Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/29/2011

அரசியல் வேண்டாம்ன்னா கேட்கறீங்களா?


சொந்த பந்தங்களை
முதலில் அனுப்பிவிட்டு...
ஒவ்வோரு பொருளாய்
வண்டியிலேற்றி...
காலியான வீட்டை
சுற்றும், முற்றும்
பார்க்கிறேன்...!

தேனும்
மறந்துவிட்டேனா
என்கிற தேடுதலோடு...!

முதல்முறையாக
பார்வையில் படுகிறது
இங்கு
வாழ்ந்தவர்களின்
காலடித் தடங்களும்
சுவாசக் காற்றும்
வீடெங்கும்
சுதந்திரமாய் அலைவதை...!

52 comments:

  1. அழகான கவிதையும் மண் பெயர்தலும்.

    ReplyDelete
  2. இன்னும் கிடைக்கல
    இதோ வந்தாச்சு

    ReplyDelete
  3. பெயர்தலின் வலி உணர்த்தும் கவிதையாய் பகிர்வு.... நன்றி!

    ReplyDelete
  4. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    வடை எனக்கே.. ---அப்படியா?

    ReplyDelete
  5. ராஜ நடராஜன் சொன்னது…

    அழகான கவிதையும் மண் பெயர்தலும்.- நன்றி..

    ReplyDelete
  6. Speed Master சொன்னது…

    இன்னும் கிடைக்கல
    இதோ வந்தாச்சு ------ சீக்கிரம் கிடைக்கும்..

    ReplyDelete
  7. விக்கி உலகம் சொன்னது…

    பெயர்தலின் வலி உணர்த்தும் கவிதையாய் பகிர்வு.... நன்றி! --- மாப்ள நேத்து லைன்ல வரவேயில்லையே...

    ReplyDelete
  8. //முதல்முறையாக
    பார்வையில் படுகிறது
    இங்கு
    வாழ்ந்தவர்களின்
    காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வீடெங்கும்
    சுதந்திரமாய் அலைவதை...!///

    அற்புதமான வரிகள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமையா இருக்கு கவிதை. இதை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அதன் வேதனை...

    ReplyDelete
  10. கவிதை பிரமாதம். ஆனால் அதற்கும் தலைப்பிற்கும் உண்டான ஒப்பீடு எனக்கு புரியவில்லை :(

    ReplyDelete
  11. வந்துட்டேன்.. படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  12. கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு .. ஆனா தலைப்பு புரியல...

    ReplyDelete
  13. Mathuran சொன்னது…

    அற்புதமான வரிகள்... வாழ்த்துக்கள் -- நன்றி..

    ReplyDelete
  14. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    அருமையா இருக்கு கவிதை. இதை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அதன் வேதனை... -- என்ன கமென்ட் சுனாமி ஒன்னோட போயிடுச்சி..

    ReplyDelete
  15. Nagasubramanian சொன்னது…

    கவிதை பிரமாதம். ஆனால் அதற்கும் தலைப்பிற்கும் உண்டான ஒப்பீடு எனக்கு புரியவில்லை--- பதிவுலகமே அரசியல்ல இருக்கு .. அது வேனாம்ன்னுதான் இந்த தலைப்பு..

    ReplyDelete
  16. கோமாளி செல்வா சொன்னது…

    வந்துட்டேன்.. படிச்சிட்டு வரேன் -- ரொம்ப நாள் கழிச்சு வர்ரிங்க வாங்க..

    ReplyDelete
  17. கோமாளி செல்வா சொன்னது…

    கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு .. ஆனா தலைப்பு புரியல...---- அரசியல் வேண்டாம் . கவிதை படியுங்கள் என்று அர்த்தம்..

    ReplyDelete
  18. தலைப்புக்கும் , கவிதைக்கும் என்ன தொடர்பு ?!

    ReplyDelete
  19. வீட்டிற்கும் உயிர், சுவாசம், நினைவுகள் உண்டு. அது அடுத்த தலைமுறைக்கும் சொல்லும். தேர்தல் முடிந்தபின் இது போன்ற அருமையான பதிவுகள் கிடைக்கும் போல். நன்றி.

    ReplyDelete
  20. நறுக்கு தெறித்த கவிதை. நன்றாய் சொல்லியுள்ளீர்கள், இடம் பெயர்தலின் வலியை.

    ReplyDelete
  21. சிறுவர்களைக் கவனித்திருக்கிறீர்களா?வீட்டைக் காலி செய்து போன பின்னும் அங்கே சுற்றிக் கொண்டே இருப்பார்கள்!பெரியவர்கள்?மனம் சுற்றிக் கொண்டிருக்கும்!
    நல்ல கவிதை கருன்!

    ReplyDelete
  22. ஜெ.செல்வராஜ் சொன்னது…

    தலைப்புக்கும் , கவிதைக்கும் என்ன தொடர்பு ?! - இல்லை..

    ReplyDelete
  23. Kalpana Sareesh சொன்னது…

    Oh tats a cute poem.. -- Thanks ..

    ReplyDelete
  24. சாகம்பரி சொன்னது…

    வீட்டிற்கும் உயிர், சுவாசம், நினைவுகள் உண்டு. அது அடுத்த தலைமுறைக்கும் சொல்லும். தேர்தல் முடிந்தபின் இது போன்ற அருமையான பதிவுகள் கிடைக்கும் போல். நன்றி. --கன்டிப்பா..

    ReplyDelete
  25. FOOD சொன்னது…

    நறுக்கு தெறித்த கவிதை. நன்றாய் சொல்லியுள்ளீர்கள், இடம் பெயர்தலின் வலியை. --- நன்றி...

    ReplyDelete
  26. சென்னை பித்தன் சொன்னது…

    சிறுவர்களைக் கவனித்திருக்கிறீர்களா?வீட்டைக் காலி செய்து போன பின்னும் அங்கே சுற்றிக் கொண்டே இருப்பார்கள்!பெரியவர்கள்?மனம் சுற்றிக் கொண்டிருக்கும்!
    நல்ல கவிதை கருன்!---- நன்றி தோழரே..

    ReplyDelete
  27. அஞ்சா சிங்கம் சொன்னது…

    நல்ல கவிதை .............. --Thanks..

    ReplyDelete
  28. கவிதை பிரமாதம்.

    ReplyDelete
  29. >>>இங்கு
    வாழ்ந்தவர்களின்
    காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வீடெங்கும்
    சுதந்திரமாய் அலைவதை...!


    டச்சிங்க்

    ReplyDelete
  30. முதல்முறையாக
    பார்வையில் படுகிறது
    இங்கு
    வாழ்ந்தவர்களின்
    காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வீடெங்கும்
    சுதந்திரமாய் அலைவதை...!கவிதை பிரமாதம்.

    ReplyDelete
  31. காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வலியும் வேதனையும் மனச்சுமையும் கவிதையாய்.

    ReplyDelete
  32. இடம்பெயர்தலின் வலியை உணரவைத்தந்த நச்சென்ற வரிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. அருமையான கவிதைக்கு அரசியல் தலைப்பா?

    ReplyDelete
  34. //வாழ்ந்தவர்களின்
    காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வீடெங்கும்
    சுதந்திரமாய் அலைவதை.//

    நான் உணர்ந்து இருக்கிறேன், அப்பாவிற்கு ஊர் ஊராய் மாற்றும் போது.

    அருமையான கவிதை.

    ReplyDelete
  35. உண்மை. வீடென்பதும் உறவு போல் ப்ரிய முடியாததாய்.

    ReplyDelete
  36. அரசியல் பரபரபிற்கிடையே மனதை தொட்ட கவிதை

    ReplyDelete
  37. பதிவர்களைத்தான் திட்டுறீங்களொன்னு நினைச்சேன்

    ReplyDelete
  38. மிகச்சிறந்த கவிதை... உங்கள் படைப்பில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் நல்ல கவிதைகளை மேலும் செப்பனிடுவது தவறாகாது தயவு செய்து தலைப்பை மாற்றி பொருத்தமான தலைப்பு வைக்கவும்.

    //பார்வையில் படுகிறது
    ... .... ... ...
    ... .... ... ...
    -சுதந்திரமாய் அலைவதை// என்பது

    'பார்வையில் படுகிறது
    ... ... .. ... ...
    ... ... .. ... ...
    -சுதந்திரமாய் அலைவது'

    என்று வர வேண்டும் அல்லது

    'பார்க்க முடிகிறது
    ... ... .. ... ...
    ... ... .. ... ...
    -சுதந்திரமாய் அலைவதை'

    என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன். எப்படியாகிலும் கவிதை அருமை பதிவுலகம் தாண்டியும் பேசப்படுகிற வாய்ப்புள்ள கவிதை இடம்பெயர்தலில் வலியும் அது தனக்கே நிகழ்கிற போதுதான் அதனை உணர முடியும் என்கிற கருத்தும் மிக மிக அருமை!

    ReplyDelete
  39. அரசுகுடியிருபில் ஒவ்வொரு வீடாக மாறுகையில் பழைய வீட்டையும் அருகிலுள்ள நண்பர்களையும் பிரிந்து செல்லும் வேதனையும் வலியும் கொடுமையானது. புது இடம் பழகும்வரை பழையவீட்டின் நினைவுகளுடன் மனம் பாரமாய் வளைய வருவது கொடுமையிலும் கொடுமையான அனுபவம் .குறைந்தது 2 அல்லது 3 மாதங்களுக்காவது பழைய வீட்டின் பக்கமாய் தினமும் சென்று நண்பர்களுடன் அரட்டையடித்து சோகத்தை ஆத்திகுவோம். ஹும் ஹும் அதெல்லாம் ஒரு காலம்...... ......

    ReplyDelete
  40. அரசுகுடியிருபில் ஒவ்வொரு வீடாக மாறுகையில் பழைய வீட்டையும் அருகிலுள்ள நண்பர்களையும் பிரிந்து செல்லும் வேதனையும் வலியும் கொடுமையானது. புது இடம் பழகும்வரை பழையவீட்டின் நினைவுகளுடன் மனம் பாரமாய் வளைய வருவது கொடுமையிலும் கொடுமையான அனுபவம் .குறைந்தது 2 அல்லது 3 மாதங்களுக்காவது பழைய வீட்டின் பக்கமாய் தினமும் சென்று நண்பர்களுடன் அரட்டையடித்து சோகத்தை ஆத்திகுவோம். ஹும் ஹும் அதெல்லாம் ஒரு காலம்...... ......திரும்ப கொஞ்ச நேரத்துக்கு மலரும் நினைவுகளை தநததுக்கு நன்றிகள் சகோதரரே.

    ReplyDelete
  41. முதல்முறையாக
    பார்வையில் படுகிறது
    இங்கு
    வாழ்ந்தவர்களின்
    காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வீடெங்கும்
    சுதந்திரமாய் அலைவதை...!


    ....very touching lines!

    ReplyDelete
  42. கவிதையை ரசித்தேன்!

    ReplyDelete
  43. இடம் பெயர்தலின் வலியினை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    //இங்கு
    வாழ்ந்தவர்களின்
    காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வீடெங்கும்
    சுதந்திரமாய் அலைவதை...!//

    இவ் வரிகளின் கவிதையின் டாப்பு..

    கவிதைக்கும் தலைப்பிற்கும் தொடர்புகள் ஏதுமே இல்லை. தலைப்பை மாற்றினால் கவிதை இன்னும் நிறையக் கருத்துக்களைச் சுட்டி நிற்கும்.

    ReplyDelete
  44. கவிதையைவிட தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. கவிதையும் அருமை... வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  45. //முதல்முறையாக
    பார்வையில் படுகிறது
    இங்கு
    வாழ்ந்தவர்களின்
    காலடித் தடங்களும்
    சுவாசக் காற்றும்
    வீடெங்கும்
    சுதந்திரமாய் அலைவதை//

    இதயத்தை தொட்ட வரிகள் அண்ணே!!!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"