplyDelete
  23. சாகம்பரி சொன்னது…

    ஆரம்பத்தில் தேவதையும் சாத்தானுமாய் சேர்ந்திருக்கும் மனதை , நல்ல எண்ணங்கள் பதிய வைப்பதன் மூலம் தேவதையின் கோவிலாக்க முடியும். நம் மேல் நாம் கொள்ளும் உண்மையான நல்ல அபிப்ராயமே இதற்கு வினை ஊக்கி. அல்லாததை மறப்போம். கவிதையை இன்னும் கொஞ்சம் எழுதி சாக்கடை மனதை கோவிலாக்க உதவுங்கள். திரு.கருன்.
    --- இன்னொரு பதிவில் போடுகிறேன்..

    ReplyDelete
  24. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    அழகான கவிதை தோரணம் - அப்படியா?

    ReplyDelete
  25. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    முதல் கவிதை செம டாப் -- நண்பரே மன்னிக்கவும்.. இது ஒரே கவிதை..

    ReplyDelete
  26. //உன் மனதின்,
    இருண்ட அறைகளுக்கும்,
    அங்கே உலவும் பேய்களுக்கும்,
    நீ,
    பயந்ததுண்டா...?//

    ய்ம்மாடியோ......

    ReplyDelete
  27. //உன் மனம்
    உன் இரகசியமான ஆசைகளை
    ஒளித்து வைக்கும்
    அந்தரங்க அறையாக
    இருக்கிறதல்லவா...?//

    என்னய்யா இப்பிடி தோலை உரிகிறீங்க....

    ReplyDelete
  28. //உன் முகவரி
    உன் முகத்தில் இல்லை
    மனதில்தான் இருக்கிறது
    அதை யாருக்காவது
    தெரிவிக்கும் தைரியம்
    உனக்கு உன்டா...?//


    ஒரு முடிவோட வந்த மாதிரி இருக்கே....

    ReplyDelete
  29. //நம்
    முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
    அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???


    யாரும் அவரவர் நிலையில்
    இருக்க முடியுமா ???????//

    முடியவே முடியாது...
    ஆமா இத்தனை கேள்வியும் நம்ம ஆக்கங்கெட்ட அரசியல்'வியாதிகளை பார்த்து கேட்ட மாதிரி இருக்கே...

    ReplyDelete
  30. அர்த்தமுள்ள கவிதை.

    ReplyDelete
  31. Arumai Nanba...I am in Office..so commenting in english..sorry for that...

    ReplyDelete
  32. மனதின் நிறை, குறைகளை சுவாரசியமாகச்சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  33. குழந்தைப்பருவம் தாண்டவே முகமூடியும் தயாராகிவிடும்.அதன்பிறகு எப்போ கழற்ற நேரமும் மனமும்.ஒவ்வொரு வரிகளுமே அற்புதம்.வாழ்வில் அனுபவப்பட்ட கவிதையோ கருன்!

    ReplyDelete
  34. அருமையான பதிவு தோழரே.

    ReplyDelete
  35. ’நான்’ இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார் - ஓம்கார்..

    ReplyDelete
  36. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //உன் மனதின்,
    இருண்ட அறைகளுக்கும்,
    அங்கே உலவும் பேய்களுக்கும்,
    நீ,
    பயந்ததுண்டா...?//

    ய்ம்மாடியோ...... .... -- அப்படியா?

    ReplyDelete
  37. என்னய்யா இப்பிடி தோலை உரிகிறீங்க....-- என்ன பன்னலாம்..

    ReplyDelete
  38. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    ஒரு முடிவோட வந்த மாதிரி இருக்கே.... -- எந்த முடிவோட..

    ReplyDelete
  39. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    முடியவே முடியாது...
    ஆமா இத்தனை கேள்வியும் நம்ம ஆக்கங்கெட்ட அரசியல்'வியாதிகளை பார்த்து கேட்ட மாதிரி இருக்கே... --- அப்படியா?

    ReplyDelete
  40. r.v.saravanan சொன்னது…

    அர்த்தமுள்ள கவிதை. -- நன்றி..

    ReplyDelete
  41. டக்கால்டி சொன்னது…

    Arumai Nanba...I am in Office..so commenting in english..sorry for that... -- எதாவது சொல்லி எஸ்கேப் ஆயிடுங்க..

    ReplyDelete
  42. Lakshmi சொன்னது…

    மனதின் நிறை, குறைகளை சுவாரசியமாகச்சொல்லி இருக்கீங்க.
    ---- நன்றிம்மா..

    ReplyDelete
  43. Kalpana Sareesh சொன்னது…

    good one.. -- தொடர்ந்து வருவதற்கு நன்றி..

    ReplyDelete
  44. ஹேமா சொன்னது…

    குழந்தைப்பருவம் தாண்டவே முகமூடியும் தயாராகிவிடும்.அதன்பிறகு எப்போ கழற்ற நேரமும் மனமும்.ஒவ்வொரு வரிகளுமே அற்புதம்.வாழ்வில் அனுபவப்பட்ட கவிதையோ கருன்!
    -- இதுக்கு அனுபவம் வேனுமா என்ன?

    ReplyDelete
  45. sulthanonline சொன்னது…

    அருமையான பதிவு தோழரே. -- நன்றி..

    ReplyDelete
  46. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

    ’நான்’ இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார் - ஓம்கார்..
    ---நன்றி..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"