Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/07/2011

தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்....

 
மாணவர்களுக்குத் தேர்வுபயம் போனால்தான் அவர்கள் ஓரளவு நன்றாகத் தேர்வு எழுத முடியும். 

தேர்வுக்கு முதல்நாள் இரவு புதியதாக எதையும் படிப்பதோ, இரவு நீண்ட நேரம் படிப்பதோ கூடாது.எடுத்த குறிப்புகளை அன்று காலையில் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான முறை.

ரவில் நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு அமைதியான மனநிலையில் செல்வதுதான் அதிக மதிப்பெண் பெற உதவும்.தேர்வுக்கு சிறிது நேரத்துக்கு முன் உங்கள் நண்பர்கள், அதைப் படித்தாயா? இதைப் படித்தாயா? என்று உங்கள் பயத்தை அதிகப்படுத்த முயற்சிக்கலாம். அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அத்தகைய நண்பர்கள் பக்கமே போகாதீர்கள்.

தேர்வு அறையில் வினாத்தாள் வாங்குவதற்கு முன் 3 நிமிஷங்கள் "ரிலாக்ஸ்' செய்யுங்கள்.  மனத்தை உங்கள் மகிழ்ச்சியான அனுபவத்துக்கு இட்டுச் செல்லுங்கள்."என்னால் மிக நன்றாகத் தேர்வு எழுத முடியும். முழு நம்பிக்கை இருக்கிறது' என்று குறைந்தபட்சம் 5 முறையாவது உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இதற்காக 2 நிமிஷங்கள் செலவழிக்கலாம். 

கேள்வித்தாளை வாங்கிய உடன் 2 அல்லது 3 நிமிஷங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நிமிஷங்கள் ஒதுக்குவது எனத் திட்டமிடுங்கள்.குறைவாக எழுத வேண்டிய கேள்விகளுக்கு அதிகமாக எழுதியும் அதிகமாக எழுத வேண்டியவற்றுக்கு நேரம் இன்மையால் குறைவாகவும் எழுத வேண்டாம்.அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது முக்கியம்.முழுவதும் எழுதிய பிறகு குறைந்தது 5 நிமிடங்களாவது எழுதியதைப் படித்துப் பார்க்க நேரம் வைத்துக்கொள்ள வேண்டும்.

விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக எழுத வேண்டும்.எத்தனை வார்த்தைகளில் பதில் என்பதில் கட்டுப்பாடு அவசியம்.கையெழுத்தைப் பிறர் புரியும்படி எழுத வேண்டும்.கேள்வி எண், அதன் பகுதி எண் ஆகியவற்றைச் சரியாக எழுதுங்கள்.ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற வேண்டியது, ஒரு செயலைச் சரியான பதிலாகத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் வேகம் அவசியம். 

ன்கு தெரிந்த விடையை டக் டக் என்று தேர்வு செய்து எழுதுங்கள். தெளிவில்லாததைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை இரண்டு வண்ணப் பேனாக்களையாவது பயன்படுத்துங்கள்.

விடைகளில் அவசியமில்லாத வார்த்தைகள் உள்ளனவா? எங்கு கவனக்குறைவால் தவறு ஏற்படும்?  எந்தெந்த  பாயிண்ட்டுகளுக்கு அடிக்கோடு இடவேண்டும்? குறைந்த நேரத்தில் எவ்வளவு சுருக்கமாக விடையளிக்கலாம்? என்பது குறித்து ஆசிரியரிடம் அறிவுரையை  முன்பே கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
 
யமில்லாமலும், நமக்கு  அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும் என்கிற நம்பிக்கையோடும் தேர்வு எழுதுங்கள்.. வெற்றி  உங்களுக்கே...
வாழ்த்துக்களுடன்.....



முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2.  மனதை தொட்ட கவிதைகள்                                                                               3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 
4திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா
 

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

29 comments:

  1. மாணவர்களுக்கு பயன்படும் பதிவு.

    ReplyDelete
  2. வாத்யார்னா வாத்யார்தான்

    ReplyDelete
  3. தமிழ் உதயம் சொன்னது…

    மாணவர்களுக்கு பயன்படும் பதிவு.
    // வாங்க..வாங்க...

    ReplyDelete
  4. அரபுத்தமிழன் சொன்னது…

    வாத்யார்னா வாத்யார்தான்
    --- // Thanks..

    ReplyDelete
  5. மாணவர்களுக்கு உபயோகமான பதிவு

    ReplyDelete
  6. மைதீன் சொன்னது…

    மாணவர்களுக்கு உபயோகமான பதிவு
    -- வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  7. Speed Master சொன்னது…

    ஆசிரியர் --- ஆமாம்...

    ReplyDelete
  8. இந்த மாதிரி எனக்கு யாராவது அட்வைஸ் கொடுத்திருந்தா, நான் ஸ்டேட் லெவல்ல 1 ஆளா வந்திருப்பேன்.

    மாணவர்களே!

    சார் சொல்லுரதை கேட்டீங்கன்னா? சரித்திரத்துல இடம் உறுதி!

    ReplyDelete
  9. தமிழ் 007 சொன்னது…

    இந்த மாதிரி எனக்கு யாராவது அட்வைஸ் கொடுத்திருந்தா, நான் ஸ்டேட் லெவல்ல 1 ஆளா வந்திருப்பேன்.

    மாணவர்களே!

    சார் சொல்லுரதை கேட்டீங்கன்னா? சரித்திரத்துல இடம் உறுதி!
    // கேளுங்க மக்களே...Ha.ha.ha..

    ReplyDelete
  10. சரியான நேரத்தில் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஆசிரியரே :)

    ReplyDelete
  11. தேர்வு எழுத இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பாக வெற்றிப்பெற நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  12. சரியான நேரத்தில் மிக சரியான வழி காட்டுதல்.

    ReplyDelete
  13. இது பல்சுவை பதிவுகளின் சரணாலயம்...
    உண்மைதான். கலக்கிறீங்களே தலை

    ReplyDelete
  14. தேவையான நேரத்தில் தேவையான பதிவு....

    ReplyDelete
  15. மிக சிறப்பான பகிர்வுங்க.... மிக பயனுள்ளது.

    ReplyDelete
  16. மிக உபயோகமான பகிர்வு கருன்..:)

    ReplyDelete
  17. மாணவர்களுக்கு மிகவும் வழிகாட்டலாக இருக்கும்... மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  18. உங்கள் மாணவர்களுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. பயனுள்ள பதிவு....

    ReplyDelete
  20. மிகவும் உபயோகமான பதிவு.....
    வாத்தின்னா சும்மாவா....
    மாணவர்கள் மீது நல்ல அக்கறை வச்சிருக்கீங்க வாழ்த்துகள் மக்கா...

    ReplyDelete
  21. மாணவர்களுக்கு சிறந்த பதிவு அண்ணனின் பதிவை படித்து விட்டு பரிட்சை க்கு எழுதுங்கள் வெற்றி உங்களுக்கு உங்கள் தேர்வுக்குரிய பாடத்தையும் படித்துட்டு போங்க

    ReplyDelete
  22. அண்ணனின் பதிவை பார்த்திட்டு பரீட்சைக்கு போனால் வருக்காலத்தில் நீங்கள் கதை,திரைகதைவசனம்,கவிதை,டெல்லிக்கு கடிதம் எழுதும் திறமை பெற்ற ஒரு கருணாநிதியாகவோ இல்லைநாட்டை படத்துக்கு படம் பஞ்சு வசனம் பேசும் புலிப்பால் குடித்து வளர்ந்த டாக்டர் விஜய் போல இல்லை கதவை திற காற்று வரட்டும் எண்டு ரஞ்சிதாவிடம் சொன்ன , நெஞ்சை திற நெருப்பு வரட்டும் என்று நமீதாவிடம் சொல்ல நினைத்த நித்தியனந்தராகவோ வாரத்துக்கு வாய்ப்பு அதிகம் இருக்கு ..அண்ணா சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நீங்கள் கொடுத்த குறிப்புகளை பார்த்தால் நானும் மாணவனாகி விடலாமா என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  25. //அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

    சொல்லியாச்சி! இப்பம் போகலாம் தானே?!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"